சிம்பாவேயின் தலைநகர் ஹராரேயில் 3 பெண்கள் ஆண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தமைக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் அந்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்போது ஒரு பெண் அவரது முகத்தில் நீரை ஊற்றிவிட்டு அவருக்குப் பலமான பாலியல் ஆசையேற்படுத்திய ஏதோவொரு ஊசியைச் செலுத்தியதாகவும் இதில் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார். அவர்கள் அனைத்தையும் முடித்ததும் தன்னை உடையேதுமின்றி நிர்வாணமாகப் பற்றைக்குள் விட்டுச்சென்றதாகவும் கூறினார்.
அதன்பின்னர் அவ்வழியால் வந்தவர்களால் தான் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் பொலிஸாரை வரவழைத்துத் தன்னை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் கூறினர். இப்பெண்களைக் கைதுசெய்தபோது அவர்களது காரில் 31 பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் காணப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களால் சேகரிக்கப்பட்ட விந்துக்கள் வர்த்தகத்தில் வெற்றிகளைப் பெறவேண்டும் என்பதற்காக மதவேண்டுதல்களின் போது பயன்படுத்தப்படுகின்றன எனவும் நம்பப்படுகின்றது.
அத்துடன் இவை நாட்டிற்கு வெளியிலும் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இவை எவ்வாறு மதவேண்டுதல்களில் பயன்படுகின்றன என்பது தெரியவில்லையென்றும் இவற்றைச் செய்யும் சமூகங்களிற்கிடையில் சென்றாலும் செல்பவர்கள் திரும்பிவருவார்களா என்பது அறியாததால் ஆய்வாளர்களும் அங்கு செல்ல விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இவர்கள் இக்குற்றத்தினை மறுத்ததோடு தாங்கள் விபச்சாரிகள் என்று தெரிவித்தனர். இதுபோன்ற பல சம்பவங்கள் நாடெங்கும் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
நன்றி - தமிழ்அமெசிங்.கொம்
நன்றி - தமிழ்அமெசிங்.கொம்

