பாலியலின் மன ரீதியான கோளாறுகள் [psychosexual disorders]

பாலியல் புணர்ச்சி என்பது உயிரினங்களுக்கு இன்றியமையாதது. முக்கியமாக விலங்கினத்தில் ஒன்றான மனித இனத்துக்கு இது இனப்பெருக்கத்துக்கு உதவுவதுடன் உல்லாச உணர்ச்சிக்கும் உதவுகின்றது. ஒருவர் புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது நாலு கட்டங்களை கொண்டிருப்பர். அதாவது இச்சையேற்றம் , நிலையான உணர்ச்சி , உச்சகட்ட உணர்ச்சி , உணர்ச்சியில் இருந்து மீளுதல் என நான்கு கட்டங்கள் ஆகும். இதில் எந்த ஒரு கட்டத்திலும் கோளாறு ஏற்பட முடியும். இக்கோளாறுகள் சில உடலில் ஏற்படும் அல்லது பிறப்பில் இருந்து உள்ள பிரச்சனைகளாலும் ஏற்பட முடியும். இந்த கட்டுரை அவற்றை பற்றி ஆராயவில்லை, மாறாக மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிரச்சனைகளால் புணர்ச்சியில் ஏற்படும் கோளாறுகளை மட்டுமே ஆராய்கின்றது. [ மனோவியப்புணர்ச்சிக் கோளாறுகள]


இந்த மனோவியப்புணர்ச்சிக் கோளாறுகள் பற்றி முதலில் ஆராய்ந்து கருத்தை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்ட் [Sigmund Freud]. இவர் என்ன சொல்கிறார் என்றால் , பாலியப் புணர்ச்சி மனோவியம் பிறந்ததில் இருந்தே உருவாக்கம் பெற்று வளர்ச்சி அடைகின்றது என்றும். அந்த வளர்ச்சி ஐந்து கட்டங்கள் என்றும். ஒவ்வொரு கட்டத்திலும் புணர்ச்சி இன்பம் பெறும் வெவேறு உடலமைப்புகள் செயற்படுவதாகவும், இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரச்சனை அல்லது கோளாறு ஏற்படின் அந்த கட்டத்தில் புணர்ச்சி மனோவியம் நிலை கொள்வதால் [ fixation ] , இந்த மனோவியப்புணர்ச்சிக் கோளாறு ஏற்படுவதாக கூறுகின்றார்.

ஐந்து கட்டங்களாவன

Oral Stage – வாய் நிலை – இது பிறப்பில் இருந்து ஒருவயது வரையான காலப்பகுதி. இந்த காலப்பகுதியில் வாய் உணர்ச்சி உள்ள பகுதியாக செயற்படும். இந்த நிலையில் கோளாறு ஏற்பட்டு நிலை கொண்டால், அந்த குழந்தை எதிர்காலத்தில் புகைத்தல் , பென்சில் நுனியை சப்புதல் , சுவின்கம் சப்புதல் , வாய் வழிப் புணர்ச்சி , முத்தத்தில் ஈடுபாடு எனும் பழக்கங்களை கொண்டிருக்க கூடும். அத்துடன் மற்றவரை அன்பால் , அல்லது அழுது நடித்து உணர்ச்சிகள் மூலம் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்களாகவும் வளர வாய்ப்புள்ளதாக கூறுகின்றார்.
Anal stage – குத நிலை – இது ஒரு வயது தொடக்கம் மூன்று வயது வரையான காலப்பகுதி, இங்கு உணர்ச்சியுள்ள உடல் பகுதிகளாக குதம் அல்லது சிறுநீர்ப்பை [ மலம் மற்றும் சிறுநீர் வெளியேற்றும் பொறிமுறை ] செயற்படும். இந்த நிலையில் கோளாறு ஏற்படின் , குழந்தை வளர்ந்து அதி சுத்தம் , அதி ஒழுங்கு முறையுள்ளதாகவோ [Anal retentive ] அல்லது கவனயீனமற்ற சொல்வழி கேளாத [Anal Expulsive] பிள்ளையாகவோ இரு வேறு கோணங்களில் உருப்பெறலாம் என கூறுகின்றார்.
Phallic stage – லிங்க நிலை – இது மூன்றில் இருந்து ஆறு வயது வரையான காலப்பகுதி, இங்கு பாலியல் உறுப்புகள் உணர்ச்சியுள்ளவையாக செயற்படும். இந்த காலப்பகுதி  Oedipus complex என்ற எண்ணக்கருவில் விளக்குகின்றார். Oedipus என்பவர் பண்டைய கிரேக்க கதையில் தந்தையை கொலை செய்து விட்டு தாயை மண்ப்பவராவார்.                                                                                                

