திக்குவாய் என்பது ஒருவகையான நோயா?


திக்குவாய் என்பது இன்று உலகம்தழுவிய ஒரு மருத்துவப் பிரச்னையா?
திக்குவாய் என்பது இன்றைய நா ளில், செல்வந்த நாடுகள், ஏழை நாடு கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலக நாடுகள் த ழுவிய பொதுவான மருத்துவப் பிரச்னையாகும். டாக்டர் வில்லியம் என்ற ஆய்வு வல்லுநர் கணக்குப்படி, அமெரிக்காவில்  மட் டும் சுமார் 2 மில்லியன் ஆடவர்கள் திக்குவாய்க்கு ஆளாகின்றார்கள். திக் கு வாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ் த்திய  ஆய்வு வல்லுநர்கள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது ஒரு விழுக் காட்டினர் திக்குவாய்க்கு ஆளாகின்றார்கள் என கணக்கிட்டுள்ளா ர்கள். எனவே திக்குவாய் என்பது இன்றைய நாளில் உலகம் தழு விய ஒரு மருத்துவ பிரச்னை மட்டுமல்ல, சமு தாய பிரச்னையும் கூட.
திக்குவாய் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை, கவலை கொள் ளத்தக்க ஒரு மருத்துவ பிரச்னையா?
அண்மையில் எடுத்த புள்ளி விவரம் ஒன்று நம் நாட்டில் மட்டும் சுமார் 8,50,00,000 திக்குவாய ர்கள்  இருப்பதாகக் கூறுகி ன்றது. உலக நாடுகளில் மிகவும் அதிகமான திக்கு வாயர்களைக் கொண்ட நாடு என்ற அவலநிலை கொ ண்டதாகும். திக்குவா ய்  என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை, செல்வந்தர்கள், வறி யவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் பற்றும்  பொதுவான நோயாகும். நம்நாட்டைப் பொறுத்தவரை திக்குவா யை மருத்துவ ரீதியாக நலப்படுத்தக் கூடிய, சிறப்பு பயிற்சி பெற்ற  மருத்துவர் களும், இத்தகைய துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற தொழில் நுட்ப வல்லுநர்களும் மிகவும் குறைவான அளவில்  உள் ளனர். இத்தகைய எண்ணிக்கையா னது நமது தேவையை ஈடு கட்டும் அளவிற்கு போதுமான அளவில் இல்லை. மேலும்  இவர் கள் நம் நா ட்டிலுள்ள நகர்ப்புறங்களில் மட்டு ம் உள்ளனர். எனவே, நம் நாட்டி லுள்ள திக்குவாயிற்கு ஆளானவர் கள்  அனைவருக்கும் தேவையான மருத்துவப் பயிற்சியை அளிப்பது என்பது கனவிலும், எண்ணிப்பா ர்க்க இயலாத ஒன்றாகும்.
திக்குவாய் என்றால் என்ன?
உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாக வும் சொல் ல இயலாது,  ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப் படுத்த இயலாது போராடும் அவல நிலை யை நாம் திக்குவாய் என்று கூறுவது ண்டு. திக்கு வாயை ஆங்கிலத்தில் STAMMERING அல்லது SHUTTERING  என்று கூறுவதுண் டு.
தன்னுடைய எண்ணத்தை சொற்களால் வடித்து, தங்கு தடையி ன்றி, தெளிவாகவும், சொல்ல இயலாமல் ஒரு குழந்தையோ  அல்லது ஒரு ஆடவரோ போராடும் அவலநிலைதான் திக்குவாயா கும். தனி மனிதனின் தகவல் தொடர்பு முறையால்  அடிக்கடி ஏற் படும் தட்டுத் தடங்கல்கள் என்று பொதுவாகக் கூறுவதுண்டு (It is a Communication Disorder). உலக சுகாதார அமைப்பானது (WHO)  திக்குவாயை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றது. ‘‘பேசும்  சொற்களின் எண்ணிக்கையோ அல்லது சீர் நிலையோ பாதிக்கப்ப டுவதால் சொற்களின் கோர்வை பாதி க்கப்படும் நிலையை  திக்குவாய் என் று கூறலாம்.’’
பொதுவாக திக்குவாய் எந்த வயதில் தோன்றும்?
