
திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வி்ல் ஏற்படும் மிக முக்கியமான சம்பவமென்று சொல்லலாம். புதிய எண்ணங்களுடன் திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்கும் இளம் பெண்கள் சில பிரச்சினைகளால் தங்கள் கனவுகளை சிதைத்துக்கொள்ளும் சந்தா்பங்களும் உண்டு.
திருமணத்துடன் தேனிலவை பற்றி கதைப்பது அவசியம். திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முதன் முதலாக உடலுறவு கொள்வதை தேனிலவு என குறிப்பிடலாம்.
இளம் ஜோடிக்களுக்கு வாழ்கை்கையில் கிடைத்த மிக இனிமையான சந்தா்ப்பத்தை பாழக்கிக் கொள்கின்றனா். ஆண்,பெண் இருவரின் உடலுறவு திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும்.

இதில் திருமணமாண பெண்கள் பயத்தின் காரணமாக அதற்கு முகம் கொடுக்க விரும்புவதில்லை. உடலுறவு கொள்ளுதல் மிக வேதனையானதென பெரும்பாலன பெண்கள் தவறாக புரிந்து கொள்ளுதலே அந்த தேவையற்ற பயத்திற்கு காரணமாகும்.
திருமணமாண தோழிகள் மற்றும் ஏனைய பெண்கள் கேலியாக குறிப்பிடும் சில விபரங்கள் மற்றும் தான் அறிந்த சில விபரங்கள் காரணமாக இந்த பயம் ஏற்படுகிறது.
விவாகமான இருவருக்கு இந்த உடலுறவு செயல்கள் சந்தோஷப்பட மாத்திரமன்றி வேதனைப்பட அல்ல என்பதை முதலில் சொல்வது அவசியமாகும்.எனவே இந்த செயல்களுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.. உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு தடவையும் தம்பதிகளின் அன்பு புரிந்து கொள்ள முடியாத பாசம் இது என்பனவே அதிகரிக்கிறது.. இதில் வேதனையடைய ஒன்றுமே இல்லை.

திருமணத்திற்கு தயாரகும் நீங்கள் உடலுறவெண்றால் பயங்கரமானஇ வேதனையான செயல் என் எண்ணுவதை நிறுத்தி விடுங்கள்.. சிலருக்கு இது சத்திர சிகிச்சை செய்வதற்கு சமமாகும்.
முதலில் சேரும் போது சில சிறிய கஷ்டம் ஏற்படலாம். அது வேதனையானதல்ல உடலுறவு கொள்ளு முன் பெண்ணை உச்சநிலைக்கு கொண்டுவருவது ஆணிண் கடமையாகும்.. இது பற்றி நான் ஏற்கவே பதிவிட்டுள்ளேன்.
முதல் சோ்க்கையில் ஏற்படும் வேதனைஇ இரண்டாம்இ மூன்றாம் தடவைகளில் ஏற்படுவதில்லை.. முதல் உறவில் கன்னி மென்சவ்வு கிழிவதனாலேயே சிறிய வலி ஏற்படுகிறது அத்துடன் சிறிது குருதியும் வெளிப்படுகிறது. இது எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை.. காரணம் இன்றைய பெண்கள் ஆண்களுக்கு சமமாக பண்களில் ஈடுபடுகின்றனா். இப்படி நடக்கவில்லை என்று வருந்துகின்ற பெண்களும் உண்டு கணவா் சந்தேகப்படுவாரே என்று எண்ணுகின்றனா்.. அத்துடன் அறியாமையால் இதை பெரிய பிரச்சினையாக எண்ணுகின்றனா் பொதுவாக முதலுறவில் 30மூ பெண்களுக்கு இரத்தம் வெளியேறுவதில்லை. இதனால் மனத்தில்லுள்ள குற்ற உணா்வினால் உடலுறவுஇ சந்தோஷம் கடினமாகிறது. எனவே அப்படியான எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையை இனிமையாக அனுபவியுங்கள்.

அனுபவமில்லதபடியால் முதல் தடவையில் பெண்கள் பயப்படுவாா்கள். பெண்கள் பொதுவாக எண்ணுவது ஆண்கள் மிருதுவானவா்கள் அல்ல என்பது தான். இது முற்றிலும் தவறான ஒன்று எந்த ஒரு ஆணும் உடலுறவு கொள்ளும் போது உணா்ச்சி மிகுதியால் ஒரு குழந்தையாகவே மாறுகிறான் என்பதே உண்மை. வாழ்கையின் சந்தேஷத்தைப் பற்றி சற்று சிந்தியுங்கள். சந்தேஷந்தை அனுபவியுங்கள்.. அப்போது எந்த ஒரு வேதனையும் தெரியாது.
சில வேளைகளில் மனதில் உள்ள பயம் காரணமாக பெண்கள் தன் உடலின் அடி வயிறுஇ யோனிப் பிரதேசம்இ தொடைகள் போன்றவற்றை இறுக்கிக் கொள்ளுவாா்கள்.
அப்போது தசைகள் இறுக்கமாகி உடலுறவு கொள்ளுதல் வேதனையை தரலாம். எனவே இளகிய மனத்துடன் இது சாதரண செயல் என நினைத்து உடலையும் மனத்தையும் இலகுவாகவும் இசைவாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
சில சமயங்களில் 34 - 40 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் யோனி சவ்வு கடினமாக இருக்கலாம். அப்படியான சந்தா்ப்பங்களில் சிறிது வேதனை இருக்கலாம். ஆனால் இது எல்ல பெண்களுக்கும் பொதுவானதல்ல.
அப்படி ஏற்பட்டால் வைத்திய ஆலோசனைகள் பெறலாம். திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடிக்கள் தங்களுக்கு உடலுறவு சம்பந்தமான அறிவு இல்லாது விட்டால்இ அது சம்பச்தமான புத்தகங்களை வாசித்து அறிந்து கொள்ளுதல் அவசியம்.
பல உறவின் பின்னரும் கணவருடன் சேரும் போது வலியாகவோஇ கஷ்ரமாகவோ இருந்தால் தயங்காது வைத்திய ஆலோசனை பெறுங்கள்.
இப்போது சந்தையில் அனேக கிறீம் வகைகள் உண்டு. உங்களுக்கு பொருந்தமானதை வைத்திய ஆலோசனையின் கீழ் பயன்படுத்தலாம்.. இவை மிகவும் பயனுள்ளவை கிறீமை தடவி 01 - 02 நிமிடங்களின் பின் உறவு கொண்டால் எந்த வலியும் தெரிவதில்லை.
சில வேளைகளில் உறவுக்கு பின் உறுப்புக்களில் எரிச்சல்இ அரிப்பு போன்றவை இருக்கலாம். இத்தன்மை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும். அந்த நிலை நீடித்தால் சிகிச்சை பெறுங்கள்.. பெரும்பாலும் இது ஒவ்வாமையாக இருக்கலாம்...
தேனிலவு அல்லது முதல் உறவு பயப்பட வேண்டிய ஒன்று அல்ல என்பது இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும். திருமணத்திற்கு முன் ஒரு வைத்தியரை சந்தித்து உங்கள் பிரச்சினைகள்இ கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள்.
எனவே வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடிக் கொள்ளும் சந்தா்ப்பத்தை அறியாமையின் காரணமாக இழந்து விட வேண்டாம்.
என்றும் இளமை உங்களுடன்....................................

1 comments:
நல்ல விளக்கம் நண்பரே.
Reply