மாமியார் <=> மருமகள்

சம்பவம் ஒன்று-
அவர் புதிதாக திருமணமான இளைஞர். அலுவலக வேலை முடிந்து, இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புவார்.
படுக்கையறைக்குள் புகுந்து மனைவியிடம் ஆசையாக ஒரு பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தால் போதும், அம்மாவிடம் இருந்து அழைப்பு வரும், இங்கே வாடா... என்று!
அவரும் உடனே அம்மா அருகில் சென்று உட்கார்ந்து கொள்வார். தாயும், மகனும் பேசிக் கொண்டிருப்பார்கள். அம்மா அருகில் இருந்தே இரவு உணவையும் முடித்து விடுவார். இரவு 12மணிவாக்கில் அம்மா அவரிடம், காலையில் நீ வேளைக்கு போக வேண்டு அல்லவா போய் தூங்கு என்பார்.
அவர் அறைக்குள் வரும் போது கொட்டக் கொட்ட விழித்திருக்கும் மனைவி, என்னங்க ...! என்று பேசத் தொடங்கினால், “பேசாம படுத்து தூங்கு.. எனக்கு தூக்கம் வருகிறது..” என்று அவர் தூங்கிவிடுவார்.
“நாங்கள் இரவில் தாம்பத்தியத்தை சந்தோஷமாக அனுபவிக்க கூடாது என்ற எண்ணத்தில் திட்டமிட்டு என் மாமியார் தினமும் இப்படி நடந்து கொள்கிறார்” என்பது இங்கே பாதிக்கப்பட்ட மருமகளின் கண்ணீர் குற்றச்சாட்டு.
சம்பவம் இரண்டு-
கர்ப்பிணியாக இருந்த மருமகளுக்கு திடீரென்று “அபார்ஷன்” அகிவிட்டது உதிரப்போக்கால் அவள் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கணவனை தன் துணைக்கு அழைக்கிறாள். உடனே மாமியார் தலையிட்டு “ஆண் பிள்ளையை இதற்கெல்லாம துணைக்கு அழைப்பாய். நீ குளிக்காமல் வீட்டின் உள்ளே வந்து விடாதே” என்றார். அவள் வலியால் துடித்துக்கொண்டிருக்க இந்த மாமியாரோ, உன் அப்பா விலை குறைந்த “பெட்” வாங்கிக் கொடுத்து விட்டார். அதனால் ஏற்பட்ட உடல் சூட்டில் தான் உனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது என்று குற்றமும் சாட்டியிருக்கிறார்.
எனக்கு அபார்ஷன் ஆன அதே கால கட்டத்தில் என் நாத்தனாருக்கும் பிரசவம் நடந்து குழந்தை பெற்றெடுத்திருந்தார். நான் அந்த குழந்தையை பார்த்தால் கூட தீட்டு என்று என்னை ஒதுக்கினார்கள் என்று மனம் கலங்குகிறார், ஒரு மருமகள்.

சம்பவம் மூன்று-
புதுமணத் தம்பதிகள் வசிக்கும் அந்த வீட்டில் ஒரு படுக்கை அறை மட்டுமே. அதன் உள் மட்டுமே பாத்ரூம் இருக்கிறது. மாமியாருக்கு வயது அறுபதைத் தாண்டி விட்டது. இரவில் தூங்கும் நேரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை அவர் நிறுநீர் கழிக்கச் செல்வார். அதனால் புதுமணத் தம்பதிகளிடம், படுக்கையறை கதவைத் திறந்து போட்டு விட்டு தூங்குங்கள் என்று கூறிவிட்டார். எப்போது மாமியார் வந்து கதவை திறப்பாரோ என்ற பயத்தில் அவள் கணவரை அருகில் நெருங்க விடுவதில்லை. மாமியாரிடம் போய் “நீங்கள் படுகை அறையில் தாளிட்டுக் கொண்டு படுங்கள் நாங்கள் Hallல் படுத்துக் கொள்கிறோம்” என்று கூறிப்பார்த்தால் அவா் சம்மதிக்கவில்லை.