குழந்தைகள் பேசக் கற்கும் காலத்தை பொதுவாக மருத்துவர்கள் 2 முதல் 5 வயது வரை என கணித் துள்ளார்கள். இந்த கால  கட்டத்தில் தான் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு திக்குவாய் முதன் முத லாக தோன்றுவது வழக்கமாகும். சில  சமயங்களில் மிகவும் அபூர்வமாக, இளமைப் பருவ காலத்தில் கூட திக்குவாய் ஏற்படக் கூடும்.
பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிக அளவில் திக்குவாயிற்கு ஆளாவதற்கு அடிப்படைக் காரணங்கள் எ ன்ன?
5 ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண் குழந்தை என்ற விகிதத்தில் திக்கு வாயானது குழந்தைகளைப்பற்றுகி ன்றது. இதற்கு பல்வகையான கார ணங்கள் உள்ளன. திக்குவாய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் தன்மை கொண்ட மாறுபட்ட  நிலை யாகும். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட முன்னதாகவும், விரைவாகவும் பேசும் திறன் இயற்கையாக  பெற்றுள்ளன. மேலும் பெண் குழந்தைகள் இயல் பாக அடிக்கடி, பேசும் ஆற்றலை இயற்கையாக பெற்றுள்ளன. இதன் வி¬ ளவாக, மிகவும் இளம் வயதிற்கு, பெண் குழந்தைகள் இயற்கை யாக சரளமாக பேசும் ஆற்றலை பெறு கின்றார்கள். இதன்  விளை வாக, பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப்போல் அதிக அளவுதிக்குவாயிற்கு ஆளாகுவ தில்லை.
ஆண் குழந்தைகள் அதிக அளவு திக்கு வாயிற்கு  ஆளாகுவதற்கு அடிப்படை க் காரணங்கள், அவர்களின் பெற்றோ ர்களின்,  பேராசையும், அறியாமை யும்தான் அடிப்படைக் காரணங்களா கும். பல்வகையான போட்டிகள் நிறை ந்த இன்றைய சூழலில்  தங்களுடைய குழந்தைகள் குறிப்பாக, ஆண் குழந் தைகள், அவர்களின் இய ற்கையான மூளைத்திறன், ஆர்வம் இவற்றை  கணக்கிடாமல் தங்களு டைய பேராசையின் காரணமாக, கல்வி யில் முதலாவதாக வரவேண்டும் என்ற பேராசையின்  கார ணமாக, குழந்தைப் பருவ த்தில், ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் கல்வி என்ற பெயரில் பல்வகையான சுமைகளை  குழந்தைகள் சுமக்க இயலாத அளவிற்கு ‘‘குருவி தலையில் பனங் காய்’’ என்ற கோட்பாட்டில், குழந்தைகளை பல்வகையான  மன இறுக்கத்திற்கு ஆளாக்கு கின்றார்கள். பெண் குழந்தைக ளைவிட ஆண் குழந்தைகள் அதிக அளவு பல்வகையான மன  இறுக்கத்திற்கு ஆளாக் கப்படுவது முதன்மையான காரண மாகும்.
நாம் எவ்வாறு சரளமாகவும் தெளிவாகவும் பேசுகின்றோம்?
திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது என்ற கேள் விக்கு நாம் பதில் தெரி ந்து கொள்ள வேண்டு மென்றால், நாம் எவ்வாறு  கோர்வையாகவு ம், சரளமாகவும் தெளிவாகவும், தங்கு தடை யின்றி பேச முடி யும் என்பது பற்றி சில உண்மைகளைத் தெரிந்து  கொள்வது மிக வும் அவசியமாகும்.
பேசும் கலையென்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த இனிய சிறப்பு மிக்க பரிசாகும். நாம் பேச வேண்டுமென்றால்  அந்த எண்ண மானது முதலில் மூளையில் உதிக்கின்றது. நாம் என்ன பேசப் போகின்றோம் என்றபடி மூளை முடிவு செய்து  அதற்குத் தேவையான சொற்களை நாம் மூளையின் நினை வு வங்கியில் (MEMORY BANK) ல் இருந்து தேர்ந்தெடுத்துக்  கொள்கின்றோம். இதன் பின்னர் நமது உடலிலுள்ள பேசும் உறு ப்புகள் (Organ of Voice) செயல்படத்  தொட ங்குகின்றன.
