“செக்ஸ்“ அறிவியல் கண்ணோட்டம்....!! Sex and Science Overview


செக்ஸ் ...

சொல்வதற்கே அசிங்கமானதாக கருதப்படும் ஒரு சொல்.

ஆனால், அதை அசிங்கம் என்பவர்கள் அதிலேயே உழன்று, அதை விடவும் முடியாமல், முழுமையாக அனுபவிக்கவும் முடியாமல், எதோ ஆசை வந்தது, படுத்தோம், செய்தோம், ஓய்ந்தோம் என்று ஒரு வேஷத்தனமான வாழ்க்கை வாழ்ந்து வாருவதைப் பார்க்கலாம்.

ஏன் இந்த நடிப்பு? ஏன் இந்த வேஷம்?

இந்தத தொடர் இடுகையில் செக்ஸ் பற்றி சற்று அலசுவோம்.

மேலோட்டமாகப் பார்த்தால், ஆணும் பெண்ணும் செய்வது செக்ஸ் போலத் தோன்றும். ஆனால் அது சரியான கூற்று அல்ல என்பது என் கருத்து.

ஆண்மையும் பெண்மையும் இணைவதே செக்ஸ் என்று தெரிகிறது.

முதலில் ஒரு விஷயம் தெளிவாக வேண்டும்.

ஆண்மை என்றால் ஆண் என்றும் பெண்மை என்றால் பெண் என்றும் நினைப்பது பொருந்தாது.

ஆண் பெண் உடல் சார்ந்தது. ஆண் உறுப்பு , பெண் உறுப்பு கண்ணுக்குத் தெரிவது.

ஆண்மை, பெண்மை என்பது கண்ணுக்குத் தெரியாதது. அது உணர்வு சார்ந்தது.

இவ்வகை உணர்வு இரு வகை உண்டு.

முதல் உணர்வு, செயலை செய்வது. அச்செயலால், அனுபவத்தை தேடுவது.

செய்யும் செயலால் அனுபவத்தைக் கண்டு, அவ்வனுபவத்தை அனுபவிப்பது ஆண்மை.

மற்றொரு உணர்வு, செய்யப்படுவது. தான் செய்யப்படும் செயலால், அனுபவிக்கப்படும் அச்செயலால், தான் அனுபவிக்கப்படுவதை அனுபவிக்கும் உணர்வு பெண்மை.

இவ்விரு உணர்வுகளுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தொடர்பில்லை.

ஆண்மை, ஆணுக்கும் உண்டு, பெண்ணுக்கும் உண்டு. அதே போல், பெண்மை ஆணுக்கும் உண்டு, பெண்ணுக்கும் உண்டு. ஆனால், அதன் வெளிப்பாடுதான் வேறுபாடு.

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம், செக்ஸ் செய்யும் பொழுது, அச்சமயத்தில் அவனிடம் ஆண்மை வெளிப்பட்டு பெண்ணிடம் பெண்மை வெளிப்பட்டால், அவன் அனுபவிப்பான். பெண் அனுபவிக்கப்படுவாள்.

அச்சமயத்தில் அவனிடம் பெண்மை வெளிப்பட்டு, பெண்ணிடம் ஆண்மை வெளிப்பட்டால், அவன் அனுபவிக்கப் படுவான். பெண் அனுபவிப்பாள்.

இவையிரண்டும் இப்படி வெளிப்பட்டால், அதுதான் சிற்றின்பத்தில் பேரின்பம். மலரினும் மென்மையானது காமம் என்பதை இதில் அனுபவிக்கலாம்.

மாறாக, ஆணிடமும் பெண்ணிடமும் ஆண்மை ஒரே சமயத்தில் வெளிப்பட்டால் என்னவாகும்?

இரண்டு ஆண் சிங்கங்கள் மோதிக்கொண்டால் என்னவாகும், அது போலத்தான்.

இறுதியில், ஒரு உணர்வு மற்றொரு உணர்வை வீழ்த்த, மிகக் கொடூரமாக நடந்துக் கொள்ளும். எப்படியும் ஒரு பக்க ஆண்மை விட்டுக்கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால், ஒருவரிடம் வெளிப்படும் ஆண்மை, தன துணையைக் கொன்று விடவும் வாய்ப்புண்டு.

