எமது நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பல நகைச்சுவை தொகுப்பை தொகுத்து வழங்கியுள்ளேன். மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது. அவர் தனது பெயர் பாலா என்று குறிப்பிட்டுள்ளார் அவருக்கு எமது நன்றிகள். பயன் உள்ள ஆங்கங்களை எமக்கு அனுப்பி உதவவும்.
கொசுவை ஒழிப்பது எப்படி?
1. முதலில் உயிரோடு ஒரு கொசுவை பிடிக்க வேண்டும்
2. அதை மெத்தையில மேல படுக்க வைக்கவேண்டும்
3. ரெண்டு ரெக்கையும் ரெண்டு கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்
4. அப்பரம் அதோட வயித்துல கிச்சுகிச்சு மூட்டு
அப்போ கொசு சிரிக்க வாய திறக்கும் அப்போ உடனே அதோட வாயில ஒரு ஸ்பூன் பாய்சனை ஊத்திவிடு….
கொசு செத்துப்போய்டும்
இதையெல்லாம் விட கொசுவை சாகடிக்க இன்னொரு ஈசியான வழி என்னான்னா………………
கொசுவோட காதுல நீ “ஐ லவ் யூ” சொன்னேன்னா அதுவே அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கும்
பொண்ணுங்க நட்பு...
பொண்ணு ஒருத்தி வீட்டுக்கு லேட்டா வந்தாள்!
அப்பா கேட்டார் "ஏன் லேட்??"னு
பொண்ணு"அப்பா தோழியோட வீட்டுக்கு போயிருந்தேன் அதான் லேட்"
அப்பா சந்தேகப்பட்டு அவளோட 10 தோழிகளுக்கும் போன் பண்ணினார்.
10 தோழிகளுக்கும் சொன்னாங்க"அவ இங்க வரவே இல்லை"ன்னு!
பசங்க நட்பு....
பையன் ஒருத்தன் ராத்திரி முழுதும் வீட்டுக்கு வராம காலையில வந்தான்!
அப்பா கேட்டார் "ராத்திரி எல்லாம் எங்கடா தங்குன??"
பையன்"அப்பா நண்பனோட வீட்டுக்கு போயிருந்தேன்..அங்கேயே தங்கிட்டேன் "
அப்பா சந்தேகப்பட்டு அவனோட 10 நண்பர்களுக்கும் போன் பண்ணினார்!
பத்து பேர்களில் எட்டு நண்பர்கள் சொன்னார்கள் "நேத்து ராத்திரி அவன் எங்க வீட்டுல தான் தங்குனான்னு"
இரண்டு நண்பர்கள் சொன்னார்கள் "இன்னும் உங்க பையன் இங்க தான் இருக்கான்"ன்னு
பசங்க பொண்ணுங்களை என்ன நினைக்கிறாங்க…
வாய்: யே நீ ரொம்ப அழகா இருக்க …
மெய்: சனியன் – வந்து வாச்சிருக்கு பாரு.
வாய்: நீ இல்லாம நான் இல்லை
மெய்: நீ இல்லைனா எவ்ளோ…. நிம்மதி.
வாய்: பொறுமையா கிளம்புமா அவசரம் இல்லை…
மெய்: திருவாரூர் தேர் கூட கிளம்பிடும் … இந்த சனியன் கிளம்புதா பார்….
வாய்: என்னை, அப்படியே தெரிஞ்சு வச்சிருக்க…
மெய்: லூசு… எப்படி தான் இப்படி மொக்க தனமா யோசிக்குதோ …கடவுளே.
வாய்: அழகான பொண்ணுங்க ரொம்ப திமிரா இருக்காங்கப்பா…
மெய்: இல்லாதத நெனச்சு பொறாம படாதா – அவ பாட்டுக்கு போகட்டும்.
வாய்: உன்னை ஆண்டவன் எனக்காகவே படைச்சிருக்கான்…
மெய்: அவன்(ஆண்டவன்) மட்டும் என் கையில சிக்கினான் …
வாய்: இன்னைக்கு சமையல் அருமை – சமைச்ச கைக்கு மோதிரம் போடணும்.
மெய்: அந்த கைய்ய வெட்டி கரியடுப்புல போட… சமைக்கிறேன்னு சொல்லி சித்திரவத பன்னுறாலே…
வாய்: நீ ஊருக்கு போய்ட்டீனா – நான் இங்க என்ன பண்ணுவேன்,
மெய்: அப்படி ஒரு நல்லநாள் என் வாழ்க்கையில வருமா ????
டெரர்: என்னதிதிது…. அப்படி மோட்டுவளைய பாத்து என்ன சிந்தனை???
வாய்: ஒண்ணுமில்லமா… சும்மா …
மெய்: உன்கிட்ட மாட்டின பிறகு, சிந்திக்குறதுனா என்னான்னு சிந்தனை பண்ணவேண்டி இருக்கு.
டெரர்: எதுக்கு எல்லாத்துக்கும் இப்படி லூசு மாதிரி சிரிக்கறீங்க
வாய்: ஹி ஹி ஹி … ஹி ஹி ஹி …
மெய்: உண்மைய சொன்னா மட்டும் புரிஞ்சுக்கவா போகுது …. ஐயோ ஐயோ
....................................................................................................................................................................
நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!




