மனம் விட்டு பேசுங்கள். ஒருவருக்கு ஒருவர் புரிந்துக்கொள்ளுங்கள்!!



கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் செக்ஸில் மாபெரும் மாற்றம் உண்டாகியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இந்திய மக்களின் வாழ்க்கைத் தரமும்,சூழ்நிலையும் மாறி வரவே, செக்ஸ் பற்றிய மக்களின் கண்ணோட்டமும் மாறி இருக்கிறது என்பதே உண்மை. படுக்கையறைக்குள் இருந்த செக்ஸ் பற்றிய விஷயங்கள் பத்திரிகைகள், சினிமா, இண்டர்நெட், டி.வி., வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி என இங்கெல்லாம் விவாதிக்கும் இடங்களாக ஆகிவிட்டன.
        
                        செக்ஸ் பற்றி விவாதிக்கவோ, பேசவோ தயங்கி பத்தாம்பசலியாக வாழ்ந்த ஆண்கள், பெண்கள் அனைவருமே, மெது மெதுவாக செக்ஸ் பற்றி அறிந்துக்கொள்ளவும், பிறருடன் விவாதங்களில் கலந்து கொள்ளவும், செக்ஸ் பற்றிய புதுப்புது விஷயங்களைத் தெரிந்துக்கொள்ளவும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். வாழ்ககைக்கு செக்ஸ் என்பது எவ்வளவு அவசியம் என்பதனை இப்போது அனைவருமே அறிந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் செக்ஸ் பற்றி அறிந்தவர்கள் கூட அதனை மேலோட்டமாகவே பார்க்கின்றனர். தன் சக பார்ட்னரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் நிறைய இந்திய ஆண்களுக்கு இல்லை என்பதும் உண்மை.

 முன்பெல்லாம் செக்ஸ் உறவு என்பது குழந்தை பெறுவதற்காக மட்டும்தான், வேறு எந்த சுகத்திற்காகவும் அல்ல என்று நினைப்புடன் பலர் வாழ்ந்திருக்கின்றனர். இன்னும் சொல்வதென்றால் செக்ஸ் இன்பம் என்பதே அர்ப்பமானது என நினைத்தவர்களும் உண்டு.

                       செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாத கால கட்டத்தில் வாழ்ந்த பல ஆண்களும், பென்களும் செக்ஸ் என்றால் என்ன என்பதனை முழுவதும் அறியாமலேயே கடைசிவரையில் தங்கள் வாழ்நாளை வீணாக்கிய கொடுமைதான் எங்கும் நடந்திருக்கிறது.

                        ஆனால் செக்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்ட இக்கால கட்டத்திலிம், பலர் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா?.

                        நிறைய இந்திய இளைஞர்கள் செக்ஸ் விஷயத்தில் தன் மனைவியை மதிப்பதே இல்லை. திருமணம் என்ற பந்தம், மனைவி தனக்கு வேலை பார்க்கத்தான், தான் விரும்பும் போது சுகம் தருவதற்காகத்தான் என்ற நினைப்புடனேயே ஆண்களும் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில இளைஞர்கள் 'இது வரையில் திருட்டுத்தனமாக உறவு கொண்டு வந்தோம், இனி அந்தத் திருட்டுத்தனம் தேவையில்லை' என்று திருமணத்தைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசுவதும் உண்டு.


ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காகத்தான் செக்ஸைப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எல்லாப் பெண்கள் மத்தியிலும் பரவலாக உண்டு.

                         திருமணம் முடிந்தவுடன் எல்லா ஆண்களுமே தினமும் இரண்டு, மூன்று தடவைகள் செக்ஸுக்கு அழைப்பர். திருமண மோகம் என்கிறோமே அதுதான் இது. தன் மனைவியைக் கவர வேண்டும் என்பதற்காக பல புத்துணர்வான நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அப்போது அந்த மனைவிக்கு செக்ஸ் பற்றி அவ்வளவாகத் தெரியாததால், கணவனிடமிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். பல நாட்களுக்கு, பல மாதங்களுக்குப் பிறகு இப்போது மனைவியானவள், செக்ஸ் பற்றி அறிந்து அதில் ஆர்வமாகும்போது, கணவனிடம் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆர்வம் இப்போது இல்லையே என கவலை கொள்கிறாள். பல தவறுகளுக்கும், மனப்பாதிப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக இத்தகைய செய்கையே அமைந்து விடுகிறது. ஆக கணவன்மார்களே உங்களின் செக்ஸ் ஆசையும், ஈடுபாடும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கட்டும். தங்கள் கணவனின் அணுகுமுறைகளால் பயந்து கொண்டு வாழும் குடும்பப் பெண்களும் பலர் இருக்கிறார்கள்.

                         முதல் இரவின்போது, எப்படி இருக்குமோ என்ற பய உணர்வுடன் மனைவியானவள் தயங்கித் தயங்கி அறைக்குள் செல்ல, அவளைத் தன் போகப் பொருளாகவே பார்க்கும் கணவன், அவளிடம் மென்மையான அணுகுமுறையைக் காட்டாமல் பலாத்காரம் பண்ணுவது போல் நடந்து கொள்வதால் நிறையப் பெண்கள் செக்ஸ் என்றாலே நடுங்கிப் போய் விடுகின்றனர். திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் தன் மனைவியைக் கற்பழிப்பது போன்றே செக்ஸில் ஈடுபட்டு வரும் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள்.


ஒன்றைப் பற்றி சிந்திக்கும்... என் ஏக்கங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது... அவர் இப்படி நடந்து கொள்ளும்போது என்னால் எப்படி செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியும்' இப்படி பரபரப்பான நகரப் பெண்மணி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

                           ஆனால், தன் மனைவியுடனான செக்ஸ் பிரச்னை பற்றி இன்னொரு ஆண் குறிப்பிடுகையில், "என் மனைவி எனக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதில் ரொம்பவே அக்கறை காட்டுவாள். தன்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டாள். இரவில் அவள் உடல் முழுவதும் மஜாஜ் எண்ணெய் வழியவும், முகத்திற்கு மாவு போன்று எதையோ அப்பிக் கொண்டு வருவாள். எனக்கு மூட் அவுட்டாகி விடும். என்னைக் கட்டி அணைப்பதோ, முத்தம் கொடுப்பதோ கிடையாது... இப்படி இருக்கையில் அவளிடம் எப்படி என்னால் நிம்மதியாக வாழ முடியும்"... என்க் கேட்கிறார்.

                           ஆக, இன்றைய இந்திய நாட்டு கணவன் மனைவியர் தங்களை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் மனம் விட்டுப் பேசாமல் இருப்பதே பலவித சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. மனம் விட்டு தங்களின் எதிர்பார்ப்பையும், ஏக்கங்களையும் ஒவ்வொருவரும் பேசினாலே போதும் தாம்பத்தியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அடுத்தவரின் சந்தோஷத்தை மதிக்கும் தன்மையும் அவசியம். அந்தத் தம்பதியரே இன்பமயமான தம்பதியாவார்கள். இவர்களையே நாம் சரியான ஜோடி என்கிறோம்.


தொடரும்...