ஆண்மைக் குறைவும் சிகிச்சை முறைகளும்.


இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.


மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது.

தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்.

இரத்தக் கொதிப்பு, மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் சில மாத்திரைகள் ஆண்மைக் குறைவை உண்டாக்குவதால் அவற்றுக்கு பதிலாக வேறு வகையான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.

நிபுணத்துவம் பெற்ற பாலியல் மருத்துவர்கள் எழுதிய நல்ல நூல்களை வாங்கிப் படியுங்கள். இவை பாலுறவு பற்றி பல பயனுள்ள தகவல்களைத் தரும். அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தருகின்ற போலி மருத்துவர்களை அணுகுவது, அஞ்சல் மூலமாக அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கிச் சாப்பிடுவது, வேறுவித சிகிச்சைகள் ஆகியவை கூட அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



ஆண்மைக் குறைவும் சிகிச்சை முறைகளும்

ஆண்மைக் குறைவிற்கான காரணம் என்ன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைக்கான நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம் சிகிச்சைகளைப் பெறும்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

ஆண்மைக் குறைவை சரி செய்வதற்கு காற்றழுத்தச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மருந்துகள் மூலம் சில குறிப்பிட்ட காரணிகளுக்கான சிகிச்சை, எவ்விதத்திலும் சரிசெய்ய இயலாதவர்களுக்கு 'பினைல் புராஸ்தசிஸ்' என்ற சிகிச்சை ஆகியவை நடைமுறையில் உள்ளன.

இவை தவிர, பாலியல் ஆலோசனை, செக்ஸ் தெரபி, செக்ஸ் ஹிப்னோ தெரவி, ஹார்மோன் சிகிச்சைகள் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன.

தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொண்டால் ஆண்மைக் குறைவுப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

மனைவியின் ஒத்துழைப்பு

கணவனின் உறுப்பு எளிதில் விறைப்படையாத நிலை இருந்தால் அதற்காக கணவன் விரக்தியடையும் வகையில் பேசுவது மற்றும் நடந்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தப் பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்தால் அதற்கு வழிசெய்யலாம். இல்லாவிட்டால் அதிக ஒத்துழைப்பு, ஆறுதலான வார்த்தைகள், அன்பான நடவடிக்கைகள் மூலமாக இப்பிரச்சனையைக் கையாளலாம்.

பாலுறவு மூலமாக மட்டுமின்றி முன்விளையாட்டுகளில் கூட உச்ச இன்பத்தை அளிக்க முடியும் என்பதை கணவன் புரிந்துகொள்ள வழிசெய்வது நல்லது.