இந்த வயதிலே பெண் குழந்தையாயின் தந்தை மீதும் ஆண் குழந்தையாயின் தாய் மீதும் பாலியல் ஆசை ஏற்படும் என்றும் அத்துடன் ஆண் குழந்தையாயின் தந்தை மீதும், பெண் குழந்தையாயின் தாய் மீதும் பொறாமையினால் வெறுப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றார். இந்தக் கருத்து பயங்கரமானதாக தெரிகின்ற போதும் , பிற்காலத்தில் ஒரு பெண் பெரும்பாலும் தன் தந்தை போன்ற உருவமுள்ளவரை காதலிப்பதும் , ஒரு ஆண் தன் தாயைப் போல உருவம் உள்ளவரை காதலிப்பதும் பொதுவான அம்சமாக உள்ளதை அவதானித்திருப்பீர்கள்.
latency stage – அடைகாக்கும் நிலை – இது ஆறு வயதில் இருந்து சாமத்தியம் அடையும் வரை [ பெண்களுக்கு முதல் மாதவிடாய் , ஆண்களுக்கு முதல் விந்து வெளியேற்றம்] . இக்காலப்பகுதியில் பாலியல் உணர்ச்சி அற்று இருக்கும் காலம். இக்காலத்தில் கோளாறு ஏற்படின் பிற்காலத்தில் பாலிய புணர்ச்சி இன்பத்தை முழுதாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும் என கூறுகின்றார்.

genital stage – பாலுறுப்பு நிலை – இது சாமத்தியம் ஆன வயதில் இருந்து இறப்பு வரையான காலப்பகுதி. இந்தக் காலப்பகுதியில் பாலியல் புணர்ச்சி இன்பம் முதிர்ச்சியடைகின்றது. இக்காலப்பகுதியில் எதாவது கோளாறு ஏற்படின் , ஆணுறுப்பு வீரியமடையாமை , பெண்கள- பாலியல் இன்பம் பெற முடியாமை , பாலியல் இன்பம் அற்ற உறவுமுறை என பல கோளாறுகள் ஏற்படலாம் என கூறுகின்றார்.


இவரின் கோட்ப்பாடு பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் , பலரால் நிராகரிக்கப் பட்டும் உள்ளது. தற்போதைய காலத்தில் இந்த கோட்ப்பாடுகள் முழுதாக ஒத்துப்போகவோ , ஏற்றுக்கொள்ளவோ முடியாவிடினும் இவை நிராகரிக்க முடியாத கோட்ப்பாடுகள். இப்பொழுதும் பல்கலைகழகங்கள் , மனோவியல் நிபுணர்களால் பயிற்றுவிக்கப்டும் கோட்ப்பாடுகள் ஆகும்.

Sigmund Freud

மனோவியப் பாலியல் / புணர்ச்சிக் கோளாறுகள்

Lack of sexual desire – புணர்ச்சி கொள்ள விருப்பம் இல்லாமை

ஒருவருக்கு உடல் ரீதியாகவோ , பாலியல் உறுப்பிலோ எந்த வித கோளாறும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் , அவர் புணர்ச்சி கொள்ள விருப்பம் இல்லாமை இந்த கோளாறு ஆகும். இது பெண்களில் Frigidity என்றும் ஆண்களில் hyposexual desire disorder என்றும் கூறப்படும்.

Sexual aversion – புணர்ச்சியை தவிர்த்தல்

இது ஒருவருக்கு புணர்ச்சி கொள்ள விருப்பம் இருக்கும் , புணர்ச்சி கொள்ள ஆளுமை இருக்கும் ஆனால் சில மன சிக்கலினால் [பயம் அல்லது பதட்டம் ] புணர்ச்சியை தவிர்த்துக் கொள்வார்கள்.

