கவர்ச்சியான மார்புக்கு..!!


சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின்பேரில் டயட்டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவரது உடல் மீண்டும் ஏறிவிடும்.

இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.
இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?


* மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான ஷேப்பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.
* முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.

*...............................................................................*

பெண்களை எடுப்பான தோற்றத்தில் காண்பிப்பது அவர்களது மார்பகங்கள்தான். அதனால், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா பெண்களுமே தங்களது மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

சிலர், தங்களது மார்பகத்தை பெரியதாக காண்பிக்க விசேஷ பிராக்களை அணிகிறார்கள். போதுமான மார்பக வளர்ச்சி உள்ள சில பெண்கள், எப் டி.வி.யில் கேட் வாக் வரும் பல மாடல்களைப்போல் பிராவே அணிவதில்லை.

இப்படி பிரா அணிவதை தவிர்ப்பது ஆபத்தில் கொண்டுபோய்விடும் என்று எச்சரிக்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.

மார்பக வளர்ச்சி அதிகம் காணப்படும் டீன் ஏஜில் (13 முதல் 19 வயது வரை) மார்பகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது இந்த ÔபிராÕ தானாம். அந்த காலக்கட்டத்தில் பிரா அணிவதை தவிர்த்தால் மார்பகங்களில் வடிவம் மாறிவிடும் என்றும், மேலும் அது தொய்வடைந்து விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதனால் டீன் ஏஜ் பெண்களே... பிரா அணிவதை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடாதீர்கள். அதுவும், சரியான சைஸ் பிராவாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.