
டியர் அட்மின்
இத்தனை நாட்களாக என் நெருங்கிய தோழிகளிடம்கூட பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன். மிகப்பெரிய குழப்பத்தில் நான்
இருக்கிறேன். என்னைக் கண்டால் எனக்கே பிடிக்கவில்லை. தயவுசெய்து எனக்கொரு வழி சொல்லுங்கள். சென்னையின் மேல்தட்டு வர்க்கப்
பெண்மணிகளில் செல்வாக்கு வாய்ந்தவள் நான்.கணவருக்கு கல்விதான் தொழில். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரிகள், மெட்
ரிகுலேஷன் பள்ளிகள் எங்களுக்கு சொந்தமாக உண்டு. 15 வருடங்களுக்கு முன் ஒரு சிறிய நர்சரி பள்ளியில் தொடங்கியது, இன்று கல்வி
சாம்ராஜ்யமாக உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், என் கணவரின் கடுமையான, அயராத உழைப்பு. எங்களுடைய இன்ஜினியரிங் காலேஜ்
ஒன்றுக்கு பிரின்சிபலாக நான் இருக்கிறேன்.வெறும் பி.எஸ்.சி., பி.எட் மட்டுமே படித்த எனக்கு, கணவரின் செல்வாக்கினால் எம்.எஸ்.சி., எம்.ஃபில்
என பல பட்டங்கள் கிடைத்தன.45 வயதாகும் எனக்கு எங்கள் கல்லூரியில் லெக்சரராக வேலை பார்க்கிற காசிநாதன் என்பவருடன் பழக்கம். கடந்த
15 ஆண்டுகளாக நான், காசி மற்றும் கட்டிடங்கள் தவிர எல்லாம் மாறி விட்டன. நான் இல்லாத நேரத்திலும் கல்லூரியைப் பொறுப்பாக
பார்த்துக்கொள்ளக்கூடியவர் காசி. அப்படிப்பட்டவருடன் சமீபகாலமாக உணர்வுப்பூர்வமாக அதீத நெருக்கமாகி விட்டேன். தினமும் கல்லூரியில்
மணிக்கணக்காக பேசுவது,ஒருநாள் பார்க்காவிட்டால்கூட தவிப்பது என அவரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறேன்.என் கணவருக்கு பணம்தான்
முக்கியம். அதனால் வெகுவாக பாதிக்கப்பட்டவள் நான்தான். இதனாலேயே நான் வீட்டுக்குப் போனாலும் யாருடனும் பேசுவதில்லை. பேச பிடிக்கவும்
இல்லை. தனியறையில் பூட்டிக் கொண்டு இருக்கிறேன். யாராவது கதவைத் தட்டினால்கூட, பயங்கரமாக உணர்ச்சிவசப்படுகிறேன். ஆரம்பத்தில்
எனக்கு ஆறுதலாக இரவு முழுக்க உடனிருந்த என் கணவர், சமீபகாலமாக என்னைக் கண்டு கொள்வதில்லை. ‘அம்மா அப்படித்தான். தொந்தரவு

பண்ணாதீங்க’ என்று குழந்தைகளுக்கு சமாதானம் சொல்கிறார். என் கணவர் பயங்கர புத்திசாலி மட்டுமில்லை. வீடு தீப்பற்றி எரியும்
போது, அதில் சிகரெட் பற்ற வைக்கும் சினிமா கதாபாத்திரம் போல கூலான மனிதரும் கூட!சரி, என் பிரச்னைக்கு வருகிறேன். காசிநாதன்
சமீபகாலமாக என்னிடம் அத்துமீறி அதிகாரம் பண்ணுகிறார். தன்னைத் தவிர வேறு எந்த சீணுடன் பேசினாலும் சந்தேகப்பட்டு, கோபம்
தலைக்கேறி,அடிக்கிறார். ‘உன் யோக்யதையை ஊரறியச் செய்திடுவேன்’ என பிளாக்மெயில் பண்ணுகிறார். இதனால் 24 மணி நேரமும் மன
உளைச்சலில் இருக்கும் நான், குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகி விட்டேன். அது என் குடும்பத்தாருக்கும் தெரியும். காசிநாதன் என்னை எவ்வளவுதான்
மிரட்டினாலும் எனக்கு அவர் நல்லவர். அவரை என்னால் கடிந்து கொள்ள முடியவில்லை. எங்கள் உறவு, கல்லூரி வளாகத்தில் அரசல் புரசலாகத்
தெரிந்து விட்டது. காசி வீட்டில் தினம் புயல்தான். என் கணவர் ஒருநாள் நாசுக்காகக் கேட்டபோது, வழக்கம் போல கத்திக் கூச்சலிட்டு, அவர் வாயை
அடைத்து விட்டேன். நான் அப்படியெல்லாம் போகாத அப்பாவி என அவர் நம்புகிறார். என்னால் காசியை கண்டிப்பாகப் பிரிய முடியாது. அதே சமயம்
அவரது டார்ச்சர்களையும் சகித்துக் கொள்ள முடியவில்லை.அதற்காக கணவரையும் பிரியவும் மனமில்லை.இப்போது நான் என்ன செய்வது?
சொல்ல வேண்டிய அனைத்தையும் உங்களிடம் ஒன்றுவிடாமல் கொட்டிவிட்டேன். தயவுசெய்து எ(ன்)ங்கள் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு என்று
சொல்லுங்கள்.
-ரேவதி, சென்னை-5.

