ஆண்மை பெருக்கும் பாலியல் உணர்வை தூண்டும் மருந்துகள் மட்டுமன்றி, சில வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பாலியல் உணர்வை உண்டாக்கும் உணவுகள் யாவை
என்பது பற்றிய சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. பழைய காலத்தில், சோம்புக் செடி, துளசி, கேரட், பிஸ்தா பருப்புகள், டர்னிப், நதி நத்தைகள் போன்றவை காமத்தை தூண்டுவதாக கருதப்பட்டன.
பழங்கால கிரேக்கர்களின் காதல் தெய்வம் ஆஃப்ராடிடி. இந்த தேவதை சிட்டுக் குருவிகளை புனிதமாக கருதினாள். ஏனென்றால் அவற்றுக்கு அதிகமான காதல் உணர்வு இருக்கிறது என்ற கருத்தினால். அதனால் பல காதல் மருந்துகளில் சிட்டுக்குருவி சேர்க்கப்பட்டது. நீங்கள் நம்மூர் சிட்டுக்குருவி லேகியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
கோதுமை, அரிசி, உளுத்தம் பருப்பு, இவை ஆயுர்வேதத்தின் படி, சுக்ல தாதுவின் தரத்தை உயர்த்தும். இவற்றால் தயாரிக்கப்படும் இனிப்புகள் பாலுணர்வை ஊக்குவிக்கும்.
பாதாம் – பாதாம் போன்ற எல்லாவகை கொட்டைகளும், செக்ஸ் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். கிரேக்க இதிகாசத்தின் படி பில்லீஸ் என்ற அழகான இளவரசி, கல்யாணத்திற்கு சித்தமாக தனது காதலன் டெமோஃபோன் வரவுக்காக காத்திருந்தாள். அவன் வராமல் போகவே, அவள் தன்னை மாய்த்துக் கொண்டாள். பரிதாபப்பட்ட தேவர்கள் அவளை பாதாம் மரமாக மாற்றினார்கள். பச்சாத்தாபத்தோடு வந்த டெமோஃபோன் அந்த பாதாம் மரத்தை தழுவ, அது பூப்பூத்து கொட்டியது. அழியாத காதலுக்கு அடையாளமாக பாதாம் மரம் கருதப்படுகிறது. பாதாம் உள்ள விட்டமின் இ ஒரு செக்ஸ் விட்டமினாகும். இளமையை காக்கும். பாதாம் தவிர, பிஸ்தா, பாதாம், முந்திரி, வேர்க்கடலை பருப்புகளும் பாலுணர்வை மேம்படுத்தும்.
சாக்லேட்-ஆண்மை மற்றும் பெண்மை பெருக்கிகளின் இராஜா என்றே சாக்லேட்டை சொல்லலாம். வேட்கையை பெருக்கும் பாலுறவு கிளர்ச்சியூட்டும்.
வாசனைதிரவியங்கள்-ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் விந்து முந்துதலை தடுக்கும். இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். ஞாபக மிருக்கட்டும் – இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.
காய்கறிகள்-பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை. தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை காதல் ஆப்பிள் என்பார்கள்.
வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். ஆனியன் சூப் புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.
பழங்கள்-பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
அஸ்பராகஸ்-இது நல்ல சுவையுள்ள தோட்டக் கீரை. 19ம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸ் தேசத்தில் ஒரு பழக்கம் இருந்தது. கல்யாணத்திற்கு முந்திய கடைசி உணவில், மணமகன் இந்த கீரையை சூடாக மூன்று பிரிவு உணவுகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் சார்ந்த உணவுகள்-பால் அதுவும் எருமைப்பால், தயிர், மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
மாமிசங்கள், மீன்-மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.
வெற்றிலை-உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.
சில டிப்ஸ்
தினந்தோறும் இரவில் 1 கப் பாலில், சிறுதுண்டுகளாக்கப்பட்ட 4 பேரிச்சம்பழம் போட்டு காய்ச்சவும். குங்குமப்பூ சேர்த்து பருகவும்.
பாதாம் பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தா, சாரைப்பருப்பு, பூனைக்காலி விதைப்பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய் கல்கண்டு, அத்திப்பழம் – இவை ஒவ்வொன்றில் 100 கிராம் எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றை பொடித்து, அனைத்தையும் பசு நெய், குங்குமப்பூ சேர்த்து பிசையவும். ஒரு வாரம் வைத்திருந்து, பிறகு தினம் 10 கிராம் அளவில் காலையில் சாப்பிட்டு வரவும். பலமும், வீ£யமும் பெருகும்.