நாம் உள்மூச்சு, வெளி மூச்சு விடும் பொ ழுது, வெளிவரும் காற் றானது, தொண் டைப் பகுதிகளிலுள்ள ‘‘குரல் நாண்க ளுக்குள்  (VOCAL CORDS)  சென்று குரல் அதிரச் செய்து ஒலி எழுப் புகின்றன. இந்த ஒலி அலைகளாவது மேற்புறமாக  வாய்ப்பகுதிக்கு செல்லும் பொழுது, உதடுகள், நாக்கு, அன்னம், வாய் இவற்றின் ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த இயக்கங்களின்  காரணமாக, ஒலி அலையானது சொற்களாக மாற்றப்பட்டு, சொற்றொடர்களாக தெளி வாகவும், சரள மாகவும் உதடுகளிலிருந்து  வெளி வருகின் றன. எனவே நாம் தெளிவாகவும், சரளமாகவும் பேச வேண்டு மென் றால், மூளையிலுள்ள பல் வகை யான நரம்பு  அமைப்புக்கான செய ல்பாடுகள் மட்டு மல்லாமல் உட லிலுள்ள பேச்சு உறுப்புக் களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சேர  செயல்படுவது மிகவும் அவ சியமாகும்.
திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது?
திக்குவாய் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விடை காண ஆயிர க்கணக்கான மருத்துவ கட்டுரைகளும், நூற்றுக்கணக்கான  நூல்கள் வெளிவந்தாலும், இன்றும் இதுவரை யாராலும் திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு முழுமையாக  உடலியல், உளவியல், நோய் இயல் அடிப்படையில் முழு மையான விளக்கத்தை அளிக்க இயல வில்லை. இருந்தாலும்  இதற்கெ ல்லாம் பல் வகை யான பதில்கள் கூறப்படுகின் றன. இவற்றில் சில முக்கிய கருத்துக ளை மட்டும் இங்கு காணுவோம்:
 திக்குவாய்க்கு காரணமான முதல் கருத் தானது தான் பேசும் ஒலியைக் கேட்ப தில் ஏற்படும் காலதாமதத்தின் விளை வாக  திக்கு வாய் ஏற்படுகின்றது என்கி ன்றது. நலமான நிலையில் நாம் பேசும் ஒலியை காதானது, 17 மில்லி செகண்ட் நேரத்தில்  கிரகித்துக் கொள்வது வழக்க மாகும். ஆனால் திக்குவாயினால் அவதி யுறுவோர்களுக்கு பேசும் ஒலியை காதானது ஈர்க்கும்  நேரமானது, வழக்கத்திற்கு மாறாகவும், இயற்கைக்கு மாறாகவும் மிகவும் அதி கமாகின்றது. இந்த இடைவெளி அதிகமாதலால்  உச்சரிக்கும் சொல்லை கேட்க இய லாததால் இவர்கள் சொன்ன சொற்களை திரும்பத் திரும்ப சொல்லி அவதியுற வேண்டிய  அவலநிலை ஏற்ப டுகின்றது.
 மூளைத் தாக்கம் (STROKE),  சிறு மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் பல்வகையான காயங்கள் போன்ற நோய்  இயல் கார ணங்கள் சில சமயங்களில் இதற்கு வழி வகு க்கக் கூடும். இத்தகைய காரணிகள் யாவும் மிகவும் அபூர்வமான  கார ணி களாகும்.
துள்ளித் திரியும் குழந்தைப் பரு வத்தில் குழந்தைகளை உள்ளத்தாலு ம் உடலாலும் அளவிற்கு அதிக மாக துன்புறுத்தும்  பெற் றோர்கள்.
 குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கின்றேன் என்ற போர்வையில் குழந்தைகளுக்கு அதிக மன ச்சுமையை  அளிக்கும் பெற் றோர்கள்.
 குழந்தைகளின் இயற்கையான அறிவு ஆற்றலுக்கு அப்பால், குழ ந்தைப் பருவத்தில், கல்வியில் குழந்தையை முதல்  மாணவ னாக வரவேண்டுமென பேராசை பிடித்த பெற்றோர்கள் தங்கள் குழந் தைகளுக்கு அதிகமான மனஉளைச்சலை ஏற்ப டுத்துதல். இவை போன்ற சூழல்கள் குழந்தைகளுக்கு திக்குவாய் ஏற்பட வழி வகுக்கின்றன.
 திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ்த்திய அமெரி க்க நாட்டு ஆய்வு வல்லுநர், மார்ட்டின் ஹிவார்ட்ஸ் என் பவர், குழந்தைகளை இயற் கைக்கு மாறாக குழந்தைப் பருவத்தில் பல் வகையான மன உளைச்சலுக்கு ஆளாக் குவதால் குழந்தைகளின் குரல் நாண்கள் இறுக்க நிலையை அடைந்து திக்கு வாயிற்கு வழி வகுக்கின்றது என்கி ன்றார்.
சாதாரண குழந்தைக்கும் திக்குவாய் குழந்தைக்கும் உடல் அளவில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா?
அமெரிக்காவிலும், மற்ற ஐ ரோப்பிய நாடுகளிலும், சாதா ரணமாக பேசும் நலமான குழ ந்தைகளுக்கும், திக்குவாயிற் கு ஆளான  குழந்தைகளு க்கும் உடல் அளவிலும், உள வியல் அளவிலும், ஏதாவது வேறுபா டுகள் உள்ளனவா என் பது பற் றி நீண்ட கால  ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. இத்த கைய நீண்ட கால ஆய்வு முடிவான து, இந்த இரண்டு வகை குழந்தைகளின் உடலில்  ஏதாவது உள வியல், உடலியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்த பொழுது, இவர்களின் உடலில்  எவ்வகையான உட லியல், உளவியல் மாற்றங்கள் எதுவும் இல்லையென்றும் இர ண்டு வகையான குழந்தைகளும் ஒரே தன் மை கொண்டவர்களாக இரு ப்பதைக் கண்டனர். ஆனால் குழந்தைகள் திக்கிப் பேசும் போதும் மட்டும் தற்காலிகமாக  வேற்றுமைகள் உள்ளன என்கி ன்றார்கள்.
பிறக்கும் பொழுது எந்தக் குழந்தையும் திக்குவாயாக பிறப்ப தில்லை. குழந் தைகள் சூழ்நிலையின் காரணமாகத் தான் திக்குவாயர்களாக மாற்றப்படுகி ன்றார்கள். இந்தக் கூற்றில் எந்த அளவு உண்மை உள்ளது?
திக்குவாய் என்பது மரபுவழி சீர் கேட் டின் பல பண்பகங்களால்தான் ஏற்படு கின்றது என்பதை உறுதிப்படுத்த தற் பொழுதுள்ள  ஆய்வு முடிவுகளால் உறுதியாக நிலை நாட்ட முடியவில்லை. எனவே இதுவரை ஆய்வு முடிவுகள் மரபு வழி கார ணத்தை  நிலை நாட்ட முடியவில்லை. எனவே மரபு வழி  பிரச் னையல்ல, பெரும்பாலும் இத்தகைய குறை பாடு ஏற்பட குழந்தை வளரும் குடும்ப சூழல்தான் மிகவும் முக்கிய காரணமாகும். ஏனெ ன்றால் குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் குழந்தை பேச கற்றுக்கொள்ளும் பொழுது, குழந்தைகள், பெற் றோர்கள் அல்லது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் சொற் களை  உச்சரிக்கும் முறையை குழந்தைகள் அப்படியே பின்பற் றுகின்றார்கள். எனவேகுடும் பத்தில், தந்தையோ, அல்லது தாயோ அல்லது அண்ணன், அக்கா, போன்ற வர்களில் யாராவது திக்குவா யிற்கு ஆளாகி யிருந்தால், குழந் தையானது பேசக் கற்றுக் கொள்ளும் பொழுது அவர் கள் சொற்களை உச்சரிக் கும் முறையை குழந்தை அப்படி யே பின்பற்றி, குழந் தையும் திக்குவாயாக  மாற வாய்ப்பு உள்ளது.
ஒரு குழந்தையானது திக்குவாய்க்கு ஆளாகும் பொழுது அந்தக் குழந்தையின் நிலை எவ்வாறு இருக்கும்?
திக்குவாயிற்கு ஆளாகும் பொழுது குழ ந்தையானது ஒரு சொற் றொடரில் ஒரு சொல்லை மட்டும் திரும்பத் திரும்ப உச்சரிக்கக்  கூடும் கிளிப் பிள்ளையை ப்போல். சான்றாக ‘‘அம்மா’’ என்ற சொ ல்லை அம்மா! அம்மா! அம் மா! அம்மா என்ற ஒரே  சொல்லை பல முறை திரு ம்பத் திரும்ப உச்சரிக்கக் கூடும். அல் லது அ,அ,அ,அ,அ என்று திரு ம்பத் திரு ம்ப உச்சரிக்கக் கூடும். ஒரு குழந்தை யானது வேகமாக, சொற்களை உச்ச ரிக்கும் பொழுது அல்லது அதிக அளவு உணர்ச்சி வசப்படும் பொழுது, திக்கு தலின் தன்மையானது பன்மடங்கு அதி கமாகக்கூடும். குழந்தையானது திக்குதலுக்கு ஆளா கும் பொழு து, குழந்தையின்  முகத்தில் சிலவகையான மாற்றங்கள் ஏற்படுவ தோடு அல்லாமல், மூச்சுவிடும் தன்மையும் மாறுபடும்.
