"செக்ஸ்” அறிவியல் கண்னோட்டம். பகுதி - 2



செக்ஸ் -இல் என்ன நடக்கிறது?

ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாகப் படுத்து உடலுறவு கொள்வதுதான் செக்ஸ் என்பதா?

வாழ்க்கை நீரோடையில் நுனிப்புல் மேய்பவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் நேரம் ஒன்றாகப் படுத்து, தத்தம் உறுப்பை பயன்படுத்திக்கொள்வது செக்ஸ்- ஆக இருக்கலாம்.

ஆனால், என் பார்வையில் அதுவல்ல. செக்ஸ் என்பது மிகவும் ஆழமானது.

செக்ஸ் என்பது ஆண் உறுப்பிலோ பெண் உறுப்பிலோ இல்லை. அவை செக்ஸ்-கு மிக-மிக முக்கியம்தான். ஆனால், செக்ஸ் என்பது உறுப்பைத் தாண்டி நிற்கிறது.

ஒரு பெரிய ஆறு முழுக்க நீர் நிரம்பி ஓடுகிறது என்று எண்ணிக்கொள்வோம். அந்நீர் ஓட்டத்துக்கு இடையில் ஒரு அணை கட்டினால், என்னவாகும்? ஆற்று நீர், அந்த அணையின் நடுவில் உள்ள சிறு இடைவெளியில் மிக வேகமாக வெளிப்படும்.

ஆற்றில் நீர் நிறைந்து இருப்பது போல, செக்ஸ்-இல் காம உணர்வு எங்கும் வியாபித்துள்ளது. ஆற்றின் அணையின் இடைவெளியில் நீர் வேகமாக வெளிப்படுவது போல, செக்ஸ் உணர்வு, ஆண்,பெண் உறுப்பில் வெளிப்படுகிறது.
ஆனால், அது மட்டும் செக்ஸ் ஆகாது. அதற்கு பின்னால், செக்ஸ் உணர்வு மிகப் பெரிய சக்தியாக, உணர்வாக மறைந்து இருக்கிறது.

அதைப் புரிந்து, கண்டுணர்ந்துக் கொண்டால், சிற்றின்பத்தில் பேரின்பம் புலப்படும். அதை அனுபவிக்க நம் ஆண், பெண் உறுப்பைப் பயன்படுத்தலாம்.

மற்றொரு உவமை.

ஒரு மேஜை முழுகக இனிப்பு கொட்டி வைத்து, ஒரு எறும்பை அதில் விட்டால், அந்த எறும்பின் உணர்வு எப்படி இருக்கும்? எப்படி அவ்வளவு இனிப்பையும் அது அனுபவிக்கும்?

அது போல, செக்ஸ்-இன் மிகப் பெரிய அளவை கண்டு, புரிந்தவுடன் அதை முழுதும் அனுபவிக்க இந்த உடல் போதாது; இந்த பிறவி போதாது என்று தெளிவாகிறது.

அனுபவிக்க-அனுபவிக்க, இன்னும் தொடப்படாத பகுதி இருந்துக் கொண்டே இருக்கிறது.

உண்மையில், அது மிகப் பெரியதாக இருந்து, ஒரு சிறு பகுதியை மட்டும் அனுபவிக்கிறோமா அல்லது ...

அறிவியலாளர் சொல்வது போல், பிரபஞ்சம், நாம் உடுருவ-உடுருவ அது ஒரு முடிந்த நிலையில் இல்லாமல், மேலும் விரிந்துக் கொண்டே, மேலும் புது-புது வியாபித்தலுடன் வளர்ந்து கொண்டே செல்வதைப் போல,

செக்ஸ் உணர்வு, நாம் அதன் எல்லைகுட்பட்ட பகுதியில் நுழைந்தவுடன், அது மேலும் விரிந்து நம் கைக்கு முடிந்த முடிவாக சிக்காமல் மேலும் வியாபிக்கிறதோ? விளங்க வில்லை, ஆனால் புரிகிறது, போதும் என்று.

2 comments

ராஜாகனி mod

அன்புள்ள பதிவருக்கு உங்கள் கட்டுரஈகள் பயன் உள்ளவைதான்...ஆனால் திருஷ்டி பரிகாரம் போல இந்த கட்டுரை உள்ளது..கற்பு கெட்ட வார்த்தை அல்ல .
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போம் என்று சொன்னான் பாரதி ..அதுதான் சரியான கருத்து. ஆனால் நீங்கள் கூறுவது போல யாரும் யாருடனும் படுக்கலாம் என்பது நாகரிக சமுகம் ஒப்பு கொள்ள முடியாது.

உங்களின் இது மாதிரியான கருத்துக்கள் உங்களை பற்றி தவறான புரிதலைதான் ஏற்படுத்து கிறது ...

வருத்தமுடன் உங்கள் சகோதரன்

ராஜகனி

Reply

உங்கள் கருத்துக்கள் சரியாக தான் உள்ளது. இக்கட்டுரையானது எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்க பெற்றது. எனவே மேற்கொண்டு இதன் பகுதிகளை நான் வெளியிடவில்லை. நன்றி ராஜாகனி

Reply