Anhedonia – புணர்ச்சியில் இன்பம் இன்மை

ஒருவருக்கு புணர்ச்சி கொள்ள விருப்பம் இருக்கும் , புணர்ச்சி கொள்ள முடியும் ஆனால் புணர்ச்சி மூலம் குறிப்பிட்டளவு இன்பம் அடைய முடியாமல் இருக்கும்.

Erectile dysfunction – ஆணுறுப்பு விறைப்படைவதில் உள்ள கோளாறு

ஒரு ஆணுக்கு ஆணுறுப்பிலோ உடலிலோ எதுவித சம்பந்தப்பட்ட கோளாறும் இல்லாமல் சரியான விறைப்பை ஏற்படுத்த முடியாமல் இருக்கும்.

சிலருக்கு தூக்கத்திலோ அல்லது சுயஇன்பம் காணும் போதோ அல்லது வேறு நேரத்திலோ விறைப்பு ஏற்படும் ஆனால் புணர்ச்சி நேரத்தில் விறைப்பை ஏற்படுத்த முடியாமல் இருக்கும்.

Female sexual arousal disorder – புணர்ச்சியின் ஆரம்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோளாறு

சாதாரணாமாக புணர்ச்சியின் ஆரம்பத்தில் பெண்களின் உறுப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டு , சில சுரப்பிகள் சுரந்து புணர்ச்சிக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்த முடியும். சில மன அளவிலான கோளாறு இதனை ஏற்படுத்த முடியாமல் இந்த கோளாறு ஏற்படும்.

orgasmic dysfunction – அதிஉச்ச புணர்ச்சி இன்பத்தை அடைவதில் உள்ள கோளாறு

ஒருவர் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடிந்தும் , அதி உச்ச இன்பத்தை அடைவதில் ஏற்படும் கோளாறு ஆகும்.

7.premature ejaculation – புணர்ச்சி உச்சத்துக்கு முன்னரே விந்து வெளியேறல்

சிலருக்கு புணர்ச்சியின் பொது விந்து ஆரம்பத்திலேயே வெளியேறி விடும். அதிலும் சிலருக்கு பெண்ணுறுப்பில் ஆண்குறியை செலுத்த முன்னரே விந்து வெளியேற்றம் ஏற்பட்டு விடும்.

Non – organic vaginismus – பெண்ணுறுப்பு இறுக்கம்

சில பெண்களுக்கு உடலுறவின் போது பெண் உறுப்பு வாயில் இறுக்கம் அடைந்து ஆண்குறி செலுத்த கடினமாகும் அளவுக்கு அல்லது முற்றாக அடைபடும். இந்த நிலையில் உடலுறவு கொண்டால் பெண்களுக்கு இது வலியை கொடுக்கும்.

Non organic dyspareunia – உடலுறவின் போதான வலி

சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுறவின் போது தாங்க முடியாத வலி பாலியல் உறுப்பில் ஏற்படும். இது சில வேளைகளில் உடலுறுப்பில் உள்ள பிரச்சனையாலும் ஏற்படலாம். மருத்துவரை நாடி இது மனோவியாதியா உறுப்பில் உள்ள வியாதியா என அறிந்து சிகிச்சை பெற முடியும்.

Excessive sexual drive – அதி காம உணர்வு

இது பெண்களில் nymphomania எனவும் ஆண்களில் Satyriasis எனவும் அழைக்கப்படும். இது ஒருவருக்கு திடீர் என்று ஏற்படும் அதி கூடிய காம உணர்வு. ஒரு நாளைக்கு பல தடவை புணர்ச்சியில் ஈடுபட விருப்பம் கொள்ளுதல்.

