இயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு
இது மாதவிடாய் சக்கரத்தின் நிகழ்வுகளுடன் தொடர்புடயது.குறிப்பாக:
* சூலிடல்(முட்டை வெளியேற்றம்),அடுத்த மாதவிடாய்க்கு 14 நாட்கள் முன் நடைபெறும்.
* கருப்பை கழுத்து திரவம் சூலிடும் போதும் அதன் பின்னும் மாற்றமடைதல்.
* முட்டை 12-24 மணித்தியாலங்களே வாழும்.
* விந்துகள் 24-72 மணிநேரம் வாழும்.
வெற்றிகரமானதா?
தற்போதய நவீன முறைகளுடன் ஒப்பிடும் போது,ஒரு நம்பகரமான முறை அல்ல.தோல்வி வீதம் 10-30%.
யார் பின்பற்றுகின்றனர்?
* மத/கலாச்சார நம்பிக்கைகள் உள்ள.
* நவீன முறைகளை பெறமுடியாத.
* ந்வீன முறைகளை பற்றிய பயம் கொண்ட.
சோடிகள் இம்முறையை பின்பற்றுவர்.
கேடுகள்:
மிக அதிகமான தோல்வி வீதம்.
இயற்கை முறைகள்
1. மாத முறை
கடைசி 12 சக்கரங்களை குறித்து வைத்து சக்கர காலத்தை கணக்கிடும்(உ+ம் 28 நாட்கள்/24 நாட்கள்).
முதலில் இரத்தம் வெளியேறும் நாள்,மாதவிடாயின் முதல் நாள் எனக் கருதப்படும்.சீரற்ற சக்கங்கள் இருப்பின்,இம்முறை உகந்ததல்ல.சீரான சக்கரங்கள் எனில் முதலில் சூழிடல் நாளை கணித்துக் கொள்க.
சூழிடல் நாள் = சக்கர காலம்-14
தகுந்த காலம்(சினைக்காலம்):கர்ப்பம் ஏற்பட மிகவும் வாய்ப்புள்ள காலம்.சூழிடலுக்கு 4 நாள் முதல் 4 நாள் பின்பும்.
சினைக்காலத்தில் உடலுறவை தவிர்க்க.
உ+ம்
28 நாள் சக்கரம் எனின்:
24 நாள் சக்கரம்.
35 நாள் சக்கரம்.
28 நாள் சக்கரத்தில்
வெற்றிகரமானதா?
இல்லை.சூலிடல் வேறுபடலாம்.
சீரற்ற மாதவிடாய்
மாதவிடாய் சக்கரத்தின் சீர் தன்மையை குழப்பும் காரணிகள்
கிட்டடியில் கிர்ப்பம்/கருச்சிதைவு.
மன உளைச்சல்.
நோய்.
மருந்து வகைகள்.
இந்நிலையில் இதை பயன்படுத்துவது உகந்ததல்ல.
2. அடிப்படை உடல் வெப்பநிலை
இது சூலிடலில் போது ஏற்படும் வெப்பநிலை ஏற்றத்தை சுட்டிக்காட்டும்.
* வெப்பமானி தேவை.
* வெப்பமானியை படுக்கை அருகில் வைக்க.
* எழுந்தவுடன் வெப்பநிலை (பல் துலக்கல், நீர் குடிக்க முன்).
* வெப்பமானியை 2 நிமிடம் வைத்திருக்க.
* வெப்பநிலையை சதுரதாளில் குறிக்க.
முட்டை வெளியிட்ட பின் வெப்பநிலை அதிகரிக்கும்.
முட்டை வெளியிட்ட போதே –கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கிறது.
இக்காலத்தில் உடலுறவை தவிக்க.
வெற்றிகரமானதா?
இல்லை- முட்டை வெளியேற்றம் மாறுபடக்கூடியது.
3. கர்ப்பப்பை-கழுத்து முறை
இது மாதவிடாய் சக்கரத்தின் போது,மாற்றங்களையும் நம்பி இருக்கும்.
வெற்றிகரமானதா?
இல்லை
4. பாலூட்டும் போது மாதவிடாய் நிறுத்தல் இது பாலூட்டலின் தங்கியுள்ளது.
பாலூட்டலின் போது, மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவது;
பாலூட்டும் போது மட்டும்.
மாதவிடாய் இல்லை எனின்.
குழந்தை 6 மாதத்துக்கு கீழ்.
வெற்றிகரமானதா?
இல்லை
5. அறிகுறி- வெப்ப முறை.
* இது மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட காட்டிகளை உள்ளடக்கியது.
* இது தனி முறையை விட சிறந்தது.
* எனினும் நம்பகரமான முறை.
பாரம்பரிய முறைகள்
1. ஆண்குறி வெளியேற்றம்.
சுக்கில பாய்பொருள் வெளியேறு முன் ஆண்குறி வெளியெடுக்கப்படும்.
வெற்றிகரமானதா?
இல்லை. இதன் போதும் கருக்கட்டல் நிகழலாம். இது சுக்கில பாய்பொருளுக்கு முன் வரும் திரவத்தில்.
2. தடுப்பு
3. சினைக்காலத்தில் உடலுறவு கொள்ளாதிருத்தல்.
குடும்பகட்டுப்பாட்டு முறை தேர்ந்தெடுக்க.
முதற் குழந்தையை பிற்படுத்த:
நம்பகரமானவை:குடும்ப கட்டுப்பாட்டு வில்லை.
பரிப்பு.
கொண்டம்.
நம்பகரமற்றவை:இயற்கை/பாரம்பரிய முறைகள்.
இடைவெளி ஏற்படுத்த:
நம்பகரமானவை:ஓமோன்கள்.
லூப்.
கொண்டம்.


