பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி - பகுதி 02


அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்!
புகைப்படங்களில் வங்கிரகம் காணப்படுகிறது. பிடிக்காதவர்கள் ஆரம்பத்திலேயே தவிர்க்கவும். புகைப்படங்கள் தெளிவான விளக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளது. இந்த பதிவின் நோக்கம் இன்றைய ஆண் பெண் அந்தரங்க அறியாமையை போக்குவதற்கும். ஒரு மனத்தெளிவினை பெறுவதற்கு மட்டுமே... இது 5நாட்கள் தொடராக வெளிவரும். பிடிக்காதவர்கள் தயவுசெய்து இப்பதிவை தவிர்கவும். இளமையின் நோக்கம் மக்கள் மத்தியில் வக்கிரகத்தினை வளர்பது அல்ல... “அந்தரங்கம் தூய்மையானது” அதன் அடிப்படை மற்றும் உள்மனத்தின் கேள்வி, உங்கள் ஜயங்களை போக்குவற்கு மட்டுமே... தொடர்த்தும் உங்கள் அதரவினை நோக்கி.....
..........................................................................................................................................................................

நாம் அறிந்து கொண்டவை என்ன?

கீழ் கண்ட கேள்விகளுக்கு சரி அல்லது தவறு என்று பதிலளிக்கவும்.

1. நம்முடைய உடம்பை பற்றி தெரிந்துக் கொள்வது முக்கியமல்ல.

பதில்: தவறு. இது மிக முக்கியமானது. ஏனென்றால் இதன் மூலம் நாம் நம்முடைய உடல் நலத்தை கவனித்துக் கொள்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

2. நாம் நம்முடைய ஸ்தனங்களைப் பற்றி கூச்சப்பட வேண்டும். அவைகள் முக்கியமானவையல்ல.

பதில்: தவறு. நாம் நம்முடைய ஸ்தனங்களை குறித்து கூச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஸ்தனங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டி, ஊட்டச் சத்துக்களை அளிக்க உதவுகிறது. மேலும் அவை நம்மை பெண் என்று வரையறுக்க உதவுகின்றன.

3. நாம் சிறுநீரையும், மாதவிடாயையும் வெவ்வேறு துவாரங்களின் வழியாக வெளியேற்றுகிறோம்.

பதில்: சரி. சிறுநீர் புழையின் மூலம் நாம் சிறுநீர் கழிக்கிறோம். யோனித் துவாரம் மூலம் மாதவிடாய் வெளியேறுகிறது.

நன்று. நீங்கள் நிறைய தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அடுத்து என்ன?

சரி. இப்போது நாம் வெளிப்புறம் தெரியக்கூடிய பகுதிகளை பற்றி நிறைய தகவல்களை தெரிந்துக் கொண்டோம். நம் உடலின் உள்ளே நடக்கும் விசயங்களைப் பற்றி உங்களுக்கு என்னத் தெரியும்? உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போல பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது. எனவே நாம் இது எவ்வாறு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். இந்நிகழ்வு நடக்க உதவும் பல பகுதிகளை நாம் நம் உடலினுள் கொண்டுள்ளோம். எனவே நாம் இதைப் பற்றி பார்ப்போம். முதலில் நாம் கொடுக்கப்பட்டுள்ள பெண்களின் புனருற்பத்தி உறுப்புகளைப் பற்றிய படத்தை அவதானிப்போம்.

இந்தப் படம் பார்ப்பதற்கு புதுமையனதாகப் படுகிறது. ஏனென்றால் நாம் நம் உடம்பினுள் உள்ளதை ஒரு போதும் உண்மையில் பார்த்ததில்லை. ஆனால் நம் உடம்பினுள் அமைந்த்துள்ள இந்த உறுப்புகள் நாம் பின்னாளில் குழந்தைகளை சுமக்கவும், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கும் உதவுகின்றன. எனவே நாம் இந்த உடற் பகுதிகளை பற்றி அறிந்துக் கொள்வோம்.


சூலகங்கள்:

சூலகங்கள் இரண்டு உருளை கிழங்கு வடிவத்தில் காணப்படுகிறது. அவை கருப்பையின் இருப்பக்கங்களிலும் காணப்படும் பேலோபியன் குழாய்களுக்கு (Fallopian Tubes) கீழ் காணப்படுகிறது. இந்த சூலகங்கள் சிறப்பு முட்டைகளை உற்பத்திச் செய்கின்றன. இளம் பருவத்தை (adolescence) தாண்டிய உடன் உங்கள் சூலகங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முட்டையை வெளியேற்றுகிறது. இந்த முட்டையானது மாதவிடாய் நடப்பது மற்றும் குழந்தை கருத்தரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு விசயங்களையும் பற்றி சற்றுப் பின்னர் பார்ப்போம்.


பேலோபியன் குழாய்கள் (Fallopian Tubes):

சூலகத்தில் தொடங்கி கருவறையை இணைக்கும் இரண்டு குழாய்களும் பேலோபியன் குழாய்கள் (Fallopian Tubes) எனப்படுகின்றன. இது சூலகத்திலிருந்து கருப்பைக்கு முட்டையை கொண்டு சேர்க்க்கும் குழாய்கள் ஆகும். நாம் இந்த குழாய்களைப் பற்றி மேலும் விரிவாக பின்னர் பார்ப்போம்.

