கர்ப்பகாலத்தில் அதிகமாக சத்துமாத்திரை உட்கொள்வது ஆபத்தானது!



கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிகமாக சத்துமாத்திரை உட்கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே மாத்திரைகளுக்கு பதிலாக காய்கறிகள் பழங்களை அதிகம் உண்ணவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனைக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாயான பெண்களுக்கு சத்தான உணவு அவசியம். நாளொன்று 2000 கலோரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜங்க் புட், பாஸ்ட் புட் உண்பதை தவிர்க்கவேண்டும். அனைத்து வகை சத்துக்கும் சரிவிகிதமாக கிடைக்கும் வகையிர் பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உணவில் சேர்க்கவேண்டும். குறைந்த கொழுப்பு சத்துமிக்க பால், வெண்ணெய் போன்றவைகளை உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.