மசாஜ் என்பது..!!


கி.மு., 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மசாஜ் சிகிச்சை இன்று ஐரோப்பிய

நாடுகளில் நோய் தீர்க்கும் கலையாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. தசைகளில் இறுக்கத்தை நீக்க, தசை வலியைக் குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவும் கலையே மசாஜ் ஆகும்.

பியூட்டி மசாஜ் எனப்படும் அழகு மசாஜ், தெரபிக்மசாஜ் எனும் நோய் சிகிச்சை மசாஜ் என இரண்டு வகையான மசாஜ்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் இந்த இருவகையான மசாஜ்களுமே பிரபலமடைந்து வருகின்றன. அங்குள்ள ஆஸ்பத்திரிகளில், ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளும் ஒன்றாக மசாஜ் சிகிச்சை முறையும் உள்ளது.

கைகளைக் கொண்டு செய்யும் மசாஜ் கை மசாஜ், கருவிகளைப் பயன்படுத்தி செய்யும் அதிர்வு மசாஜ் ஆகிய இருவகை மசாஜ்களுமே ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.

தோல் நோய்கள், இதய நோய்கள், குடல் நோய்கள், ஈரல் வீக்க நோய், ஒவ்வாமை நோய் கொண்டோர் ஆகியோருக்கு ஐரோப்பிய நாடுகளில் மசாஜ் பரிந்துரை செய்யப்படுவதில்லை. மேலும் ஆபரேஷனுக்கு 6 மாதங்களுக்குப் பின்னரும் மசாஜ் தவிர்க்கப்படுகிறது.

மசாஜ் அவை பின்பற்றப்படும் நாடுகளைப் பொறுத்து, அக்குபிரஷர் மசாஜ், கியாட்கு மசாஜ், ரிப்லெக்ஸ் லோஜி மசாஜ், ரால்பின் மசாஜ், சுவீடிஸ் மசாஜ் என பலவகைகளில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் மசாஜ் என்பது, மென்மையாக தட்டுவது, விரைந்து தட்டுவது, தேய்த்துவிடுவது, அழுத்திவிடுவது, கைகளைத் தட்டுவது, உருட்டிவிடுவது போன்ற திறன்களுக்குள் அடங்குகிறது.

மசாஜ் செய்வதினால் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கூடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லேக்டிக் அமிலம் ஒரே இடத்தில் குவிவது தடுத்து நிறுத்தப்படுவதால் உடலில் ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு நீக்கப்படுகிறது.

மசாஜ் பொழுதுபோக்கு சார்ந்த விஷயம் அல்ல. மன- உடல் அமைதியையும், ஆரோக்கியத்தையும், அழகையும் சார்ந்தது. மசாஜ் ஆரோக்கியத்திற்கான முறைப்படுத்தப்பட்டக் கலை. இப்படிபட்ட கலையை சிலர் விபச்சாரத்துக்கும், பாலியல் வன்முறைக்கும் பாவிக்கிறார்கள்.




"மசாஜ் என்பது அடிப்படையில் இந்தியாவில் பிறந்த அற்புதமான மருத்துவக் கலை. இதன் மூலம் உடலுக்கு உற்சாகமும், ஆரோக்கியமும் கிடைக்கும். அடிப்படையான இந்த கலையில் வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் சில நல்ல விஷயங்களையும் சேர்த்து காலத்துக்கு தக்கபடி நவீனப் படுத்தி இருக்கிறோம். இன்று மனிதர்களிடம் மூளை உழைப்பு அதிகம். சாப்ட்வேர் மற்றும் நிர்வாகத் துறைகளில் பணிபுரிகிறவர்கள் உடல் உழைப்பின்றி, மூளை உழைப்பில் அதிக ஆர்வம் காட்டுவதால் எளிதாக மூளைச்சோர்வுக்கு உட்பட்டு வாழ்வியல் விஷயங்கள் எதிலும் ஆர்வ மற்றவர்களாகி விடுகிறார்கள். அதனால் தூக்கமின்மை, பசியின்மை, மனநெருக்கடி, ஆரோக்கிய குறைபாடு போன்றவைகள் அவர்களை தாக்குகிறது. அப்போது மனதும், உடலும் சோர்ந்து போகிறார்கள். முப்பது வருடங்கள் உழைக்கும் அளவிற்கு உடல் தகுதி கொண்டவர்கள் இன் றைய நவீன தொழில்நுட்ப வேலைகளுக்குள் சிக்கி பத்து ஆண்டுகள் கூட உற்சாகமாக உழைக்க முடியாத அளவிற்கு திறனற்றவர்களாகி விடுகிறார்கள். அவர்களை மீண்டும் புதுப் பித்து உற்சாகம் தருவதாக மசாஜ் உள்ளது. இதனை தரமான, முழு வசதிகொண்ட மையங்களில் மட்டுமே பெற வேண்டும்.''

"பொதுவாக எந்த துறை வேகமாக வளர்ந்து வந்தாலும் அதில் நிறையும் இருக்கும். குறையும் இருக்கும். இதை தவறாக பயன்படுத்துகிறவர்களை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு தவிர்த்துவிடவேண்டும்.
மசாஜ் ஆரோக்கியத்திற்கான முறைப்படுத்தப்பட்டக் கலை. அதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது''



1 comments:

Good post on massage.

Reply