ஆண்கள் மீதான ஆர்வம் குறைகிறது - மல்லிகா ஷெராவத்!!



ஆண்கள் மீதான ஆர்வம் குறைகிறது - மல்லிகா ஷெராவத், காதல் என்றாலே கசக்கிறது, ஆண்கள் மீதான ஆர்வமும் குறைகிறது. வரவர சாமியார் போல மாறி வருகிறேன் என்று மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சிம்புவின் ஒஸ்தியில் ஒரு குத்தாட்டம் போட்டு விட்டு போனார். தற்போது ஹாலிவுட் படங்களில் மட்டுமே மல்லிகா அதிக கவனம் செலுத்தி வருவதால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலேயே தங்கிவிட்டார். இப்போது 2 இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை வந்துள்ளார்.

மும்பை வந்த அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் அமெரிக்காவில் இருந்தாலும் மும்பையில் இருப்பது போன்றே உணர்கிறேன். அமெரிக்காவில் போய் செட்டில் ஆனதால் என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. மும்பை உலகம் என்னை புறக்கணித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஹாலிவுட், பாலிவுட் என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை, நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்து, யார் வந்து என்னை அணுகினாலும் அவர்கள் படத்தில் நடிப்பேன்.

சமீபத்தில் முத்தக்காட்சி தொடர்பாக இம்ரான் கூறிய கருத்திற்கு பதிலளித்த மல்லிகா, அதுபற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் ஆண்களுக்கு கொடுத்த முத்தத்தை விட, பாம்புக்கு கொடுத்த முத்தம் தான் அதிகம். ஹிஸ் படத்தில் நடித்த போது அது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது. எனக்கு அதுதான் பெஸ்ட் லவ்வராக இருந்தது என்றார்.

மேலும் இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. காதல் என்ற வார்த்தையை கேட்டாலே கசக்கிறது, வரவர சாமியார் போல மாறி வருகிறேன். ஆண்கள் மீதான ஆர்வத்தை விட என்னுடைய தொழிலான சினிமாவில் தான் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.