பக்குவம் அடையும் முன் பாலியல் உறவு..!!





- கி.சுபத்திரா -

சராசரி குடும்பத்தைச் சேர்ந்த லிசா, 22 (உண்மைப் பெயர் அல்ல) 13 வயதில் முதன்முதலில் உடலுறவில் ஈடுபட்டுள் ளார். எவரும் அவரை வற்புறுத்தவில்லை. பலாத்காரம் செய்யவில்லை. பதின்ம வயதில் சில நேரங்களில் தனிமையாக உணர்ந்தாலும் பிடிவாதப் போக்கும் எதிர்ப்பு குணமும் மிக்கவராக இருந்தார் லிசா. தற்போது பல்கலைக்கழகத்தில் பயிலும் லிசா, இளம் வயதின் ஆர்வக் கோளாறினால் நடந்த அந்தச் சம்பவம் குறித்து முதலில் சற்று சங்கடப்பட்டாலும், அதை தமது வாழ்க்கையின் கடந்துபோன ஒரு சம்பவமாக எடுத்துக் கொண்டதாக கூறினார்.
லிசாவைப் போல சிறு வயதிலேயே செக்ஸ் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், அதற்கான முயற்சி களும், அதன் பின் அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பதும்  இன்றைய இளையரிடம் அதிகரித்து வரும் போக்காக உள்ளது.
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் இணைய ஆய்வில் பங்கேற்ற 1,500 பேரில் 40 விழுக்காட்டினர் 18 வயதிற்கு முன்னதாகவே முதன் முறையாக உடலுறவு கொண்ட தாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் 198 பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் 16 வயதுக்கும் குறைந்தவர்கள் தொடர் பானது. இந்த எண்ணிக்கை 2009ம் ஆண்டைவிட 10 அதிகம் என்பதை போலிஸ் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
16 வயதிற்கு கீழ்ப் பட்ட பெண் களுடன் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும்.
13 வயதிலே இளையர்கள் உடலுவில் ஈடுபடுவது இப்பொழுது சாதாரணமாகி விட்டதாகக் குறிப்பிட்டார் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் ஆசிரியர் ஒருவர்.
குடும்ப பிணைப்பு பலமாக இருந்தால் பதின்ம வயதுப் பிள்ளைகள் வழி தவறி போவதை பெரிதும் தவிர்க்கலாம் என்றும் அந்த ஆசிரியை கூறினார்.
பெற்றோர் தங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு நல்ல முன்னு தாரணமாக இருந்து அவர்களை வழி நடத்த வேண்டும் என்றும் அவர் குறிபிட்டார்.
உடலறவு, ஆண் - பெண் உறவு என்பது என்ன என்று தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வமே மிகச் சிறுவயதிலேயே ஒருவர் உடலு றவில் ஈடுபட முக்கிய காரணம் என்பது கோமளவள்ளி அழகப்பனின், 23, கருத்து.





“இத்தகைய நடவடிக்கைகள் இளம் வயதில் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கலாம். ஆனால் சுய கட்டுபாடு இன்றி நடந்துகொள் வதால் பல சிக்கல்கள் பின்னர் ஏற்படுகின்றன,” என்றார் கோமளவள்ளி.
சுகாதார மேம்பாட்டு வாரியம் 2007ல் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  மேல் உயர் நிலையைச் சேர்ந்த 100 மாணவர் களில் நான்கு மாணவர்கள் உடலுறவில் ஈடுபடுகின்றனர். இவர்களில் நான்கில் ஒருவர் அதே ஆண்டில்  ஐந்து முறைக்கும் அதிகமாக உடலுறவு கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டது.
தாம் காதலிப்பவரிடம் தமது அன்பை வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தங்களின் கன்னித்தன்மையைப் பல இளையர்கள் இழக்கிறார்கள் என்று கூறினார் 23 வயது ஜெஸ்மின் சுஜாதா.
“பாலியல் என்பது ஓர் அழகான விஷயம். ஆனால் பாலியலுக்கு தவறான அர்த்தங்களை இளையர் கள் எடுத்துக் கொள்கிறார்கள்,” என்பது மோகன்ராஜ் 23, கருத்து.
பதின்ம வயதில் கன்னித் தன்மையை இழப்பது ஒழுக்கமற்ற செயல் என்று  நம்பும் சுமதி ராஜேந்திரன், 20,  திருமணம் செய்து கொள்பவருடன் மட்டுமே உடலுறவு என்பதில் தாம் உறுதி யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் குழந்தைகள் சங்கத்தின் நிர்வாகி டாக்டர் பால்ஹஜட், பதின்ம வயது இளையர்கள் பலர் தனிமையோடு போராடுவதாக ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
14 வயது நிரம்பிய பெண் ஓருவர் தமது ஆறு ஆண் நண்பர்களோடு உடலுறவு கொண்டதை டாக்டர் பால்ஹஜட் நினைவு கூர்ந்தார்.
“அவரைப் பொறுத்தரை அதை ஒரு பெரிய பொருட்டாகவே கருதவில்லை. தமது நண்பர் களுடன் உடலுறவு கொள்வது அப்பெண்ணுக்குத் தவறாக தோன்றவில்லை,” என்றார் டாக்டர் பால்ஹஜட்.
பெற்றோர் தங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகளோடு நேரம் செல வழிப்பது அவசியமானது என்று டாக்டர் பால்ஹஜட் சொன்னார்.





