பெண்களின் வெள்ளை படுதலும் அதற்கான சில தீர்வுகளும்!! பகுதி 02



Candida Albicans எனும் பங்கசு வின் தொற்று ஏற்பட்டிருப்பின் திடீரென வெள்ளை படுதலின் அளவு அதிகரிப்ப தோடு, எரிவு, சொறிதல் உடன் தூய வெள்ளை நிறத்தில் தயிர் / பாற்கட்டி போன்று காணப்படும்.

Gardenella என்கின்ற பக்டீரியாக் களினால் தொற்று ஏற்பட்டிருப்பின் யோனி யினூடு வெளியாகும் திரவம் துர்வாடை வீசும்.

நுரைத்தலுடன் சொறிவையும் உண்டு பண்ணும். சிறுநீர் கழிக்கையில் எரிவு, வலி என்பன காணப்படுவதுடன் அடிக்கடி நிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற் படும். உடலுறவின் போது வலி யுண்டாகும்.

Trichomonas தொற்று எனில் அடிவயிறு, யோனி வழி யில் அதிக வலி ஏற்படுவது டன் நுரைத்த திரவம் வெளி யாகும். துர்வாடை, சிறுநீர் கழி க்கையில் எரிவு, உடலுறவின் போது வலி என்பனவும் ஏற் படும்.

ஆகவே வெள்ளை படு தலுடன் மேற்குறிப்பிட்ட இவ் வறிகுறிகளும் இணைந்து ஏற் படின் உடனடியாக மருத்து வரை நாடி உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் பின்விளை வுகளிலிருந்து தவிர்ந்து கொள் ளலாம்.

சிறு பிள்ளைகளில் ஈஸ்டர ஜன் ஹோமோன் மிகு குறை வான அளவில் காணப்படி னும் யோனி வழியில் தடுப் பாக காணப்படும் மென்சவ் வின் (Hymen membrane) காரணமாக கிருமித் தொற்றுக் குள்ளாவது தடுக்கப்படுகிறது.

இருப்பினும் சுகாதாரம் ஒழுங் கான முறையில் பேணப்படா மையாலும், குடும்பத்திலுள்ள ஏனையோருக்கு கிருமித் தொற் றுக்கள் ஏதும் காணப்படினும் அதனால் இவர்களுக்கு பாதிப் புக்கள் உண்டாகலாம். சரியான தவணையில் குடல் பூச்சி மருந்து (Worm treatment) கொடுக்க வேண்டும்.



சிலவேளைகளில் சிறு பிள்ளைகள் மிக பசியுடன் காணப்படுவர். அவர்களின் யோனியினூடு சற்று தடிப்பான சீழ் போன்ற திரவம் வெளியாகும். அத்துடன் இவர்களின் பெண் உறுப்பு, யோனி வழியை சூழ உள்ள பகுதிகள் வீங்கியும் சிவந்தும் காணப்படும்.
இது அவர்களின் யோனியினுள் ஏதும் சிறு பொருட்கள் (பிorலீign boனீy) செலுத்தப்பட்டிருப்பத ற்கான அடையாளமாகும். இது விளை யாட்டாக செலுத்தப்பட்டிருக்கலாம்.
அதனை வெளியே எடுக்க முயற்சிக்காமல் உடன டியாக வைத்தியரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
வெள்ளை படுதல் அதிகமாக உள்ள காலங்களில் உணவுப் பழக்கவழக்கங்க ளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
தரமான போசணை மிக்க உணவுகளை அதிகம் உள் எடுப்பதுடன் எளிதில் சமிபாடடையாத, ஒவ்வாமையை உண்டுபண்ணுகின்ற உணவுகளை தவிர் க்க வேண்டும்.
இவ் வேளைகளில் அதிகம் பழங்க ளையும் பழச்சாறுகளையும் அருந்த வேண்டும். அப்பிள், பியர்ஸ், மாதுளை, மங்குஸ்தான், நாவற்பழம் என்பன சிற ந்தவை.
இவற்றுடன், மரக்கறிகள், இலை, கீரைகள் பச்சையாகவோ அல்லது நீரா வியில் அவித்தோ உண்ணலாம்.
குருதிச் சோகையை குறைப்பதற்கு அதிகம் இரும்புச் சத்து கொண்ட முருங்கை இலை, பசளி, அகத்தி போன்ற இலைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை உண்டாக்கும்.
நார்த் தன்மையான உணவுகளுடன் புரதச் சத்து, காபோவைதரேற், விற்றமின் என்பவற்றையும் உள்ளெடுக்க வேண்டும். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இவற்றுடன் எண்ணெய்த் தன்மை கொண்ட மீன்களை உணவில் சேர்க்கலாம்.
தயிர், யோகட் போன்ற பாலுணவு களை உண்ணுவதன் மூலம் உடற் சூட் டைக் குறைக்கலாம். எளிதில் உணவு சமி பாட்டை செய்யும் அத்துடன் (Lacto bacillus) லக்டோ பசிலஸ்’ எனும் பக் டீரியாவின் உருவாக்கத்தை அதிகரித்து யோனியில் லக்டிக் அமிலத்தை உரு வாக்கும் அளவையும் அதிகரிக்கச் செய்யும். ஒரு நாளுக்கு குறைந்தது 6 கப் இளஞ்சூடான நீர் அருந்த வேண்டும்.
இனிப்பான, அதிகம் சீனி சேர்க்கப் பட்ட உணவுகள், புளிப்பான உணவுகள், கொழுப்பான உணவுகள், நிலக்கடலை மற்றும் எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள், இறைச்சி போன்ற உணவு களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.



