திருப்தியான உறவுக்கு 3 நிமிடம் போதுமாம்!!


மெல்பர்ன், மார்ச் 6: சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல; 3
நிமிடம் கூட அதற்கு போதுமானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான பாலியல் உறவு என்று பெரும்பாலான ஆண்கள்
நம்புகிறார்கள்.
அவ்வாறு நீடிக்காத உறவால் பலருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.
இந்தப் பின்னணியில் இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு முக்கியத்துவம்
வாய்ந்தது.
டாக்டர் எரிக் கோர்ட்டி என்ற அமெரிக்க நிபுணர் தலைமையிலான குழு இந்த ஆய்வை
நடத்தியது.
அமெரிக்கர்களும் கனடியர்களும் இதன் மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர். 7
முதல் 13 நிமிடம் வரை உறவு கொள்வதை "விரும்புவதாக'' அவர்கள் கூறினர்.
ஆனால், 3 முதல் 7 நிமிடம் வரையிலான உறவு "போதுமானது" என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்.

பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உறவு நீடிப்பதை விரும்புகின்றனர். ஆனால்,
பெண்கள் குறைவான நேரமே போதும் என்கின்றனர்.
இந்த அனுபவத்தை நேரத்தால் அளவிடுவது சரியல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
3 நிமிடத்துக்கு குறைவான உறவு "ரொம்ப குறைச்சல்'', 7 நிமிடத்துக்கு அதிகமான
உறவு "ரொம்ப ஓவர்" என்று மதிப்பிடப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எத்தனை
நிமிட உறவு சிறப்பானது என்பதை தீர்மானிக்க இருக்கும் உலகளாவிய ஆய்வின் முதல்
கட்டம் இது. மற்ற நாடுகளிலும் இது விரைவில் நடத்தப்பட இருக்கிறது.


........................................................

தாய்மைக்கான அறிகுறிகள்

திருமணமான தம்பதியர் உடனடியாக எதிர்பார்ப்பது காரையோ, பங்களாவையோ அல்ல; ஓர் அழகான குழந்தையைத்தான். ஒரு பெண் தாய்மை அடைந்துவிட்டாளா என்பதை சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அந்த அறிகுறிகளை இங்கே பார்ப்போம்...

1. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு `பீரியட்ஸ்' என்கிற மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் கர்ப்பத்திற்கான முதல் அறிகுறி. இதை வைத்து கர்ப்பம் என்று உறுதி செய்துவிட முடியாது. சில பெண்களுக்கு வேறு காரணங்களுக்காகவும் `பீரியட்ஸ்' தள்ளிப்போகலாம். அதுபோன்ற நேரங்களில் தகுந்த டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

2. முதன் முறையாக ஒரு பெண் கருத்தரிக்கும்போது மசக்கை அதிகமாக இருக்கும். முதல் மாதத்தில் `பீரியட்ஸ்' நின்று, இரண்டாவது மாதம் ஆரம்பித்ததுமே இந்த மசக்கைக்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனோ, முதல்வேளை சாப்பாடு சாப்பிட்ட பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு வாந்தி ஏற்படாமல் குமட்டல் மட்டும் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். சில வாரங்கள் வரையில் இந்த மசக்கை அறிகுறி இருக்கும். சிலருக்கு, மிகவும் அரிதாக 3 மாதங்களுக்கு மேலும்கூட இந்த அறிகுறி தென்படலாம்.

3. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும். வளரும் கருப்பையால் ஏற்படும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள் அடுக்கில் ஏற்படும் நெருக்கம் காரணமாக இப்படி தோன்றுகிறது. கருவுற்ற 2, 3ஆவது மாதங்களில் இந்த அறிகுறி ஏற்படும். அதன்பிறகு இந்த அறிகுறி தென்படாது.

4. உருவாகும் கர்ப்பம் பெண்ணின் மார்பகங்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மார்பகத்தின் அளவு அதிகரிக்கிறது. தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருப்பதுபோல் தோன்றும். வலியும் இருக்கும். இந்த அறிகுறி இரண்டாவது மாதத்தில் ஏற்பட ஆரம்பிக்கும். மார்பகக் காம்பினை அழுத்தினால் அடர் மஞ்சள் நிற சீம்பால் போன்ற திரவக் கசிவு சிறிது வெளிப்படும்.

5. கரு வளர வளர வயிறும் பெரிதாகிறது. 18ஆவது வாரத்தில் வயிற்றில் வளரும் கரு அசைவதை உணரலாம். 18 முதல் 20ஆவது வாரங்களில் கர்ப்பிணிகள் இந்த அறிகுறியை உணரலாம். இந்தக் காலக்கட்டத்தில் கருவின் நெளிவு மற்றும் அசைவு தெரியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால், அப்போதைய கரு அசைவு, வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் இருக்கிறதா? இல்லையா? - என்பதை தெரிவிப்பதாக அமைகிறது.