திக்குவாய் என்பது குழந்தைகளைப் பற்றும் ஒருவகையான நோயா?
நம்நாட்டில் பெரும்பான்மையான மக்கள், பாமரர்கள் மட்டுமல் லாமல், படித்தவர் களும் திக்குவாயை ஒருவகையான நோ ய் எ ன்றே தவறாக கருதுகின்றார்கள். உண்மையில் திக்குவாய் என்பது குழந் தையின் தனிப்பட்ட தகவல் தொடர்பு முறையால்  ஏற்படும் ஒரு வகையான இயற்கைக்கு மாறுபட்ட தொடர்பு அறுந்து விட்டு விட்டு ஏற்படும் தகவல் தொடர்பு முறையாகும்  பெரும் பான்மையான மக்கள் நினைப்பது போல் இது ஒரு வகையான குழந் தையைய் பற்றும் தொற்றுநோய் அல்ல.  
திக்குவாயை நலப்படுத்த பெற்றோர்கள் தொடக்க நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதின் அவசியம் என்ன?
குழந்தையின் வளர்ச்சிக் கட்டத்தில் பேச்சுத் திறன் என்பது முக்கிய மைல் கல்லாகும். இத் தகைய காலகட்டத்தில் பெற்றோர்கள்  மிக வும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். ஏனென்றால் திக்குவாயி ற்கு ஆளாகும் குழந்தைகள், தான் பேசினால் அடிக்கடி  திக்கும் – இதனால் மற்ற வர்களின் கேலிக்கு ஆளாகக் கூடும் என்ற அச்ச த்தில் மற்றவர்களுடன் பேசு வதை தவிர்த்து சற்று  ஒதுங்கி வாழ நினைக் கும். இதன் விளைவாக பள்ளிச் சூழலிலும், குடும்பச் சூழலி லும், மற்றவர்களுடன் ஒதுங்கி தனித்து  வாழ நினைக்கும்.
இதன் விளைவாக திக்குவாய் குழந்தைகளுக்கு  மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றும். கொ ஞ்சம் கொஞ்சமாக குழந் தையின் ஆளுமை பல வழிகளில் பாதிக்கக் கூடும். மேலும் குழந்தை யானது தன்னம்பிக்கையை இழக்கத் தொட ங்கும். இதன்  விளை வாக, பள்ளியில் இவர்களுடைய கல்வித் திறனானது மற்ற குழந் தைகளை விட ஒப்பிடும் பொழுது மிகவும் பின்  தங்கியே இரு க்கும். குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் அவ ர்கள் பழகும் வித மானது மிகவும் மாறுபட்டு இருக்கும், எதிர்கால த்தில் இவர்களு டைய திரு மணத்திற்குப் பின் உள்ள உறவுகள் யாவு ம் சற்று மாறுபட்டே இருக்கும். இவர் களுக்கு வா ழ்க்கை  என்பது இருள் நிறை ந்த குகை யாக காட்சியளிக்கும். எனவே, திக்கு வாயான தொடக்க நிலையில் விழி ப்புணர்வு கொண்டு, குழந்தைகள் எதிர் காலத்தை மனதில் கொண்டு, தொடக்க நிலையில் தக்க மருத்துவ உதவியை நாடுவது அவ சியமாகும்.
திக்குவாய் குழந்தைகள் பாடும் பொழுது மட்டும் தடங்கலின்றி மிக வும் தெளிவாகப் பாடுகின்றார்களே? இதற்கு காரணமென் ன?
