வாசகர் கேள்வி :- எனது பிறப்புறுப்பில் தோல்பகுதி முன்னும்பின்னும் செல்ல மறுக்கிறது... இதுபற்றி சிலரைக் கேட்டபோது circumcision எனப்படும் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்... ஆனால் இதுபற்றி வீட்டில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை... அது எப்படிப்பட்ட அறுவை சிகிச்சை... எங்கு செய்யலாம்... எவ்வளவு செலவாகும்... அறுவை சிகிச்சையும் ஓய்வுகாலமும் சேர்த்து மொத்தம் எத்தனை நாட்கள் ஆகும்...

காட்டப்பட்டுள்ள படத்தின் மூலம் சந்திர சிகிச்சை எத்தகையது என் அறியமுடியும்.
அட்மின் பதில் :-
வணக்கம். இது Phimosis எனப்படும் பிரச்சினை.
ஒரு ஆணுறுப்பை எடுத்துக் கொண்டால் அதன் முனைப் பகுதியான சிவந்த தடித்த பகுதி Glans penis எனப்படும். அதற்கு அடுத்ததாக உள்ள நீண்ட பகுதி தண்டு(Shaft)எனப்படும். ஒரு ஆணிலே Glans penis எனப்படும் தடித்த சிவந்த பகுதியை சூழ உள்ள தோல் பகுதி prepuce எனப்படும்.இந்த தோல் பின்னோக்கி இழுபடக் கூடியது.
அதாவது ஒரு ஆணுறுப்பு விரைப்படையும் போது ஆணுறுப்பில் உள்ள முன்
தோல்ப் பகுதி பின்னோக்கி இழுபடலாம்.
சில நபர்களிலே இது பின்னோக்கி இழுபட முடியாமல் போவதால் ஆணுறுப்பின் முனைப் பகுதி தோலினால்
மூடப்பட்டே காணப்படும். இதுவே Phimosis எனப்படுகிறது.
இதனால் அந்த ஆணுக்கு உடலுறவின் போது சரியான இன்பத்தைப் பெற முடியாமல் போகலாம். அதைத் தவிர வேறு எந்தவிதமான பாதிப்புக்களும் உடலுறவு சம்பந்தமாக ஏற்பட மாட்டாது.
நிறைய ஆண்கள் இப்படி ஒரு பிரச்சினை இருப்பதே தெரியாமல் சாதாரணமான இல்லற வாழ்க்கையை மேற்கொண்டு குழந்தைகளோடு வாழ்கிறார்கள்.
இப்படியான ஆண்களுக்கு சிறு நீர் தொற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் உள்ளது.

இந்தக் கேள்வியை கேட்ட நண்பருக்கு இந்தப் பிரச்சினை ஒரு உண்மையான மனத் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளது.இப்படியாவர்கள் ஒரு சத்திர சிகிச்சை நிபுணரை சந்தித்து சிறிய சத்திர சிகிச்சை மூலம் இந்தப் பிரச்சினையில் இருந்து முற்றாக விடுபடலாம்.
இந்த சத்திர சிகிச்சை Circumcision எனப்படும். அதாவது முஸ்லிம் மக்கள் செய்யும் சுன்னத்து எனப்படும் செயமுறையே Circumcision எனப்படும் சத்திர சிகிச்சையாகும்.
இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.
இதில் வெட்கபடவோ அல்லது வேதனைப்படவோ எதுவுமே இல்லை இது ஒரு சாதரண அறுவை சிகிச்சையே நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒருவருடன் மனம் விட்டு பேசுங்கள். தாங்கள் எந்த ஒரு சந்தர்பத்திலும் மனதை தளரவிடாது தைரியமாக இருங்கள். இந்த அறுவை சிகிச்சை நடைபெற்று பூரணகுணமடைய குறைந்தது10 தொடக்கம் 12 நாட்கள் வரை ஆகும்
தங்கள் இல்லறத்தை கருத்தில் கொண்டு இந்த அறுவை சிகிச்சையை உடனடியாக செய்வதே சிறந்தது. இதனால் வேறு பிரச்சினை ஏற்படுமே என்ற தேவையற்ற பயத்தை விடுத்து வாழ்கை இன்பமாய் அமைத்துக்கொள் வாழ்த்துக்கள்.
காட்டப்பட்டுள்ள படத்தின் மூலம் சந்திர சிகிச்சை எத்தகையது என் அறியமுடியும்.
5 comments
Thanks Admin good post.
Replyநீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கேள்வியை தங்களுக்கு அனுப்பியது அடியேன்தான்... பெயர் குறிப்பிட முடியவில்லை மன்னிக்கவும்... என்னுடைய கேள்விக்கு விரிவான பதில் எழுதியதற்கு நன்றி... நீங்கள் குறிப்பிட்டது போல இதனால் நான் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்... உங்கள் பதிலை படித்தபிறகு சற்று ஆறுதல் அடைந்தேன்... இப்போது உங்கள் பதிலில் மேலும் ஒரு சந்தேகம் உள்ளது... மேலே சொன்ன எனது phemosis பிரச்சனையால் என்னால் penetration செய்ய முடியாது இல்லையெனில் penetration செய்யும் பொது கடுமையான வலி ஏற்படும் என்றொரு பயம் உள்ளது... அது பற்றிய விவரம் சொன்னால் நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்... உங்களது பதிலை இந்தப் பின்னூட்டத்திற்கு கீழே இணைத்தாலே போதுமானது... அல்லது இந்தப் பதில் பிற்சேர்க்கையாக இணைத்துவிடுங்கள்...
Replyவணக்கம். நான் ஒரு உளவியல் நிபுணர். தாங்கள் முதல் கேட்டதற்கு சாகோதர வலை நண்பர் அதாவது ஒரு டாக்டர் உதவிலேயே பதில் அளிக்க முடிந்தது. இருப்பினும் தாங்கள் திரும்ப கேட்டுள்ளது என்னால் விரிவான பதில் வழங்கமுடியவில்லை. காரணம் நண்பரை இப்பொழுது தொடா;பு கொள்ள முடியவில்லை. அவருடைய வலையை பரிந்துரை செய்கின்றோன் http://thamilmaruththuvam.blogspot.com தங்கள் கேள்விக்கு நிச்சயம் பதிலும் சிறந்த ஆலோசனையும் வழங்கமுடியும் என நம்புகின்றேன். தங்கள் ஆதவிற்கு எனது நன்றிகள்
Replyநீங்கள் சொன்ன தளத்தை சென்று பார்த்தேன்... அந்த வலைப்பூவில் இரண்டு மாதத்திற்கு முன்னால் ஒரே ஒரு பதிவினை மட்டுமே எழுதியிருக்கிறார்... தவிர, அங்கே அனானியாக பின்னூட்டமிடும் ஆப்ஷன் இல்லை... மேலும் அவரது வலைப்பூவில் எங்கேயும் அவரது மெயில் ஐ.டி குறிப்பிடப்படவில்லை... எனவே அவரது மெயில் ஐ.டியை கொடுத்து உதவினால் உதவியாக இருக்கும்...
Replyyourdoubt@yahoo.com
Replyஇதுவே அவருடைய மின்னஞ்சல் முகவரி. நான் ஏற்கனவே உங்கள் கேள்வியை என் சார்பாக அவருக்கு அனுப்பியுள்ளேன் பதில் கிடைத்ததும். தங்களுக்கு தெரிய படுத்துகின்றேன்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு தனிப்பட்ட முறையில் அறிய தரவும். எனது மின்னஞ்சல் huckgirl@yahoo.com