Transexualism – பால்மாற்றம்

ஒருவருக்கு தான் பிறப்பில் ஆணாகவோ பெண்ணாகவோ ஏற்ற உடலுறுப்புடன் பிறந்தும் அதற்கு மாறான பாலாக மாற விரும்புதல். இவர்கள் சத்திரசிகிச்சை செய்து சில ஹோர்மோன் பாவிப்பதன் மூலம் மாறிக் கொள்ள முடியும். [ பிறப்பிலே இரு பாலருக்கும் இடையிலான உடலுறுப்புடன் பிறப்பவர்கள் – intersex இந்த வகுப்பில் அடங்க மாட்டார் ]. இது மன அளவிலான பிரச்சனை , உடலுறுப்பு பிரச்சனையல்ல.

Dual-role transvestism -எதிரபாலின உடை நாட்டம்

ஒருவர் தனது பாலுக்கு எதிரான பாலின உடைகளை அணிய விரும்புவர் ஆனால் நிரந்தரமாக எதிர்ப் பாலுக்கு மாற விரும்ப மாட்டார். இதற்கும் புணர்ச்சிக்கு தொடர்பில்லை.

sexual maturation disorder – பாலியல் முதிர்ச்சியில் கோளாறு

இது ஒருவருக்கு தனது பாலயோ அல்லது எந்த பாலுடன் புணர்ச்சி கொள்ள விருப்பம் என்பதையோ தீர்மானிக்க முடியாமல் ஏற்படும் மனஉளைச்சல் ஆகும்.

Egodystonic sexual orientation – தனது புணர்ச்சி விருப்பத்தை ஏற்றுக்கொள்ளாமை

ஒருவர் எதிர்பாலரையோ அல்லது சொந்த பாலரையோ புணர்ச்சி கொள்ள விருப்பம் கொள்ள முடியும். இது ஒரு வியாதியோ மனக்கோளாறோ அல்ல. ஆனால் தங்கள் விருப்பத்தை தங்களால் மனதளவில் ஏற்றுக்கொள்ளவோ விரும்பவோ சிக்கலாக இருப்பின் அது ஒரு மனக்கோளாறாக கருதப்படும்.

sexual relationship disorder – துணையை பேணுவதில் உள்ள கோளாறு

ஒருவர் தனக்கு விருப்பமான துணையுடன் ஒரு நல்ல உறவை வளர்க்கவோ அல்லது பேணவோ முடியாமல் இருப்பின் sexual relationship disorder என்று அழைக்கப்படும்.

Hysteria – hystrionic personality – ஹிஸ்டிரியா

ஒருவர் தனக்கு உள்ள சிறு பிரச்சனையை பெரிதாக காட்டியோ அல்லது இல்லாத பிரச்சனையை சித்தரித்தோ மற்றவரின் அன்பை அனுசரணையை பெற முயற்சிப்பதை இவ்வாறு அழைக்கப்படும்.

paraphillias – அசாதாரண காம நாட்டம்

ஒருவர் தனது புணர்ச்சி இன்பத்தை அடைவதற்கு அசாதாரணமான பொருளை அல்லது முறையை கையாள்வதன் மூலமே அடைய முடியுமாயின் அது அசாதாரண காம நாட்டம் எனப்படும். இதில் பல சட்டத்தின் படி குற்றமும் கூட.

ஒருவர் இந்த உலகத்தில் உள்ள எந்த ஒன்றின் மூலமுமோ எந்த வில்லங்கமான முறை மூலமுமோ இன்பம்காணுமளவுக்கு மனோவியாதி ஏற்படலாம். இன்கு சில பொதுவான கோளாறுகளை மட்டுமே எடுத்துக்காட்டப்படுகின்றது.

paraphillias – அசாதாரண காம நாட்டம்

Fetishistic transvestism – எதிர்பால் உடை அணிந்து புணர்தல்

சிலருக்கு எதிர் பால் உடை அணிந்து முக அலங்காரம் செய்து புணர்வதன் மூலமே புணர்ச்சி இன்பத்தை அடைய விருப்பமாக இருக்கும்.

Exibitionism – பாலுறுப்பை காட்சிப்படுத்தல்

சில ஆண்கள் தமது ஆணுறுப்பை பொது இடத்தில் அல்லது தெரியாத நபருக்கு வேணும் என்றே காட்டுவதன் மூலம் இன்பமடைவர், இந்த இன்ப உணர்ச்சி பெரும்பாலும் சுயஇன்பத்தில் முடியும்.

