குண்டாக இருப்பவர்களால் ஏன் வேகமாக கருத்தரிக்க முடிவதில்லை என்று தெரியுமா?

சமீபத்திய ஆய்வு ஒன்றில், தம்பதியர்கள் இருவருமே மிகவும் குண்டாக இருந்தால், அவர்கள் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திப்பார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இப்போது அந்த ஆய்வு குறித்து காண்போம்.

ஒருவர் மிகவும் குண்டாகிவிட்டால், பல தீவிர பிரச்சனைகள சந்திக்க நேரிடும் என்பது அனைவருக்குமே தெரியும். உடல் பருமன் அதிகரித்தால், அதனால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும் என்பதும் தெரியும். ஆனால் அதே உடல் பருமன் ஒருவரது கருவளத்தைப் பாதிக்கும் என்பது தெரியுமா? உடல் பருமன் என்னும் நிலை, ஒருவரது உயரத்திற்கு ஏற்ற அளவில் எடை இல்லாமல், அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையாகும். உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், மூட்டு வலி, சோர்வு, உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல பிரச்சனைகளாலும் அவஸ்தைப்படுவார்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில், தம்பதியர்கள் இருவருமே மிகவும் குண்டாக இருந்தால், அவர்கள் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்திப்பார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இப்போது அந்த ஆய்வு குறித்து காண்போம்.

ஆய்வு 
சமீபத்தில் சுகாதார தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, குண்டான தம்பதியர்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 

59% குண்டான தம்பதிகள் இந்த ஆய்வில் ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டவர்களை விட, 59% குண்டான தம்பதிகள், குழந்தையைப் பெற்றெடுக்க பல காலம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டது. 
இரண்டு குழுக்கள் ஆராய்ச்சியாளர்கள் தம்பதியர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொண்டனர். 

அதில் முதல் குழுவில் 35-க்கும் அதிகமான பி.எம்.ஐ கொண்ட தம்பதிகளையும், இரண்டாவது குழுவில் 20-30 அளவிலான பி.எம்.ஐ கொண்ட தம்பதிகளையும் பிரித்து கொண்டனர். முதல் குழு இந்த ஆய்வின் முதல் குழுவில் உள்ள தம்பதிகள், கருத்தரிக்க பல காலம் ஆகியிருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணமாக உடலினுள் தேங்கிய அதிகப்படியான கொழுப்புக்கள் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

கொழுப்புக்கள் உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகமாக இருக்கும் போது, இனப்பெருக்க ஹார்மோன்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு, கருத்தரிப்பதில் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாகத் தான் குண்டான தம்பதிகளால் விரைவில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர்.