பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி - பகுதி 05


ஆண்களுடன் பழகுதல்:

நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஆண்களுடன் நட்பு கொள்ளுவதும், பேசுவதும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் முற்றிலும் நல்ல விசயமாகும். அதே நேரத்தில் ஆண்களுடன் உங்களுக்கு உள்ள நட்பின் முலம் உங்களுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம், என்னப் பெற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறீர்கள் என்பதை குறித்து தெரிந்திருப்பது முக்கியம். நீங்கள் ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதையும், உங்களுக்கு அவர்களிடமிருந்து என்ன வேண்டும் என்பதையும் ஒரு பேப்பரில் எழுதிக் கொள்ளுங்கள். பின்னால் நாம் பாலுணர்வு, அதன் விளைவுகள், நீங்கள் அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பவனவற்றைப் பற்றி பார்ப்போம்.

சுய கௌரவம் என்றால் என்ன?

உங்கள் மதிப்பு குறித்து நீங்கள் கொள்ளும் பெருமை உணர்வே சுய கௌரவம் எனப்படும். பருவமடையும் போது நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்வது சாதாரணமாக நடக்கக் கூடியது. இப்படி அடிக்கடி நடக்கும் காரணம், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் அனுபவித்து வரும் மாற்றங்கள்தான். ஆனால் இது எல்லோருக்கும் நேருகிறது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக கருதும் தருணங்களில் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் உங்கள் உணர்வுகளை பற்றி பேசலாம். இத்தருணங்களில் சந்தோசமளிக்கும் பொழுது போக்குகளில் ஈடுபடுவது நல்லது. இதன் மூலம் நீங்கள் புது விசயங்களை அறிந்து கொள்வதோடு, ஏதோ செய்து முடித்துள்ளோம் என்ற நல்லுணர்வும் ஏற்படும்.


உங்களைப் பற்றி நல்லவிதமாக உணருவது எப்பட்டி?

என் நலனில் அக்கறை கொண்டவர்களிடம் என் உணர்வுகளைப் பற்றி பேசும் போது நான் என்னைப் பற்றி நல்லவிதமாக உணருகிறேன். நீங்கள் மோசமாக உணரும் பட்சத்தில் இதை நீங்கள் செய்யத் தயங்காதீர்கள். உங்கள் உணர்ச்சிகளை மனதினுள்ளேயே அடக்கி வைக்காதீர்கள். அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது உங்களுக்கு நிச்சயம் உதவும். நீங்கள் சோகமாக உணர்ந்தாலோ, மன கிளர்ச்சியாலோ அல்லது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் அழுத்தப்பட்டதாக உணர்ந்தாலோ அதை அடக்கி வைக்காதீர்கள். அது நிலமையை மேலும் மோசமாக்கும். எனவே அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள். அது உங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து, இவ்வாறு ஏற்படும் குழப்பமடைந்த மனநிலையானது அசாதாரணமான ஒன்றல்ல என புரிந்து கொள்ள உதவும். சரி, இப்போது நீங்கள் உங்கள் உடம்பை பற்றியும், பருவமடையும் போது நிகழும் மாற்றங்களைப் பற்றியும் அறிவீர்கள். இப்போது நீங்கள் இதுவரை அறிந்து கொண்ட விசயங்களை சற்று பார்ப்போம்.

நீங்கள் உங்கள் உடம்பை பற்றியும் அது உள்ளும் புறமும் எவ்வாறு தோற்றமளிக்கிறதென்பதை பற்றியும் அறிந்துக் கொண்டீர்கள். பெண்ணின் உடல் எவ்வளவு அழகானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கிறதென்பதையும் தெரிந்து கொண்டோம். உடம்பின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் மாற்ற்ங்களைப் பற்றியும் மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றியும், இந்நேரத்தில் உங்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் எவ்வாறு உணருகிறோம் என்பதை பற்றியும் அறிந்து கொண்டோம்.

உங்களின் சந்தேகங்கள்:

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை எழுதிக் கொள்ளுங்கள். பருவமடைதலைப் பற்றியும், மாதவிடாயைப் பற்றியும், மனரீதியான மாற்றங்களைப் பற்றியும் யோசியுங்கள். நீங்கள் வேறு ஏதாவதைப் பற்றி அதிகமாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்களுக்கு சரியாக விளங்காதது ஏதும் உள்ளதா? நாம் எழும் சந்தேகங்களை விவாதிப்பதன் மூலம் மேலும் விசயங்களை தெளிவு படுத்திக் கொள்ள முடியும்.

இப்போது நாம் தெரிந்து கொண்ட விசயங்களை சோதித்துப் பார்ப்போம்:

கீழ்கண்ட கேள்விகளுக்கு சரி அல்லது தவறு என்று பதிலளிக்கவும்.

1. பருவமடையும் போது நீங்கள் சோகமாகவோ, குழப்பமடைந்தோ காணப்பட்டால், உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.

பதில்: தவறு. பருவமடையும் போது குழப்பமடைவது என்பது மிகவும் பொதுவானதும் இயல்பானதுமாகும். உண்மையில் இது நடக்க வேண்டிய ஒன்றே.

2. ஆண்கள் மட்டுமே பாலுணர்ச்சி கொண்டிருக்கலாம்.

பதில்: தவறு. பெண்கள் ஆண்கள் இருவருமே ஒரே போல் பாலுணர்ச்சி கொண்டிருக்கும் திறமை படைத்தவர்கள். பருவமடையும் போது இந்த உணர்ச்சிகள் எழுவது இயற்கையான ஒன்றாகும்.

3. உணர்ச்சிகளை அடக்கி வைப்பது என்பது அவற்றை எதிர் கொள்வதற்கான சிறந்த முறையல்ல.

பதில்: உண்மை. உணர்ச்சிகளை பற்றி பிறரிடம் பேசுவது நல்லது. உங்கள் சந்தேகங்களையும், உணர்ச்சி கொந்தளிப்புகளையும், குழப்பங்களையும் அடக்கி வைக்காதீர்கள்.

இதுவரை நாம் பார்த்த விசயங்களிலிருந்து நீங்கள் நிறைய தெரிந்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக வருவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளீர்கள். அறிவுதான் சக்தி வாய்ந்தது. இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


முற்றும்

இக்கட்டுரை சினேகிதி தளத்தில் ஏற்கனவே பதியப்பட்டது.