3.Voyeurism – ஒழித்திருந்து அந்தரங்கத்தை ரசித்தல்

சிலர் ஒழித்திருந்தோ அல்லது கள்ள கமெரா பொருத்தியோ மற்றவர் குளித்தல் , உடை மாற்றுதல் என அந்தரங்க செயல்பாடுகளை பார்த்து ரசித்து சுயஇன்பம் அடைவர்.

Peadophillia- சிறுவர் மீதான காம நாட்டம்

சிலர் சிறுவர் மீது புணர்ச்சி கொள்ளவே விரும்புவர். ஒரு வயதில் இருந்து சாமத்தியமான சிறுவர் வரை எந்த வயதினர் மீதும் நாட்டம் ஏற்படலாம்.

Masochism – நோகுதல் மூலம் புணர்ச்சி இன்பம் கானல்

சிலருக்கு தனது துணை தன்னை அடித்தோ , கொடுமைப் படுத்தியோ புணர்ச்சி செய்வதில் விருப்பமாக இருக்கும்.

Sadism – பிறரை நோகப் பண்ணி புணர்ச்சி இன்பம் கானல்

சிலருக்கு தன் துணையை கொடுமைப் படுத்தி நோக்கப்பண்ணுவதன் மூலம் புணர்ச்சி செய்து இன்பம் காணுவர்.

Frotteurism – சன நெரிசலில் காம இன்பம் கானல்

சிலர் பஸ் இலோ அல்லது சன நெரிசலான இடத்திலோ பிறர் மீது தேய்ப்பதன் மூலம் காம இன்பம் காண விரும்புதல்.

8.Agalmatophilia – உருவம் மீது புணர்தல்

சிலர் சிலைகள் , பொம்மைகள் மீது புணர்ச்சி செய்து இன்பம் காண விரும்புவர்.

9.Algolagnic- பாலுறுப்பில் வலி ஏற்படுத்தல்

சிலர் பாலுறுப்புகளை மட்டும் நுள்ளுதல் , குத்துதல் , கடித்தல் மூலம் வலியை ஏற்படுத்தி புணர்ச்சி செய்வர். [ sadism – உடல் வலி ,  Algolagnic பாலுறுப்பு வலி  ]

10.Attraction to disability- ஊனமுற்றோர் மீது காமம் கொள்ளல்

சிலருக்கு ஊனமுற்றோர் மீது மட்டுமே காம உணர்ச்சி தோன்றும்.

11.Biastophilia/Raptophilia – பாலியல் வன்முறை மூலம் இன்பம் கானல்

சிலருக்கு பாலியல் வன்முறை செய்வதன் மூலம்மட்டுமே புணர்ச்சி செய்ய  விருப்பமாக இருக்கும். சிலர் இதற்க்காக நாடகம் போல rape செய்து இன்பம் பெறுவார்.

12.Fecophilia – மலம் கலந்த காமம்

சிலருக்கு மலத்தை உடலில் பூசியோ உட்க்கொண்டோ புணர்ச்சி செய்ய விரும்புவர்.

13.Eproctophilia- குசு மூலம் காமம்

சிலருக்கு குசு மணம் மூலமே காம உணர்ச்சியை தூண்டி புணர்ச்சி கொள்ள முடியும்.

14.Erotic asphyxiation – சாவின் எல்லையில் புணர்ச்சி

சிலருக்கு தன்னையோ மற்றவரையோ திருகி அல்லது வேறு முறைகளில் மூச்சடக்கி சாவின் எல்லைக்கு செல்ல செய்து புணர்ச்சி செய்து இன்பம் காணுவர் .

15.Gerontophilia- வயோதிபர் மீது காமம்

சிலருக்கு மிகவும் வயது போன நபர் மீது புணர்ச்சி கொள்வதன் மூலமே இன்பம் காண விரும்புவர்.

16.Hybristophilia – கெட்டவர் மீது காமம்

சிலருக்கு பயங்கர குற்றவாளிகள் மீது மட்டுமே காம உணர்ச்சி ஏற்படும்

17.Necrophilia – சடலம் மீது புணர்ச்சி

சிலருக்கு இறந்த உடல்கள் மீது புணர்ச்சி கொள்ள விருப்பம் ஏற்படும் .