திக்குவாயிற்கு ஆளான குழந்தைகள் பாடு ம்பொழுது, பாடும் பாடலின் வரிகளை முன் கூட்டியே பயிற்சியின் மூலமாக  உச்சரி க்கக் கற்றுக் கொள்கின்றன. மேலும் தொ டர்ந்து நிகழும் பயிற்சியின் மூலமாக, பா டலின் வரிகளை தெளிவாக  மனப்பாடம் செய்து கொ ள்கின்றன. இதனால் இந்த குழந்தைகள் பாடலின் வரிகளை முழுமை யாக புரிந்து கொண்டு உச்சரித் துப்பாடுவதால் எவ் வகையான மனக்குழப்பத்திற்கும், திக்குதலுக்கும் ஆளாகாமல் பாடும் பொழுது தெளிவாக பாடலின்  வரிகளை உச்சரிக்கின்றன. இதனால் திக்கு தலுக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளன.
வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொண்டு தொடர்ந்து பேசினால் திக்குவாயை நலப்படுத்த முடியுமெனக் கூறுகின்றார்கள்.  இத்தகை ய முறையில் எந்த அளவு, மருத்துவ அறிவியல் உண்மை உள் ளது?

பல நூற்றாண்டு காலமாக, நம் நாட்டில் மட்டுமல்ல, பெரும்பான்மையான நாடு களில் தொன்று தொட்டு நிலவி வரும்  மூட நம்பி க்கையாகும். பல நூற்றா ண்டுகளுக்கு முன்னர், கிரே க்க நாட் டில் வாழ்ந்த அறிஞர் டொமாஸ்தனிஸ் தன்னுடைய  திக்கு வாயைப் போக்க, கூழாங்கற்களைப் பயன்படுத்தியதாக வரலாறு கூறு கின்றது. இளம் வயதில் திக்குவாயால் அவதிப்பட்ட,  டொமாஸ் தனிஸ் வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொண்டு நீண்ட நாட்களாக பேசிப் பேசி, தன்னுடைய திக்குவாயை  திறமையாக போக்கிய தோடு அல்லாமல் கிரேக்கம் புகழும் சிறந்த பேச்சாளராக விளங் கினார் என வரலாறு கூறுகின்றது.
சரளமாகவும் தெளிவாகவும் பேசும் ஆடவர்கள், குழந்தைகளின் நாவானது வாயின் அகப்புறத்தில் குறிப்பிட்ட இடத்தை  தொடுவதுவழக்கமாகும். ஆனால் திக்குவாயி ற்கு ஆளாகும் குழந்தையின் நாவா னது இயற்கைக்கு முரணாக  வாயின்  அகப்பகுதியின் வேறு பகுதியில் தொ டும். குழந்தையின் வாயில் கூழாங்க ற்கள் அடை த்துக் கொண்டிருப்பதால், குழந்தையின்  சிந்தனையும், கவன மும் திசை திருப்பப்படுகின்றது. அதா வது குழந்தைகளானது, கூழாங் கற் களை விழுங்கி விடுவோமோ என்ற  பயத்தில்  சொற்களை உச்ச ரிக்கும் பொழுது பதட்டம் அடையாமல் தெளிவாக உச்சரிக்கின் றன. இத்தகைய முறையானது,  திக்குவாயைப் போக்க சிறந்த முறையல்ல. ஏனென்றால் குழந்தையின் வாயினின்று கூழாங் கற் களை எடுத்து விட்டால் குழந்தை  மறுபடியும் திக்க ஆரம் பிக்கும். மேலும் குழந்தையானது தவறுதலாக, கூழாங்கற்களை விழுங்கி விட்டால், அதன் விளைவுகள்  கடுமை யானது. வாயில் கூழாங் கற்களைப் போட் டு திக்குவாயைப் போக்குவது என்பது கிரேக்க அறிஞருக்கு வேண்டுமென்றால்  சிறந்த முறையாக பயன் பட்டிருக்கலாம். தற்கால முறைக்கு ஏற்றதல்ல.
திக்குவாய் குழந்தைகள் ஆர்ப்பரிக்கும் அலை கடலுக்கு முன்னர் நின்று உரக்கக் கத்தி பயிற்சி செய்தால் திக்குவாயைப்  போக்க முடியும் என்கின்றார்களே. இதில் எந்த அளவு உண்மை உள்ளது?
