நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகள்...!!




நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகள் மீது ராகினி தாக்கு - படங்களுடன், நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகைகளை தாக்கி பேசி உள்ளார் கன்னட நடிகை ராகினி.

கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராகினி. கன்னட நடிகைகள் நிதி சுப்பையா, ஆன்டிரிட்டா ராய் ஆகியோர் ஆண்டு காலண்டர் ஒன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தனர்.

இதையறிந்து கோபமடைந்த ராகினி கூறும் போது, "என்னை கூட காலண்டருக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுக்க கேட்டார்கள். ஆனால் மறுத்துவிட்டேன். ஆனால் சீனியர் நடிகைகள் நிதி சுப்பையா, ஆன்டிரிட்டா ராய் ஆகியோர் நீச்சல் உடையில் காலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளனர். இதை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த நடிகைகள் இருவரும் கர்நாடக நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பில் இருக்கும்போது அவர்கள் போஸ் கொடுத்தது தவறு. இதே பொறுப்பில் இருக்கும் மற்ற நடிகைகள் போஸ் கொடுக்க மறுத்திருக்கும்போது இவர்கள் மட்டும் எப்படி போஸ் தரலாம். ஏதாவது ஒரு மது விளம்பரத்துக்கு இப்படி போஸ் கொடுத்திருந்தால்கூட அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டேன்." என்றார்