கருப்பை, செர்விக்ஸ் (Cervix) எனப்படும் இணைப்புக் குழாய் மற்றும் யோனி:


கருப்பையானது உங்கள் அடிவயிற்றில் தலைகீழாக வைக்கப்பட்டுள்ள பேரிக்காய் வடிவத்தில் இருக்கும் பை ஆகும். இதுதான் சிசு வளரும் இடம். யொனியை இணைக்கும் கருப்பையின் அடிப்பகுதி இணைப்புக் குழாய் அல்லது செர்விக்ஸ் (Cervix) எனப்ப்டும். இந்த செர்விக்ஸ் (Cervix) என்ற இணைப்புக் குழாயில் சிறு குழிவு பாதை போல தொடங்கி நம் உடம்பின் வெளியே ஒரு துவாரத்தில் முடிவடைவதே யோனியாகும்.

நீங்கள் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, இப்போது உங்களுக்கு உங்கள் உடம்பினுள் இருக்கும் முக்கியமான பகுதிகளைப் பற்றி ஒரு நல்ல புரிதல் இருக்கும். பெண்கள் மட்டுமே தங்கள் அடிவயிற்றினுள் இந்த முக்கிய பகுதிகளை கொண்டுள்ளனர் என்பதை எல்லோரும் அறிவார்களா?. இந்த உடற் பகுதிகள்தான் உங்கள் மாதவிடாய், சிசுவை வயிற்றில் சுமப்பது ஆகிய பெண்களுக்கே உரித்தான தனித்தன்மை உள்ள செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறதென்பதையும் சற்று எண்ணிப் பாருங்கள்.

கீழ் கண்ட வினாக்களுக்கு பதிலளிப்பதன் மூலம் நாம் கற்றுக் கொண்ட விசயங்களை சோதித்து பார்ப்போம்.

1. செர்விக்ஸ் (Cervix) எனப்படும் இணைப்புக் குழாயானாது --------------- ல் இலிருந்து ------------------ க்கு முட்டையை எடுத்துச் செல்லும் சாலை போன்றது.

விடை: சூலகம் ' ல் இருந்து கருபைக்கு.

2. உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறதென்பதை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் அது தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விசயமாகாது. (சரி அல்லது தவறு என பதிலளிக்கவும்.)

பதில்: தவறு. உள்ளே என்ன நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், நாம் பார்க்க முடியவில்லை என்றால் அது முக்கியமானதல்ல என்று அர்த்தமல்ல. உண்மையில் உங்கள் உடம்பினுள் என்ன நடக்கிறதென்பதை சோதித்து பார்க்க முடியாத நிலையே நீங்கள் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அந்த விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான காரணமாகிறது.

சந்தேகங்கள்:

இந்நிலையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை சற்று யோசித்து ஒரு பேப்பரில் எழுதி கொள்ளுங்கள். சரி, நாம் மேலே செல்வோம்.

நாம் ஏற்கனவே எப்படி நம்முடைய உடம்பு உள்ளும் புறமும் இருக்கின்றன என்பதை பற்றிய ஏராளமான தகவல்களை அறிந்து கொண்டோம். நீங்கள் புது வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஏராளமான படங்களை பார்த்திருக்கிறீர்கள். இது அதிகபடியான தகவல் என்று நான் உணருகிறேன். சோர்வடைய வேண்டாம். நீங்கள் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் இத்தகவல்களை திரும்ப மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். இந்த விசயங்களை எல்லாம் தெரிந்துக் கொள்ளுவதற்கு நேரம் தேவைப்படுகிறது. ஆனால், இதன் மூலம் நீங்கள் விழிப்புணர்வு அடைகிறீர்கள். நீங்கள் என்ன இங்கு கற்றுக் கொள்கிறீர்களோ அதில் விழிப்புணர்வு என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. எனவே நீங்கள் உண்மையிலேயே நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளீர்கள்.

பகுதி 2 - வளர்தலும் பருவமடைதலும் (Growing Up & Puberty):

நாம் தொடங்குவதற்கு முன்பாக நாம் ஒரு சிறு வேலையை செய்வோம். நானொ, நீங்களோ மற்றப் பெண்களோ வளர வளர நீங்கள் அவதானித்த உடலளவில் ஏற்பட்ட மாற்றங்களை பட்டியலிட வேண்டும் என விரும்புகிறேன். யோசித்து உங்கள் பட்டியலை உருவாக்குங்கள். நானும் ஒரு பட்டியலை உருவாக்குகிறேன்.