“நாங்கள் படுகையறையில் தான் கதவை திறந்து போட்டுக் கொண்டே தூங்க வேண்டும் என்கிறார் மாமியார்” என்று வெட்கமும் வேதனையும் கலக்க சொல்கிறார், ஒரு மருமகள்.
இப்படி இன்னும் பல சம்பவங்கள் தீராத இந்த மாமியார் - மருமகள் பிரச்சினையால் இப்போதும் பல குடும்பங்கள் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.
“மாமியார்களில் இரு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர், அவர்கள் மருமகளாக இருந்த போது மாமியார் கொடுமையை அனுபவித்தவர்கள். பழிக்கு பழிவாங்கும் எண்ணத்தில் தங்கள் மருமகளை கொடுமைப்படுத்துகிறார்கள். இன்னொரு வகையினரும் அவர்களாது மாமியாரால் கொடுமைகளை அனுபவித்தவர்கள் தான். அவர்கள் “நாம் அனுபவித்த கொடுமையை நமது மருமகள் அனுவவிக்க கூடாது என்ற எண்ணத்தில் மருமகளிடம் அன்பாக நடந்து கொள்கிறார்கள்.
பெண்கள் பல்வேறு பருவங்களை கடந்து வருகிறார்கள். அவர்கள் மாமியார் பருவத்தை நெருங்கும் போது ஒரளவுக்கு வயதாகி விடுகிறது. அப்போது “மகன் தன் கையை விட்டு போய்விடுவானோ.. தன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ” என்ற பயத்தோடு மருமகளை அணுகுகிறார்கள். இந்த பயத்தால் ஏற்படும் விளைவுகளே மாமியார் - மருமகள் பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது.
மகனை ஒரு தாய் பெற்றெடுத்தாலும் அவன் ஒரு தனி மனிதன். அவனுக்கென்று தனி விருப்பங்கள் குணாதியங்கள் இருக்கும். சோறூட்டி,சீராட்டி,படிக்க வைத்து அவனை வளர்ப்பதெல்லாம் ஒரு தாயின் கடமை.
“நான் இன்று உன்னை வளர்த்து ஆளாக்குகிறேன். பதிலுக்கு என் வயதான காலத்தில் நீ என்னை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தாய் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அது நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் திருமணமான நாளில் இருந்து, மகனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தாய்மார்கள் எண்ணக்கூடாது.

இன்றைய பல அம்மாக்கள் தங்கள் மகன்களை “எமோஷனல் பிளாக்மெயில்” எனப்படும் “அன்பு மிரட்டல்”
மூலம் அடிபணிய வைக்கிறார்கள்.
மகன் தன் மனைவியிடம் அன்பாக இருந்தாலே, தனது எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் வந்துவிட்டாதாக கருதி “ உன்னை எப்படி எல்லாமோ கஷ்ரப்பட்டு வளர்த்தேன்.... என்னை நீ இப்படி நடந்துகிறாயே” என்று கண்ணீர் விடுவார்கள்.
நிறைய வீடுகளில் மகனுக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தங்கள் வீட்டு வேலைக்காறிக்கு விடை கொடுத்து விடுகிறார்கள். மொத்த வேலையையும் மருமகள் தலையில் கட்டி விடுகிறார்கள்.
சமீபத்தில் என் நண்பரிடம் கவுன்சிலிங் பெற வந்த ஒரு இளம் பெண் இரவு 9மணியாகும் போது மாமனாரிடம்
போய் உங்களுக்கு தோசை உற்றட்டுமா? என்று கேட்பேன். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் அவர் அப்புறம் சொல்கிறேன் என்பார்.