சகோதரி ரேவதிக்கு,
உணர்ச்சிப்பூர்வமான உங்கள் கடிதத்தை முழுமையாக வாசித்தேன். உணர்ச்சிவசப்படாமல், எனது பதிலையும் அதேபோல் படிப்பீர்கள் என
நம்புகிறேன்.தவறு உங்கள் மீது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் அதிலிருந்து மீண்டு திருந்தி வாழ நீங்கள் தயாராக இல்லை
என்பதை உங்கள் கடிதம் சொல்கிறது. இரு தனி மனிதர்களின் வளர்ச்சிக்கு சிறிதும் பயன்படாமல், அவர்களைப் புற்றுநோய் போல படிப்படியாக
அரித்து அழிக்கும் எந்தவொரு உறவுமே நோய்வாய்ப்பட்ட உறவுதான். வளர்ச்சி என நான் சொல்வது பொருளாதார வளர்ச்சியை
மட்டுமல்ல. தனிமனித அமைதி, தன்மானம், சுயகவுரவம், சுய மரியாதை, சமூக அந்தஸ்து என எல்லாவற்றையும்தான்.உங்களுடைய உறவு
இருவரையும் தினம் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல்,உங்களை போதைக்கு அடிமையாக்கி, உங்கள் சுயமரியாதையை சிதைத்து,
அந்த ஆணின் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தி, இன்னும் சில நாட்களில் பெரிய பூகம்பத்தையே கிளப்பவிருக்கிறது.
இது தெரிந்தும் இந்த உறவை நீங்கள் தொடர்ந்தால், அது கண்டிப்பாக நோய்வாய்ப்பட்ட உறவுதான்.நீங்கள் நினைப்பதைப் போல உங்கள்
கணவர் உங்களின் உணர்ச்சிகளுக்கோ, உங்களுக்கோ மரியாதை தராத, பணத்தைப் பிரதானமாகக் கருதுகிற மனிதர் அல்ல. அவர் தெளிவான மன
நிலையில் இருப்பதால்தான் நீங்கள் இன்று என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறீர்கள்.காசிநாதன் மாதிரியான சுபாவம் கொண்டவராக இருந்திருந்தால்,
அன்றாடம் வாழ்க்கையை ஓட்டுவதே சிக்கலாகி, இந்நேரம் விவாகரத்தில் முடிந்திருக்கும்.காதலரும் வேண்டும், கணவரும் வேண்டும்
என்றால் என்ன அர்த்தம்? முதலில் உங்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை வேண்டும். மன அமைதியுடன் யோசித்தால்தான் நல்ல
முடிவெடுக்க முடியும். அதற்கு நீங்கள் சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அது வரை ஆல்கஹால் குடிக்க வேண்டாம். மாத்
திரை உட்கொள்ள ஆரம்பித்த ஆறு வாரங்களில் கண்டிப்பாக உங்களிடம் நல்ல மாற்றம் தெரியும். மனம் தெளிவாகும். சொல்லப்போனால்

குடிப்பழக்கத்திலிருந்தும் மீண்டு விடுவீர்கள்.அதற்கு முன், கணவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். காசிநாதனை உங்களுடைய வேறு
கல்வி நிறுவனத்துக்கு மாற்றச் சொல்லுங்கள்.அப்படியே உங்கள் செல்போன் எண்ணையும் மாற்றுங்கள். முதல் கட்டமாக காசிநாதனுடன்
பேசுவதைத் துண்டியுங்கள். உங்களுக்கும் காசிநாதனுக்குமான உறவு, காலத்துக்கும் நீடிக்கிற புனித உறவில்லை என்பதை அவருக்கும் எடுத்துச்
சொல்லிப் புரிய வையுங்கள். கணவருக்கும் குழந்தைகளுக்கும் உங்கள் நேரத்தை ஒதுக்கப்பழகுங்கள். உங்கள் வளர்ச்சியை, உங்கள் கணவ
ரின் பிசினஸ் வளர்ச்சியை, பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணுங்கள்.அதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் இறங்
குங்கள்.நீங்கள் மனது வைத்தால், எல்லாம் சரியாகும். இரு குடும்பங்களுக்குள் நிகழ இருக்கும் பூகம்பத்தை தவிர்க்கும் சக்தி உங்களிடம்தான்
இருக்கிறது. உங்களால் அதை தடுக்கவும் முடியும். அதை உடனடியாக செய்யுங்கள். நல்லதொரு எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது
என்பதை மறக்காதீர்கள்.