அதற்கு மாறாக, இரு பக்கமும் பெண்மை வெளிப்பட்டால் என்னவாகும்? ஒன்றும் நடக்காது. அனுபவிக்க யாரும் இல்லையென்றால், அனுபவிக்கப்படும் பொருள் அர்த்தமிழந்துவிடும். அங்கு செக்ஸ் உறவு ஏற்படாது.

அடுத்து, யாரிடம் எந்த உணர்வு வெளிப்படுகிறது என்று எப்படி கண்டு பிடிப்பது?

மிக சுலபமான ஒரு வழி.

செக்ஸ் செய்யும் பொழுது ஆதிக்கம் யாரிடம் இருக்கிறது என்று பார்த்தால் போதும்.

பெண் கீழே படுத்து தன்னை இழந்து கொன்டிருந்தால், தான் அனுபவிக்கப்படுவதை அனுபவித்துக்கொண்டிருந்தால், அவளிடம் பெண்மை வெளிப்படுகிறது. ஆணிடம் ஆண்மை வெளிப்படுகிறது.

மாறாக, ஆண் கீழே படுத்து, பெண் மேலே அமர்ந்து செக்ஸ் செய்தால், அவள் ஆதிக்கம் செலுத்துகிறாள். அவளிடம் ஆண்மை வெளிப்படுகிறது. கீழே உள்ள ஆணிடம் பெண்மை வெளிப்படுகிறது.

இங்கு, பெண்ணிடம் வெளிப்படும் ஆண்மை அனுபவிக்கிறது. ஆணிடம் வெளிப்படும் பெண்மை அனுபவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், அனுபவிப்பது ஆண்மை; அனுபவிக்கப்படுவது பெண்மை. இதில் மாற்றமில்லை. அதுதான் இயற்கையின் நியதி போல் தெரிகிறது.

ஆண்-ஆண் செக்ஸ் உறவில் ஒரு ஆணிடம் பெண்மை வெளிப்படுவதும், பெண்-பெண் செக்ஸ் உறவில் ஒரு பெண்ணிடம் ஆண்மை வெளிப்படுவதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதே!

சுருங்க சொல்லின், அனுபவிப்பது ஆண்மையாகவும், அனுபவிக்கபடுவது பென்மையாகவும் இருக்கும், இந்த இயற்கை விளையாட்டில், உடல் அளவில் ஆண், பெண் முக்கியமில்லாது போய்விட்டதை இன்று நாம் பார்க்கலாம்.

இயற்கைத் தன் தேவையை எப்படியும் பூர்த்தி செய்துகொள்ளும்.

மிகவும் இயற்கையாக, ஆண் மூலம் ஆண்மையும், பெண் மூலம் பெண்மையும் வெளிப்பட நாம் தடை செய்யக்கூடாது. பல மடத்தனமான கட்டுப்பாடுகளைப் போட்டு, ஆண் பெண் உறவை அடக்கி வைத்தால்...

இயற்கை வேறு வழியில் தன் தேவையைப் பூர்த்தி செய்துக்கொள்ளும். ஆனால், அந்த வேறு வழி வேறு மாறாகத்தான் இருக்கும்.

ஆண் பெண்ணிடம் இணைவதை பிரித்து வைத்தால், பெண்மை என்ன செய்யும்? அது ஆணிடம் புகுந்து விடும். ஆண்-ஆண் (கேய்) உறவுபிறக்கிறது.

பெண் ஆணிடம் இணைவதை தடுத்து வைத்தால், ஆண்மை என்ன செய்யும்? அதுபெண்ணிடம் புகுந்து விடும். பெண்-பெண் (லெஸ்பியன்) உறவு பிறக்கிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? ஆண் பெண்ணிடம் பழகுவதையும், பெண் ஆணிடம் பழகுவதையும் கண்டிக்கும் உங்களது சமுதாய ஒழுக்க விதி முறைகள்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இயற்கையானதை நாம் மறுக்கும் பொழுது, அவ்வியற்கை அசிங்கமானதாக வெளிப்படுகிறது.

அதனால்தான், இன்று ஆண்-பெண் உறவுக்கு சமமாக ஆண்-ஆண் உறவும் பெண்-பெண் உறவும் பெருகி விட்டது.

தொடரும்...