என்னுடைய பட்டியல்:

நான் உயரமாக வளர ஆரம்பித்தேன். முன்பிருந்த கொழு கொழுவென்ற சதைப் பற்றை கொஞ்சம் இழந்தேன். பருக்கள் வர ஆரம்பித்தன. மாதவிடாய் ஏற்பட்டது. என் பிறப்புறுப்புகளிலும், அக்குள்களிலும் முடி வளர ஆரம்பித்தது. என் ஸ்தனங்கள் பெரிதாகின. நான் பையன்களைப் பற்றி அதிகமாக யோசிக்க ஆரம்பித்தேன். பொறுங்கள். இது உடல் ரீதியான மாற்றமில்லைதான். ஆனால் இது நடந்தது.

நம்முடைய பட்டியல் ஒரே போல் இருக்கிறதா?

நம்முடைய பட்டியல்கள் ஒரே மாதிரியான விசயங்களை கொண்டிருந்தன என நான் நம்புகிறேன். என் பட்டியலிலுள்ள எல்லா மாற்றங்களும் பெண்கள் வளரும் போது அவர்களில் ஏற்படுகின்றவையே. நாம் இந்த சமயத்தில் நம்மிலும் மற்ற பெண்களிலும் ஏராளமான உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதை கவனிக்கிறோம். நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் (குறிப்பாக ஆண்கள்) நமக்கு உணர்ச்சிகள் ஏற்படத் துவங்குகிறது.

பருவமடைதல் - எல்லா மாற்றங்களும் நிகழும் சமயம்:

வளர்ச்சியில் மிகவும் கடினமான கட்டத்தில் ஒன்று பருவமடைதல் ஆகும். குழந்தை அல்லது சிறு பருபத்திலிருந்து முதிர் பருவத்திற்கு மாறும் நிகழ்ச்சிப் போக்கு பருவமடைதல் எனப்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் இப்பகுதியானது 'இளம்ப் பருவம்' (Adolescence) எனப்படுகிறது. 8 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்டக் காலத்தில் உங்கள் உடம்பின் வெளிப்புறத் தோற்றமானது மாறத் தொடங்குகிறது. உங்கள் உடம்பின் உள்ளேயும் பருவமடையும் போது சில மாற்றங்கள் நிகழ்கின்றன. நாம் இப்போது பருவமடைதலின் போது வெளியே ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பருவமடைதல் - நம் உடம்பின் வெளிபுறத்தில் ஏற்படும் மாற்றங்கள்:

பருவமடையும் சமயத்தில் நீங்கள் உயரமாக வளர தொடங்குவதையும், உங்கள் உடல் அமைப்பு மாறுவதையும் கவனிக்க முடியும். உங்கள் இடுப்பு சற்று விரிவடையும். மேலும் இடுப்பு பகுதியில் சதைப் பற்று சற்று அதிகமாகும். பதினாறு வயதடையும் போது சிறு வயதிற்குரிய புஷ்டியான சதைப் பற்று மறைந்து போகும். பருவமடையும் போது ஒவ்வொருவரும் தங்களுக்குரித்தான வேகத்தில் வளருகின்றனர். எனவே மற்றவர்களை பார்த்து கவலைப் பட தேவையில்லை. நீங்கள் உங்களுக்கு உரித்தான வேகத்தில் வளருவீர்கள்.

பருவமடைதல் - வெளிப்புறத்தில் ஏற்படும் சில எதிர்பாராத மாற்றங்கள்:

உயரமாக வளருவதை தவிர வேறு சில வெளிப்புற மாற்றங்கள் உடம்பில் ஏற்படும். இவை எதிர்பாராதவையாக இருக்கலாம். ஆனால் அவை இயற்கையாக நிகழக்கூடியவையே. முதலில் நீங்கள் உங்கள் ஸ்தனங்கள் வளர்ச்சியடைய தொடங்குவதை கவனிப்பீர்கள். உங்கள் காம்புகளின் கீழுள்ள பகுதி முகிழ்க்கத் தொடங்கும். சிறு ஸ்தனங்கள் (முலைகள்) உருவாகும். மேலும் காம்புகளை சுற்றியுள்ள வட்ட வடிவ ஏரியோலா (areola) என்றப் பகுதி விரிவடைந்து கரிய நிறத்தை பெற ஆரம்பிக்கும். உங்கள் (முலை) காம்புகள் வெளிநோக்கி நீள ஆரம்பிக்கும். இது எல்லோருக்கும் நடக்காமல் இருக்கலாம். எனவே பயப்பட வேண்டாம்.

பருவமடைதல் - மேலும் சில வெளிப்புற மாறுதல்கள்:

உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றியுள்ள தோல் மடிப்புகள் வளருவதையும், கருமையாவதையும் நீங்கள் கவனிக்கலாம். இவைகள் நடக்க வேண்டிய நிகழ்வே. மேலும் நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில் முடி வளருவதை பார்க்க முடியும். உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றியும், அக்குள்களிலும் கருமையான, சுருண்ட, திண்மையான முடி வளரத் தொடங்கும். இது முற்றிலும் இயல்பானதே. மேலும் வேறு வேறு அளவுகளில் முடி வளர்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு முடி உங்களுக்கு உள்ளதென்றோ இல்லையென்றோ நீங்கள் கூச்சப்பட வேண்டியதில்லை.


தொடரும்......