ஆண்களுக்கு உறக்கமின்மையால் செக்ஸ் குறைபாடு ஏற்படும்!!

தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் ஆண்களுக்கு செக்ஸ் குறைபாடு மற்றும் செக்சில் ஆர்வமின்மை ஆகியவை ஏற்படும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள 25 வயது இளைஞர்கள் சிலரிடம் சிகோகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் 10 மணி நேரம் தூங்க வைத்தும், பின்னர் 5 மணி நேரம் தூங்க வைத்தும் இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. 


சோதனையின் முடிவில், 10 மணி நேரம் தூங்கியபோது, செக்ஸ் ஆர்வத்தை தூண்டும் `டெஸ்டோடெரோன்' அதிக அளவில் சுரந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், 5 மணி நேரம் தூங்கிய சமயத்தில் அதன் அளவு குறைந்து விட்டது. ஒரே வயது உடையவர்களாக இருந்தாலும், குறைவான தூக்கம் உடையவருக்கும் நன்றாக தூங்குபவருக்கும் இடையே செக்ஸ் ஈடுபாட்டில் 15 வயது வித்தியாசம் இருப்பதும் தெரிய வந்தது.