அடுத்து மாமியாரிடம் போய் கேட்பேன். பக்கத்து வீட்டு பெண்களுடன் வம்பளர்ந்து கொண்டிருக்கும் அவர் நான் வீட்டிற்கு வரும்வரைக்கும் உனக்கு பொறுமையில்லையா? என்பார். அடுத்து நாத்தனார், கொழுந்தனார் ஒவ்வொருவரிடமும் போய் கேட்டு ஓடர் எடுக்க வேண்டும். அவர்கள் கேட்கிற நேரத்தில், விரும்புற விதத்தில் திருப்தியாக தோசை வார்த்துக் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் கொடுத்து விட்டு கணவரது வயிற்றையும் திருப்தி படுத்தி விட்டு, நான் சாப்பிட 11மணியாகும்.

அதன் பிறகு பாத்திரங்களை எல்லாம் சுத்தப்படுத்தி விட்டு 12மணிக்கு தூங்கப் போனால் கணவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருப்பார்.“ மாமியாரோ 5மணிக்கெல்லாம் எழுந்திரும்மா என்பார்” என்கிறாள். திருமணம் என்பது இன்றும் இளம் பெண்களுக்கு இத்தனை சுமைகளை தாங்கும் விஷயமாகத்தான் இருக்கிறது.
இந்த சூழலை புரிந்து கொண்டு அன்பு காட்டாத மாமியார்களால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுகிறார்கள்
மாமியார்கள் மகன் மீது ஆதிக்கம் செலுத்த முக்கியமான காரணம்..
எல்லா மாமியார்களும் முதலில் தாயான மறுநாளே தன்னை மறந்து விடுகிறார்கள். தனக்கு பிறந்த குழந்தைக்காகவே 24மணி நேரந்தையும் செலவிட்டு, அந்த குழந்தையே வாழ்க்கை என்றாகி விடுகிறார்கள். அவனை பள்ளியில் சோ்ந்த பின்பு அவர்களது பொறுப்பு மேலும் அதிகரித்து விடுகிறது.
காலை முதல் இரவு வரை விடாமல் நீச்சல், விளையாட்ட, பாட்டு, ஆட்டம் என்று அத்தனை வகுப்புக்களிலும் அவனை சோ்த்து விட்டு அதற்காகவே ஓடிக்கொண்டிருப்பார்கள்.
அந்த காலகட்டத்தில் தங்கள் உடலையும் தனிப்பட்ட உணர்வுகளையும் கூட அவா்கள் மறந்து விடுகிறார்கள். 50கிலோ எடையாக இருந்த தான் 100கிலோவாக மாறினாலும் கூட கவனிக்க மாட்டார்கள்..
இப்படி 24மணி நேரத்தையும் மகனுக்காகவே செலவிடும் அப்படிபட்ட தாய்மார்கள் ஒரு விதத்தில் அவனை சுகந்திரமாக வளர்க்காமல் தமது பாசத்தால் ஒரு அடிமை போல வளர்த்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை.
இப்படி வளர்த்த மகனுக்கு திருமணமாகும் போது, அவன் தன் கையை விட்டு போவது போலவும் இனி தனக்கு வேறு வேலையே இல்லாதது போலவும் வெறுமையை உணருகிறார்கள். எனக்கு தெரிந்தது எல்லாம் என் மகனை கவனித்துக் கொள்வது தானே... இனி நான் என்ன செய்வேன் என்று புலம்பத் தொடங்குகிறார்கள்.

அந்த புலரம்பலே மாமியார் - மருமகள் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைகிறது. அதனால்மகனுக்கு திருமணமானதும் தாய்மார்கள் தங்கள் மருமகளிடம் இதுவரை அவனை நல்லபடியாக வளர்த்து, செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து திருமணமும் செய்து வைத்துவிட்டேன். இனி நீங்கள் ஒருங்கினைந்து நல்லபடியாக வாழுங்கள். நீ அவனை நன்றாக கவனித்துக்கொள் ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் மாத்திரம் என்னிடம் வாருங்கள். என்று திருப்தியாக மகனை மருமகளுடன் வாழ அனுமதிக்க வேண்டும். தனக்கு விருப்பமான விடயங்களில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்கலாம். சிறிது காலத்தின் பின்பு பேரப்பிள்ளைகளுடன் மீண்டும் உங்கள் சந்தோஷம் நிச்சயம் அதிகரிக்கும்.