18.Omorashi – சலம் மூலம் காமம்

சிலருக்கு தன் மீது மற்றவரோ , மற்றவர் மீதோ சலம் கழிப்பதன் மூலமே புணர்ச்சி கொள்ள விரும்புவர் .

19.Partialism- அசாதாரண உடலுறுப்பில் புணர்ச்சி

சிலருக்கு பாலியல் உறுப்பு தவிர்ந்த பிற உறுப்புகள் [ கண் , காது , மூக்கு , பாதம் , அக்கிள் ] மீது அதீத காமம் கொள்ள விருப்பம்.

20.Pictophilia – நீலப் படம் மூலம் காமம்

சிலருக்கு நேரடியாக உறவு கொள்வதை விட படம் பார்த்து சுய இன்பம் காணுவதே இன்பம் தரும் .

Somnophilia – நினைவற்றோர் மீது புணர்தல்

சிலருக்கு நித்திரையில் இருப்பவர் அல்லது நினைவின்றி இருப்பவர் மீது புணர்ச்சி கொள்ளவே நாட்டம் .

22.Stigmatophilia – உடல் அலங்காரமும் காமமும்

சிலருக்கு டாட்டூ , தோடுகள் அதிகம் கொண்டவர் மீது மட்டுமே காம உணர்ச்சி ஏற்படும்.

23.telephonicophilia- தொலைபேசிக்காமம்

சிலருக்கு நேரடியாக புணர்ச்சி கொள்வதை விட தொலைபேசியில் காமம் பேசி சுய இன்பம் அடைவதே விருப்பம்.

sexual activity with animals,- விலங்குடன் புணர்தல்

சிலருக்கு ஆடு , மாடு , குதிரை , நாய் என்பன மீது புணர்ச்சி கொள்ள விருப்பம் ஏற்படும்.

Fetischism – உயிரற்ற பொருளில் காமம்

சிலருக்கு செருப்பு , உள்ளாடை , பெண்கள் பாவிக்கும் பொருள்கள் மீது காம உணர்ச்சி ஏற்பட்டு , அவற்றை கொண்டு சுயஇன்பம் காண முயல்வர் .



இதனை விட சிலருக்கு சில ஆடை அணிந்தால் , நீள முடி இருந்தால் , சில தோல் நிறம் இருந்தால் , முகப்பரு இருந்தால் , நெட்டையாக இருந்தால் , கெட்டிக்காரராக இருந்தால் என சில குறிப்பிட்ட விடயத்துக்கு மட்டுமே காம உணர்ச்சி பெற முடியுமாயின் அவர்கள் மனோவியாதி கொண்டவர்கள். [இங்கு மட்டுமே என்ற சொல் முக்கியம். ]

இப்படி பலரும் பாலியல் மனோவியாதியானால் பாதிக்கப்பட்டு தங்களுக்குள்ளேயே அதை மறைத்து மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் குற்றச் செயலிலும் ஈடுபட செய்யும். எனவே இப்படி ஏதாவது வியாதி இருப்பின் , மருத்துவரை நாடுவது சிறந்தது.

மருத்துவர் இந்த வியாதியை இரகசியமாக வைத்திருப்பர், போலீசுக்கு கூட சொல்ல மாட்டார்கள்.

அவர்கள் சில சோதனைகள் செய்து இது உடல் வியாதியா மனோவியாதியா என அறிந்து தகுந்த சிகிச்சை அளிப்பர்.

மனோவியாதிக்கான சிகிச்சைகள்

மருந்துகள்
மனோவியல் ஆலோசனைகள்
புணர்ச்சி மருத்துவம்
CBT
என பல வகை உண்டு. மருத்துவரை நாடுவதன் மூலம் நிச்சயமாக உதவியை பெற முடியும்.

[சுய இன்பம் காணுதல் , நீலப் படம் பார்த்தல் என்பன மனநோய் அல்ல. இவை நேரடி உடலுறவை விட அதிக இன்பம் ஆகும் பொழுதே மனநோய் ஆகின்றது. ]