நூடுல்ஸ் சூப்..!! noodles



தேவையானவை:

1,பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காலிபிளவர் எல்லாம் 2,சேர்த்து – 2 கப்
3,வேக வைத்த சைனீஸ் நூடுல்ஸ் – 1/2 கப்
4,இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
5,நறுக்கிய வெங்காயம் – 1
6,சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
7,மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
8,கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு
9,சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
10,கார்ன்ப்ளார் – 2 டீஸ்பூன்
11,உப்பு தேவைக்கு ஏற்ப.


செய்முறை:

1,பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காய்கறிகள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை போட்டு, அரைப்பதம் வரை கொதிக்க விடவும்.

2,அரை கப் தண்ணீரில் கார்ன்ப்ளாரை கரைத்து அதில் சேர்த்து ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடவும்.

3,பிறகு சோயா சாஸ், நூடுல்ஸ், மிளகுத்தூள், கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

இது பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சூப் என்றாலே ஆரோக்கியம்தான்.