திக்குவாய் தொடர்பாக உலகின் பல நாடு களில் நிலைத்து வரும் நம்பிக் கைகளில் இது ஒன்றாகும். ஆர்ப்பரிக்கும் அலைகட லுக்கு முன்னர் நின்று கொண்டு உரக்கக் கத்தி பயிற்சி செய்தால் காலப் போக்கில் திக்கு வாயைப் போக்கிவிட முடியும் என்ற  நம்பிக்கை உலக அள வில் நிலவி வருகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் ஆர்ப்ப ரிக்கும் அலைகடல் எழுப்பும் பேர்  ஒலியானது, திக்குவாய் குழந்தைகள் பேச்சு ஒலியை முழுமையா க மறைத்து விடுகின்றது. இதனால் குழந்தையானது தான்  பேசும் ஒலியை திரும் பப் பேச இயலாமல் போய் விடுவதால், திக்கும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இந்த முறையானது  அமைதி யான, ஓசையற்ற மற்ற இட ங்களில் பேசும் பொழுது, செயல்படுமா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.
திக்குவாயை நலப்படுத்தும் தன்மையுள்ளமருந்துகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளனவா?
ஏற்கெனவே இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் கூறியபடி, திக்கு வாய் என்பது ஒரு நோயல்ல. திக்குவாய் என்பது சரளமாக  பேசஇயலாது, பேச்சில் ஏற்படும் ஒருவகையான தட்டுத் தட ங்கல் நிகழ்வாகும். நோ யைத் தான் மருந்துகள் மூலம் தற்கால  முறை யில் நலப்படுத்த இயலும். என வே, இதுவரை முழுமை யாக நலப்படுத்தும் தன்மை யுள்ள மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்கப்பட வில் லை. நம் நாட்டில் திக்குவாயை நலப்படுத்தக்கூடிய பல்வ கையான மருந்துகள் இருப்பதாக விளம்பரங்கள் மூலம்  விளம்பரப் படுத்தப் படுகின்றன. இவற்றால் உங்கள் பணப்பைதான் திக்குமே ஒழிய, இதனால் எவ்வகையான  பலனையும்  பெற இயலாது.
திக்குவாயை நலப்படுத்தும் வாய்ப்புக்கள் எந்த அளவில் உள்ளன?

திக்குவாய் என்பது இன்றைய நாளில் நலப்படுத்த இயலாத குறை பாடு அல்ல. தொடக்கக் காலத்தில் பயிற்சிபெற்ற மருத்து வர்கள், தொழில்நுட்ப வல்லுந ர்கள் உதவியை நாடி, பொறுமையுடன் தொடர்ந்து முறையான பயிற்சி பெற்றா ல் இந்த குறைபாட்டு நிலையை அகற்ற முடியும். தொடர்ந்து முறையான பயி ற்சி பெறும் ஐந்து குழந்தைகளில், நான் கு குழந்தைகள் முழுமையாக நலம் பெ ற்று தங்கு தடங்கல் இன்றி தெளிவாக பேசமுடியும். எனவே பெற்றோர்கள் அறி வியலுக்குப் பொருந்தாத  தவறான மருத்துவ முறைகளை மேற்கொண்டு காலத்தையும், பொருளை யும் வீணாக் காமல் முறையான மருத்துவத்தை  மேற்கொள்வது சிறந்த முறை யாகும்.
வளர்ந்து வரும் நவீன மருத்துவ தொழில்நுட்ப முறைகள் திக்கு வாயை சரி செய்ய எவ்வாறு துணைபுரிகின்றது?
திக்குவாயினால் அவதியுறுவோருக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களின் குறை யை சரிசெய்யவும், பல்வகையான மரு த்துவ  தொழில்நுட்ப அறிவை அடிப்ப டையாகக் கொண்டு, பல்வகையான புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. இவை திக்கு வாயை சரி செய்ய பெரிதும் துணையாக உள்ளன. கம்ப்யூட்டர்கள், ஒலிப் பதிவு நாடா க்கள், ஒலியை காலம் தாழ்த்தி  அனுப்பும் கருவிகள், (DELAYED AUTIORY FEED BACK) அதிர்வலைப் பொறிகள் (VIBRATING MACHINES), ஒலி மறைப்பான்கள்  (MASKER) போன்ற வை, திக் குவாயை சரிசெய்ய பயன்படுத்தும் சில முக்கிய  நவீன மருத்துவக் கருவிகளாகும்.
திக்குவாயிற்கு ஆளான குழந்தைகளின் பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன?
 தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட  திக்கு வாயை மருத்துவ அறிவி யலுக்கு ஒவ்வாத பல்வகையான மாந்திரீக முறைகளின்  மூலமாக நலப்படுத்தி விட்டால் என்ற சப லங்களுக்கு ஆளாகி, பொருளை யும், கால த்தையும் வீணாக்காதீர்கள்.
