மதிப்பிற்குரிய அம்ரிதா அவர்களுக்கு
தங்களின் பதிப்புகளுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பெயர் ராமகிருஷ்ணன். வயது முப்பது. இன்னும் ஒரு சில நாட்களில் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. என் வருங்கால மனைவி கிராமத்து பெண். கூச்ச சுபாவம் உடையவள்.
கல்லூரி நாட்களிலும் வேலை செய்யும் இடத்திலும் சில பெண்களுடன் உறவு கொண்டேன். இதைப்பற்றி என் வருங்கால மனைவியிடம் தெரிவிக்கலாமா வேண்டாமா என்பதே எனது ஐயம் !! சொல்லாமல் இருக்க மனசாட்சி உறுத்துகிறது. சொன்னால் அவள் என்னை வேருதுவிடுவாளோ என பயமாக உள்ளது.
எனவே ஒரு பெண்ணிடம் இதைப்பற்றி கேட்டால் நல்ல பதில் கிட்டும் என்பதால் தங்களிடம் கேட்கிறேன்.
நல்ல பதிலை எதிர்பார்கிறேன்.
ரம்க்ரிஸ்
பதி்ல்நண்பரே, பெண்கள் போதுவாகவே கூச்ச சுபாவம் உடையவர்கள் தான் அதில் ஒன்றுமில்லை. பல ஆண்களுக்கு கடந்த காலம் பற்றி இப்படி யோசனை தோன்றுகிறது தங்கள் மனைவியிடம் எதையும் ஒளிவு மறைவும் இல்லாமல் சொல்ல வேண்டும் என்று அது நல்லது தான் இருப்பினும் இந்த விடயத்தினை உங்கள் மனைவிக்கு தெரிவிப்பதை தவிர்க்கவும் காரணம் எந்த ஒரு மனைவியும் தன் கணவர் தனக்கு மட்டும் அப்படி தனக்குள்ளே எண்ணி பெருமிதம் கொள்ளுகிறாள். நீங்கள் இதை அவளிடம் தெரிவிக்கும் போது அவள் பெரிதும் மனமுடைந்து போகக்கூடும். உங்களிடம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றாலும் அவளின் மனதில் ஒரு தாக்கத்தினை இது நிச்சயம் ஏற்படுத்தும். நீங்கள் ஒவ்வொரு தடவையும் அவளை தொடும் போது ஏதோ ஒரு உணர்வு அவளை கொல்லாம்ல் கொல்வது போன்று இருக்கும். உங்கள் மனைவி இப்படி ஒன்றை உங்களிடம் கூறினால் உங்களால் எப்படி ஜீரணிக்க முடியாதே. அப்படித்தான் ஆகவே இதனை மட்டும் உங்கள் மனைவியிம் மறைத்த விடுங்கள் உங்கள் எதிர் கால வாழ்கையினை கருத்திற் கொண்டு.
நன்றி
அட்மின்
அமிர்தா



4 comments
excellent councelling
Replyநன்றி anonymous நீங்களும் உங்கள் சந்தோகங்கள் கேள்விகளை எமக்கு அனுப்பலாம்.. பதில் தரப்படும்.
Replyகேள்விகள் தமிழில் யுனிகோட்டில் இருப்பது அவசியம்.
எங்கு கேள்வி கேட்க்க வேண்டும்?
Replyநண்பரே எமது மின்னஞ்சலின்னூடாக அல்லது கருத்துப்பெட்டி வாயிலாக அல்லது மெனுபாரில் க்ளிக் செய்து மின்னஞசல் என்பதனை தெரிவு செய்து அதில் வரும் கருத்துப் பெட்டியிலும் உங்கள் கருத்துக்கள் சந்தேகங்களை எமக்கு அனுப்பலாம்.
Reply