
பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்
இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன. இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.

அந்தக் கால கட்டம் எது? பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது*

உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்
உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன. ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.
ஆண் குறி விறைத்தல்
ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது. ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.

ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.
இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.
இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.
ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.
ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.
இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.

பெண்ணுக்கு, எது மாதிரியான உச்சக்கட்டம் சிறந்தது...?
உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட இன்பம் என்பது ஒன்று தான். ஆனால் அது உடல் கூறின் அடிப்படையில் ஒரே விதமாகத்தான் உண்டாகின்றன. இதில் உறுப்புக்களின் பங்கேற்பு மட்டுமே முக்கியமல்ல. சுய இன்பத்தின் மூலம் உச்சக்கட்டத்தை அடைவது கூட இயற்கையான இன்பம் தான். நபருக்கு நபர் உச்சக்கட்டத்தின் தீவிர நிலை வேறு படலாமே தவிர, உச்ச நிலையில் மாற்றமில்லை என்பது தான் உண்மை.

பெண்களைப் பொறுத்த வரை உச்சக்கட்டம் அடையப் பல வழிகள் உண்டு. ஏதாவது பொருட்கள் மூலமோ, விரல்கள் மூலமோ கிளிடோரிசைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம். ஒரு ஆணின் துணையோடு உடலுறவில் ஈடுபட்டு அதன் மூலமும் உச்சக்கட்ட இன்பத்தை எட்ட முடியும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், கிளிடோரிஸ் தூண்டப்பட்டு பெறும் இன்பமே முழு திருப்தியை அளிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதே சமயம் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டாலும் அதிலும் கிளிடோரிஸ் தூண்டப்பட்டுத்தான் ஒரு பெண் செக்சில் முழு மன திருப்தியை அடைய முடிகிறது எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