ஈஸ்ட் (Yeast) சேர்க்கப்பட்ட பாண் போன்ற உணவுகளையும் தவிர்த்துக் கொள் வதுடன் மதுபானம், சிகரெட், புகையிலை போன்றவற்றையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளைபடுதலிலிருந்து தவிர்ந்து கொள் வதற்கும், அது கிருமித் தொற்றுகளுக் குள்ளாவதை தடுப்பதற்குமான சில ஆலோசனைகள்.
சாதாரண நாட்களிலும் சரி மாதவிலக்கு உள்ள காலங்களிலும் சரி நன்றாக ஒவ் வொரு நாட்களிலும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
சிறுநீர் வழி, யோனி வழி ஆகியவற்றையும் சுத்தமாக பேணு வதோடு தெரிவு செய்யும் சவர்க்காரம் எரிவு, ஒவ்வாமையை உண்டு பண்ணாது இருக்க வேண்டும். குளித்த பின் யோனிப் பகுதியில் ஈரம் இல்லாதவாறு பருத்தி துணி யினால் துடைத்து விடல் வேண்டும்.
உள்ளாடைகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். நைலோன் உள்ளாடைகளை தவிர்த்து பருத்தியி லான, ஈரத்தை உறிஞ்சக் கூடிய செளக ரியமான உள்ளாடைகளை தெரிவு செய்தல் வேண்டும். அத்துடன் தெரிவு செய்கை யில் வெள்ளை நிறத்தில் இருப்பது சிற ந்தது.
இறுக்கமான உள்ளாடைகளை அணியக் கூடாது. உள்ளாடைகளை கழுவும் போது சவர்க்காரம் அல்லது சலவைத் தூள் நுரைகள் நன்கு நீங்கும் வரை கழுவி நேரடி சூரிய வெளிச்சம் படும்படி காய வைத்து பின் மின் அழுத்தியினால் நன்கு சூடு காட்டி பாவிக்க வேண்டும்.
ஒரே உள்ளாடையை தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு அணியக் கூடாது.
மாதவிலக்குக் காலங்களில் பாவிக்கும் துணிகள் பருத்தினால் ஆனதும் தூய்மை யாகவும் இருக்க வேண்டும். பேட் (pad) பாவிப்பதாயின் ஒவ்வாமையை ஏற்படுத் தாததாக இருப்பதுடன் தொடர்ந்து ஒன் றையே பாவிக்கக் கூடாது. அவ்வாறு செய்யின் பங்கசு தொற்று ஏற்பட வாய் ப்பு உண்டு.
மலங்கழித்த பின் சுத்தம் செய்கையில் முற்புறமிருந்து பின்புறம் நோக்கி சுத்தம் செய்ய வேண்டும். சவர்க்காரம் இட்டு கழுவுதலும் சிறந்தது. ஏனெனில் யோனி வழியும் மலவாயிலும் மிக அருகில் இருப்பதால் யோனி வழியில் அதிகம் தொற்றுகள் ஏற்படலாம்.
சிலர் எந்த நேரமும் மனப் பதற்றத் துடனும், மன அழுத்தஙக்ளுடனும் காண ப்படுவர். இத்தகைய மனநிலை வெள்ளை படுதலை மிகவும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தங்களிலிருந்து விடுபட வேண்டும்.
இதற்கு சிறு உடற் பயிற்சிகள், நடத் தல், ஓடுதல், சிறு யோகா பயிற்சிகள் இவ ற்றை காலை மாலை சூரிய வெளிச்ச த்தில் செய்யலாம். நீர் மருந்துவமும் செய்யலாம். இது மன அழுத்தங்களைக் குறைப்பதோடு யோனி தசைகளை, யோனி வழி இறுக்கியை (Vaginal Sphincter) கெட்டியாக்கும்.
அதாவது ஒரு அகன்ற பெரிய பாத்திரத்தில் 1 அடி உயரத்திற்கு 30 - 40 செல்சியஸ் இளஞ் சூடான நீர் எடுத்து அதனுள் 10 நிமிடம் வரை உற்கார்ந்திருத்தல், இந்நேரத்தில் யோனி வழி இறுக்கியை இறுக்கி, பின் தளர்த்தி விட வேண்டும்.
அதாவது ஆழமான உற்சுவாசத்துடன் யோனியை இறுக்கி சிறிது நேரம் அப்படியே இருந்த பின் ஆழமான வெளிச்சுவாசத்துடன் இறுக்கியை தளிர்த்த வேண்டும். ஒரு நாளைக்கு காலை, மாலை இரு தடவை கள் இவ்வாறு செய்யலாம். இது நல்ல பலனைத் தரும்.
போதுமான அளவு தூக் கம் அவசியம். தூக்கம் விழிப்பது நேரம் பிந்தி தூங்குவது என்பவற்றையும் தவிர்ப் பது நல்லது.

