பழைய நம்பிக்கை 1 :
முதலிரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!
உண்மை :
முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. அதனால் அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவுக்கு விந்துவிடக்கூடாது.
பழைய நம்பிக்கை 2 :
உடல் உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ள குறை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!
உண்மை :
உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமனதோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமையான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண், பெண் இருவரும் சம அளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதுதான் பெண்களுக்கு இன்பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
பழைய நம்பிக்கை 3 :
பெண்கள் வயதாகிவிட்டதாலும், மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்களுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசியமில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது!
உண்மை :
60 முதல் 80 சதவீதம் ஆண்கள் இளமையில் மட்டுமே உடல் உறவு கொள்வதற்குக் காரணம் பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்காததுதான்! பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில், உடல் உறவு தேவையில்லை என பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு. வயதான காலத்திலும் வளமான உறவைப் பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
பழைய நம்பிக்கை 4 :
கணவர் தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!
உண்மை :
பரஸ்பரமான அன்பின் மிகுதியால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம்! ஆண்கள் தான் முதலில் அழைக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இருப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுகிறார்கள்.