இளவயது செக்ஸ், காதல் 
இன்றைய இளையரின் விருப்பப் போக்கு
நண்பர்களின் தாக்கங்களால் பல  சிறுமிகள் தங்கள் கன்னித் தன்மையை இழக்கிறார்கள் என்பது இஎம்சிசி(ஈகல்ஸ் மிடியேஷன் ஏன்ட் கவுன்சிலிங் சென்டர்) ஆலோசகர் ஜெசி டோவின் கருத்து.
தன்னிடம் ஆலோசனைக்கு வரும் இளையர்கள் 16 வயது முதல் 18 வயது வரை உள்ளவர் கள் எனக் குறிப்பிட்ட ஜெசி,  அவர்கள்  தனியாகவே ஆலோசனைக்கு வருவதைச் சுட்டினார்.
தங்கள் பிள்ளைகள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பல பெற்றோருக்கு தெரிவதில்லை என்றார் அவர் பதின்ம வயதுப் பெண்களின் மனப்போக்கு குறித்து மேலும் விவரித்தார்.






பதின்ம வயதினர், நண்பர்கள் எது செய்தாலும் சொன்னாலும் அதைப் பின்பற்றும் போக்கைக் கொண்டவர்கள்.
அந்த வயதில் தங்களின் நண்பர்கள் எது செய்தாலும் அதைத் தாங்களும் செய்ய நினைப் பார்கள்.
சிறுவயதிலேயே ஆண் நண்பர்ளைப் பெற்றிருப்பதும், உடலுறவில் ஈடுபடுவதும் அவர்களுக்கு ‘கூலான’ விஷயமாக இருக்கிறது.
அப்படியில்லாவிட்டால் நண்பர் வட்டத்தில் தங்களுக்கு மதிப் பில்லை என்று அவர்கள் நினைக் கிறார்கள் என விளக்கினார் குமாரி ஜெசி டோ.
“உடலுறவு பற்றிய ஊடகங் களின் சித்தரிப்பு இளையர் களுக்கு உடலுறவை பற்றிய யதார்த்தமற்ற கருத்துகளை உண்டாக்கியுள்ளது.
“ஊடகங்களில் இளையர்கள் பாதுகாப்பற்ற உடலுறவை கொள்வதாகக் காட்டுவதோடு அவ்வாறான நடவடிக்கைகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் பின்விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்லத் தவறுகிறது.
“இதனால் பதின்ம வயதினர் கன்னித்தன்மையை இழப்பதன் மூலம் உண்டாகும் பின் விளைவு களை அறிவதில்லை,” என்று கூறினார் அவர்.
ஆக்ககரமான நடவடிக்கை களில் ஈடுபடுவதோடு தன்னம் பிக்கையைக் கற்றுத் தரும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதாலும் இளவயதிலேயே இத்தகைய உறவுகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம் என்று குமாரி ஜெசி தெரிவித்தார்.
பதின்ம வயதில் கவனத்தையும் ஆர்வத்தையும் வேறு பல விஷயங்களில் திசை திருப்ப வேண்டும். அதற்கு பெற்றோரின் உதவி பேருதவியாக அமையும்.

சிறுவர் சிறுமிகளை பாதுகாப்பது பெற்றோர் மட்டுமல்ல எம் ஒவ்வொருவரின் கடமையாகும். அவர்கள் எமது எதிர் காலச்சந்ததியினர்


Thanks for - tamilmurasu.com