அம்மா தரும் பாசமும் மனைவி தரும் நேசமும் வேறு வேறு. அம்மாவின் இடத்தை மனைவியால் நிரப்ப முடியாது. அம்மா, அம்மா தான். அது போல் மனைவியின் இடத்தையும் அம்மாவால் நிரப்ப முடியாது. மனைவி மனைவி தான். இதை இருவரும் உணர்ந்து கொண்டு அந்தந்த பாசத்தையும் நேசத்தையும் அவரவர் இடத்தில் இருந்து வழங்கிக்கொண்டிருந்தால் அங்கே உரசிக் கொளளும் மாமியார் - மருமகள் பிரச்சினை வரவே வராது....!!
என்றும் இளமை உங்களுடன்........

4 comments
இதெல்லாம் எங்கே அவங்க படிக்கிறாங்கா? நாடகம்,நாடகமுன்னு நாட்களையும் சந்தோசத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Replyஎல்லார் வீட்லயும் இந்த பிரச்சனை இருக்க தான் செய்யுது,சிலர் குடும்ப மானத்துக்காக வெளிகாட்டிகிறது இல்ல.கல்யாணம் முடிச்சு மருமக எவ்வளவு அன்பா இருந்தாலும் எங்க தன்னோட மகன தன கிட்ட இருந்து பிரிசிருவாளோ,அவன் மாறிட்டானோ 'ன்னு அம்மாக்கள் நினைக்கிறது தான் எல்லாத்துக்கும் காரணம்.மகனுக்கு அம்மா மேல எப்பவும் பாசம் குறையாது.புதுசா வந்த பொண்ணு'ன்னு அவளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் குடுத்து பாத்துப்பாங்க அவ்வளவு தான்,அதுக்கு அம்மா மேல பாசம் குறைஞ்சதா அர்த்தம் இல்ல."இதே மாமியார் மருமகள் கிட்ட அன்பா நடந்துகிட்ட மகன் மனசுல அவங்க மதிப்பு இன்னும் உயரும்."மாறா மறுமகள வெறுத்து கரிச்சு கொட்டினா மகன் மனசுல நாளடைவில அம்மா மேல வெறுப்பு தான் வரும். மாமியார் ஒரு நிமிஷம் அவங்களக்கு கல்யாணம் முடிஞ்சதும் எப்டி இருந்தாங்க,அவங்க மாமியார் எப்டி'ன்னு யோசிச்சு பாக்கணும்.மாமியார்-மருமகள் 2 பெரும் விட்டு குடுத்து போன பிரச்சனையே வராது. நடுல மாட்டிக்கிட்டு அவஸ்தை படுறது எல்லாம் மகன்கள் தான்.மத்தளத்திற்கு 2 பக்கமும் இடி'ன்னு சொல்ற மாதிரி இவங்களுக்கும் 2 பக்கமும் இடி.
Reply;;)மிக அருமையான பதிவு,இன்றைய நடப்பை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்கள்;)]
Replyஉங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை
Replyஇதெல்லாம் ஒரு புற்ம் இருக்கட்டும் 100 திருமணங்கள் நடந்து அதில் 75 தம்பதிகள் மனைவியின் அன்பில் மதிமயங்கி திருமணமான சில மாதங்களிலேயே தன் கனவருடன் தனி குடித்தனம் சென்றுவிடுகிரார்கள் மீதமுள்ள 25 தம்பதிகள் வீட்டில் தான் இந்தக்கொடுமைகள்,இதுபோன்ற ஒருசில் காரணங்களை சொல்லி எத்தனை வயதான தாய் முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைகின்றார்கள் தெரியுமா உங்களுக்கு ,அது மாதிரியான கொடுமைகள் நமக்கு நடந்துவிடுமோ என்ற பயத்தில் தவித்துக்கொ