வெள்ளைபடுதலைத் தவிர்ப்பதற்கான சில மூலிகை மருத்துவ முறைகள்
மூலிகை மருத்துவம் எவ்வித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று ஏதும் கிருமித் தொற்றுக்குரிய அடையாளங்களுடன் வெள் ளைபடுதல் ஏற்படின் இம்மூலிகை மரு த்துவத்தை மேற்கொள்ளாமல் வைத்தியரை நாடி அதற்குரிய மருத்துவத்தை பெற வேண்டும்.
இவ்வாறல்லாது சாதாரணமான வெள்ளை படுதல் அதிகளவில் ஏற்படும் போது அதை தடுக்க இம் மருத்துவம் சிறந்தது.
அத்துடன் இங்கு குறிப்பிடும் மருந்து மூலிகைகள் கருப்பையை பலப் படுத்துவதுடன் உடல் பலவீனத்தையும் போக்கும்.





அவற்றில் சில:
புளி விதை இது தோல் நீக்கியதாயும், வறுத்ததாயும் இருக்க வேண்டும். இதில் 30 கிராம் அளவில்எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி, அந்த பொடியில் 5 கிராம் அளவில் எடுத்து அதே அளவு சீனியுடன் கலந்து பின் இந்த கலவையை பாலுடன் சேர்த்து உண்ண வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 2 தடவை உண்ணலாம்.
அல்லது 5 கிராம்பொடியு டன் சிறிது நீர் சேர்த்து நன்கு குழைத்து உண்ணலாம். இதனை ஒரு நாளைக்கு 3 தடவைகள் உண்ண வேண்டும்.
வீ சாத்தா வாரி கிழங்கின் ஒரு குறித்த அளவினை எடுத்து நன்கு உலர்த்தி பொடி யாக்கி அதில் 5-7 கிராம் அளவில் எடுத்து பாலுடன் காலை யில் உணவிற்கு முன் உண்ண வேண்டும்.
செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து ஒரு எலுமிச்சம் பழ அளவு எடுத்து பசும் பாலில் கரைத்து அதனை காலை யும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஒரு வாரம் அள வில் நல்ல பலன் கிடைக்கும்.
அல்லது அதிகாலையில் வெறும் வயிற்றிலே மூன்று செம்பருத்திப் பூக்களை காம்பு நீக்கி விட்டு மென்று உண்ண வேண்டும்.
நன்கு பழுத்த வில்வம் பழத்தை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவை ஒரு தடவைக்கு 50 கிராம் வீதம் தொடர்ந்து உண்டு வரவேண்டும்.
வெண்டிச் செடியின் வேரை உலர்த்தி இடித்து பொடி செய்து இரவு படுக்கச் செல்லும் போது அதன் 20 கிராம் அளவில் எடுத்து 50 மில்லி லீற்றர் நீரில் ஊற விட்டு மறுநாள் காலை அந்த கலவையை கையால் பிசை ந்து வடித்தெடுத்து பனை வெல்லம் கலந்து, குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு செய்ய வேண்டும். அல்லது வெண்டிக்காய் 100 கிராம் எடுத்து அதனை நெடுக்கு வெட்டாக வெட்டி 500 மில்லி லீற்றர் நீர் சேர்த்து 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு பின் வடிவத்தெடுத்து சிறிதளவு சீனி சேர்த்து இனிப்பூட்டலாம் (தேவையாயின்) இதில் 60 - 90 மில்லி லீற்றரை ஒரு நாளைக்கு இரு தடவைகள் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு மாதம் செய்தால் நல்ல பயன் கிடைக்கும்.
நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று டன் 1 தேக் கரண்டி நெய் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு நாளுக்கு இரண்டு தடவை உண்ணலாம். அல்லது வாழைப்பழத்து டன் 4 - அல்லது 5 துளி சந்தன எண்ணெய் சேர்த்து பிசைந்து அதனை ஒரு நாளுக்கு 2 தடவை உண்ண முடியும்.
நெல்லிக் காயினை நன்கு உலர்த்தி பொடியாக்கி அதில் 5 கிராம் பொடியுடன் சிறிதளவு தேனுடன் கலந்து உண்ணலாம். இவ்வாறு ஒரு நாளைக்கு காலை மாலை இரு தடவைகள் உண்ண வேண்டும்.
கொய்யா மரத்தின் 20 - 30 இலை களை எடுத்து அதனுடன் 200 மில்லி லீற்றர் நீர்சேர்த்து ஒரு இரவு முழுக்க உறவிட்டு மறுநாள் காலை அதனை 5 நிமிடம் காய்ச்சி பின் வடித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
நெல்லிக் காயை நன்கு உலர்த்தி பின் பொடியாக்கி அதில் ஒரு தேக்கரண்டியை நன்றாக பொடியாக்கிய ஒரு தேக்கரண்டி அதி மதுரப் பொடியுடன் கலந்து இக் கலவையை 2 தேக்கரண்டி தேனுடன் கல ந்து ஒரு நாளைக்கு இரு தடவைகள் உண்ணலாம்.
பெருங்காயத்தை சற்று சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனை ஒரு தேக்கரண்டி நெய்யுடன் கலந்து பின் இவற்றுடன் 2 மேசைக்கரண்டி காச்சாத ஆட்டுப்பாலைக் கலந்து பின் இக்கல வையில் 1 தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு 3 தடவைகள் சிறிது தேனு டன் சேர்த்து உண்ணலாம்.
ஆலமரப் பட்டையை உலர்த்தி பொடி யாக்கி அதில் 25 கிராம் பொடியை 100 மில்லி லீற்றர் நீருடன் கலந்து பின் இந்தளவிலும் கால்வாரியாக குறையும் வரை சூடாக்கி பின் அதனை வடித்து ஒரு நாளைக்கு 3 தடவை அதனை அருந்தலாம்.
மேற்குறிப்பிட்ட குடி மருந்துகள் சரியான முறையில் பின்பற்றப்படுகையில் வெள்ளைபடுதலின் தாக்கம் நன்கு குறையும். இம்முறைகளுடன் சேர்த்து அதிகளவான வெள்ளை படுதலினைக் கட்டுப்படுத்த இன்னுமொரு முறையும் உண்டு.
அதாவது மூலிகை கஷாயங்கள் தயாரிக்கப்பட்டு அவை நேரடியாக யோனி யினுள் செலுத்துவதாகும். இதனை (Vaginal Douch) என்று அழைக்கப்படு கிறது. இமுமுறை உள்நாட்டு மருத்துவ சாலைகளில் வெவ்வேறு உபகரணங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும் இம்மாதிரி நேரடியாக யோனியினுள் தயாரிக்கப்பட்ட மருத்துவ பதார்த்தத்தை செலுத்தும் போது அதாவது தொடர்ச்சியாக (Douch) செய்யும போது அது யோனி சுவரிலுள்ள கிளைக்கோஜன் (Glycogen) மற்றும் லக்டிக் அமிலத் தினை (Lactic Acid) உருவாக்கும்.
லக்டோ பருலஸ் (Lacto bacillus) எனும் பக் டீரியாக்களையும் வெளியேற்றுவதுடன் யோனின் அமிலத்தன்மையில் மாற்றத்தை உண்டு பண்ணி அதன் பாதுகாப்பு பொறி முறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆத லால் இது சம்பந்தமான ஆலோசனைகளை உண்ணாட்டு வைத்திய சாலைகளில் உள்ள பெண் நோயியல் மருத்துவரிடம் சென்று பெறலாம்.