செக்ஸ்சில் அதிக சந்தோசத்தை விரும்பும் இந்தியா பெண்கள்!!



தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக  இங்கிலாந்து பெண்கள்.கருத்துத் தெரிவித்துள்ள நிலையில் இந்தியப்பெண்களோ கம்பியூட்டரைவிட எங்களுக்கு ஒரிஜினல் சுகம் கிடைக்கக் கூடிய ஆதாம் ஏவாள் விளையாட்டுதான் ரொம்பவும் புடிக்கும் என்று சொல்லிவிட்டனர்.

ஆம்! இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர். அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது.

பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.


எங்கேயும், எப்போதும்

தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள்.
 அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும்,
 பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும்,
 புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும்
 மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இதைவிட ஓபனாக எப்படி தங்கள் ஆசையை பகிரங்கமாக சொல்ல முடியும்!!!!!.



ஏற்கனவே இந்தியாவிலுள்ள ஆண்கள்தான் ஆண்மை மிக்கவர்கள் என்று ஒரு சர்வே சொன்னது என்றால் இப்போது வந்திருக்கும் புதிய சர்வே இந்திய பெண்களெல்லாம் படுக்கையறை சுகத்துக்காக ஏங்குகின்றவர்களாக, அதுவும் புதுப்புது முறையில் அனுபவங்களைப் பெற ஆவல் உள்ளவர்களாக சர்வேக்கள் சொல்வதெல்லாம் புருடாக்களோ எனும் எண்ணம்தான் தோன்றுகிறது.

காரணம் இல்லாமலில்லை!. நமது இந்தியா இப்போது உலக நாடுகளுக்கு மிகப்பெரும் சந்தையாக மாறிவிட்டது. இது போன்ற புருடாக்களை வெளியிட்டு செக்ஸ் சம்பத்தப்பட்ட வகையராக்களை உற்பத்தி செய்து மார்க்கெட்டிங் பிடிப்பதற்கான சூழ்ச்சியே இது என்று தோன்றுகிறது.

அதே சமயம் சர்வேக்களெல்லம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதை அவர்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள்....!


 'செக்ஸ்ஸில் ''எக்ஸ்ட்ரா'' சந்தோஷம் வேண்டுமா ?      

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அவர்களுக்காக இதோ சில

மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி 'ஹார்டுவேர்' போல 'சாப்ட்வேரும்' அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதில்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது அதீத அவசியம்.

எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.




'வெரைட்டி'யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.

அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'ஆட்டத்தில்' இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.

அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு 'பிளான்' செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும்.

கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.





உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, 'இன்னிக்கு என்ன பன்னப் போறானோ' என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல 'பொசிஷன்' குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது.

அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.




செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும். முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

1 comments:

i want copy paste this matters.please help me.Migavum nalla vishayangal ellorykkum parava udavungal.

Reply