 நீங்கள் வாழும் பகுதியிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவிலுள்ள சிறப்பு மருத்து வரை அணுகினால், அவர் உங்கள் குழந்தைக்கு மேற்கொள்ள வே ண்டிய மருத்துவமுறைகளை சிறப்பாக மேற்கொள்வார்.
இத்தகைய சிறப்பு மருத்து வரின் வழிகாட்டுதலின் பேரில், திக்கு வாயை சரிசெய்ய இதற் கென சிறப்புப் பயிற்சி பெற்ற திக்கு வாயை சரிசெய்யும் சிற ப்புப் பயிற்சியாளர்கள் (SPEECH THRRAPIST) உங்களுக்கு அன் றாடம் தொடர்ந்து பயிற்சி  அளி த்து உங்கள் குழந் தைகள் திக்குவாயைச் சரிசெய்வார்.
திக்குவாய் பற்றிய நமது சமுதாயப் பார்வை ஏன் மாறவேண்டும்?
திக்குவாய் பற்றி நமது சமுதாயப் பார்வையானது முழுமையாக மாற வேண்டும். திக்குவாய் என்பது தனிமனிதரின் சொற்களை வெளிப்படுத்துவதில் ஏற் படும் ஒருவகையான கு றைபாடுதான். அதை நாம் முழுமையாக புரிந்துகொ ள்ள வேண்டும். இன்றை ய  நாளில் குழந்தைகள் பள்ளிகளில் பலவகை யான கிண்டலுக்கும் கேலி க்கு உரிய பொருளாக ஆக் கப்பட்டு, மற்றவர்கள் அவர்களுக்கு பல்வகையான மன உளைச் சலை ஏற்படுத்துவது மிகப் பெரிய சமுதாயக் கொடுமையாகும். இது போன்று  திக்குவாயிற்கு ஆளான ஆடவர்களும் அன்றாட வாழ்க்கையில் கேலிக்குரிய பொரு ளாக ஆக்கப்படுகின்றார்கள்.
இன்றைய திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித் தொட ர்கள், மற்றும் இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளில்  திக்குவாயர்கள் ஜோக்குக்குரிய பாத்திரங்களாக படைக்கப்பட்டு வருகின்றார்கள். நகைச்சுவைக்கு நல்ல கருக்கள் இருக்கும்  பொ ழுது, திக்குவாயிற்கு ஆளாகுபவர்கள் கேலிக்குரிய பொருளாக ஆக் கப்படுவது, கண்டனத்திற்குரிய செயலாகும். எனவே,  திக்கு வாய் பற்றிய நமது சமுதாயப் பார்வையில் நிறைய மாற்றங்கள் தேவை. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்  என்ற சீரிய நோக்கு நம்மிடையே ஏற்பட வேண்டும்.

5 comments

தொடர்ந்து மிகவும் நல்ல பல மருத்துவப் பதிவுகளை எழுதிவருகிறீகள் பாராட்டுக்கள். எங்க ஐயா இந்தப்படங்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள். பதிவுகளிற்கு போடப்படும் படங்கள் ரசித்துப் படிக்கவைக்கின்றன

Reply

நன்றி ஜயா. பலரும் படங்கள் ஆபாசம் என்கிறாா்கள் அப்படி படங்கள் இட காரணம் பதிவுகள் பலரை செல்லவேண்டும் என்ற நோக்கோடு மாத்திரமே. இப்போது எல்லாம் பற்பசை வியாபாரத்து கூட கவா்ச்சி விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படிதான் என் பதிவுகளும். நீங்கள் நினைப்பது போன்று என் வயது அதிகம் இல்லை 23 மாத்திரமே. உங்களை போல் ஊக்கப்படுத்துவதற்கு யாரும் முன்வருவதில்லை. உங்களுக்கு மிக்க நன்றி.

Reply

Its is the first article read about stammering(shuttering), even do not know the word in English.
Keep it up!!
You said you are 23 age , me too .
What is your profession?
where do you get these information?
All the best for your future article!!!
Regards
Ashok

Reply

சில தவறுகள் பதிவுகளில் இடம் பெறலாம். மன்னிக்கவும். தகவல் திரட்டுவதற்கும் பதிவுகள் இடுவதற்கும் வயது முக்கியம் அல்ல. நாம் இடும் பதிவின் முக்கியத்துவமே அவசியம். நன்றி

Reply