ஆணுறுப்பின் அளவும் உடலுறவும்!!!


ஒரு ஆணுக்கு அறிவு தெரியத் தொடங்கும் பருவத்திலேயே அவன் ஆணுறுப்பு பற்றி பல்வேறு கருத்துக்களை தனக்குள்ளேயே உருவாக்கிக் கொள்கின்றான்.
தன்னுடைய ஆணுறுப்பு அவனுக்கு ஒரு முக்கிய விடயமாகிப் போகின்றது.

அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவு சம்பந்தமாக சந்தேகங்கள் எழத் தொடங்குகிறது. குறிப்பாக பெரியவர்களின் அல்லது தன் வயதினையுடைய இன்னொரு நண்பனின் ஆணுறுப்பைப் பார்க்க நேரும் போது அவன் தன்னுடைய உறுப்பின் அளவை மற்றவர்களின் அளவோடு ஒப்பிட முனைகின்றான்.

அவன் மனதிலே ஆணுறுப்பின் அளவே ஒருவரின் ஆண்மைத்தன்மையினை தீர்மானிக்கிறது என்ற பிழையான எண்ணம் உருவாகத் தொடங்குகிறது. தன் ஆணுறுப்பின் அளவு சிறியது என்ற தாழ்வு மனப் பான்மை கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவன் பாலியல் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

உண்மையில் ஆணுறுப்பின் அளவுக்கும் ஆண்மைத் தன்மைக்கும் எதாவதுதொடர்பு இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை.


விறைப்படைந்த ஆணுறுப்பானது அநேகமாக 15 தொடக்கம் 18CM நீளமுடையதாக இருக்கும்.
விரைப்படையாத நிலையில் சிறிதாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்படையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்தட்ட அடையும்.

அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பருமனிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே பருமனில் அதிகரிக்கும்.

ஆகவே தங்கள் ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்று யாரும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பெண்களின் பிறப்புறுப்பின் அளவினை (ஆழம்) எடுத்தோமானால் 8CM நீளம் உடையதாகவே இருக்கும்.

ஆணுறுப்பின் அளவானது இதை விடப் பெரிதாக இருந்தாலும் , உடலுறவின் போது பெண்ணுறுப்பின் விரிந்து கொடுக்கும் தனமையினால் அவர்களால் உறவில் ஈடு பட முடிகிறது.

அதாவது பெண்ணுறுப்பின் அளவு ஒரே அளவாகத்தான் இருக்கும் , ஆணுறுப்பு சிறிதென்றால் அதை முற்றுமுழுதாக பெண்ணுறுப்பு உள்வாங்கி உறவில் ஈடுபட உதவும், அதேவேளை ஆணுறுப்பு பெரிதென்றால் அதற்கேற்றவாறு பெண்ணுறுப்பு சற்று தளர்ந்து கொடுத்து உறவில் ஈடுபட உதவும்.இந்த இரு சந்தர்ப்பத்திலும் ஒரே அளவான இன்பமே கிடைக்கிறது.

ஆக ஆணுறுப்பு பெரிதோ சிறிதோ என்பதை வைத்தல்ல உறவில் ஈடு படும் போது இன்பம் கிடைக்கிறது.

.................................................................................................................

கேள்வி


வணக்கம் ஐயா. எனது ஆண் உறுப்பு மிகவும் சிறியதாக உள்ளதாக உணர்கிறேன். சில செக்ஸ் படங்கள் பார்த்த பின்தான் உண்மையில் எனது ஆணுறுப்பு மிகவும் சிறிதாக உள்ளதாக உணர்ந்தேன்.இப்போது எனது வீட்டிலேயே எனக்கு பொண்ணு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.எனக்கோ மிகவும் பயமாக உள்ளது. எனது ஆண் உறுப்பை பெரிதாக்க என்ன செய்யலாம் .தயவு செய்து விரைவாக பதில் சொல்லவும்.

பதில்

நல்லது நண்பரே இது பற்றி பலமுறை நான் விளக்கம் கூறியுள்ளேன் .
நீங்கள் மற்றவரின் ஆணுறுப்போடு உங்கள் ஆணுறுப்பை ஒப்பிடுவது மிகவும் தவறானதாகும்.

ஒவ்வொருவரின் உயரம் வேறு படுவது போலவே அவர்களின் ஆணுறுப்பின் அளவும் வேறுபடும்.

உயரம் குறைவானவர்கள் ஒன்றும் தாழ்வனவர்கள் அல்ல அதே போலத்தான் ஆணுறுப்பு சிறிதானவர்களும் ஆண்மை குறைந்தவர்கள் அல்ல.

நீங்கள் செக்ஸ் படங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம். அவை மற்றவர்களைக் கவர்வதற்காக கவர்ச்சியாவனவர்களை வைத்து எடுக்கப்படும் செயற்கையான படங்கள்.
அவற்றோடு உங்கள் நிஜத்தை ஒப்பிட வேண்டாம்.

ஆணுறுப்பின் அளவில் அல்ல ஆண்மை தங்கியுள்ளது.

ஆண்மைக்கு முக்கிய ஆணித்தரமே மன உறுதிதான் . தேவை இல்லாத யோசனைகளை மூலம் உங்கள் மன உறுதியைத் தொலைத்து
உங்கள் ஆண்மையை வீணாக்கி விடாதீர்கள்.
உங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து .சந்தோசமாக வாழுங்கள்.


Thanks for :- thamilmaruththuvam

1 comments:

sivalingam38@rediffmail.com

Reply